Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் சுவையான மாலை நேர உணவுகள் கிடைக்கும் இடங்கள்

இந்தியாவில் சுவையான மாலை நேர உணவுகள் கிடைக்கும் இடங்கள்

அலுவலகமோ, கல்லூரியோ முடிந்த பிறகு நண்பர்களுடன் சென்று ஜாலியாக அரட்டையடித்தபடி ஏதாவது சுவையாக சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் இன்றைய நிலைமை முற்றிலும் வேறு. போண்டா, பஜ்ஜி என்பதை தாண்டி விதவிதமான மாலைநேர உணவுகள் நமக்கு சாப்பிட கிடைக்கின்றன.

அதேபோல சில நகரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக சுவையான மாலை நேர உணவுகள் கிடைக்கும். அந்த இடத்திற்கே உரிய பிரத்யேக சுவையுடன் விதவிதமான உணவு வகைகளை அந்த இடங்களில் நாம் சாப்பிட முடியும். இந்திய நகரங்களில் இருக்கும் அப்படியான இடங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

மாலை நேர உணவுகளுக்கு இந்தியாவிலேயே மிகவும் பெயர்போன இடம் எதுவென்றால் அது சந்தேகமே இல்லாமல் மும்பை தான். ஒரு சராசரி மும்பைக்கரின் அன்றாட வாழ்க்கையில் பாவ் பாஜிக்கும், பேல் பூரிக்கும் மிக முக்கிய இடமுண்டு. வசதி வாய்ப்பு, வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் விதவிதமான மாலைநேர உணவுகளை சுவைப்பதை நாம் காண முடியும்.

Photo: Flickr

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

இந்த மாலைநேர உணவுக்கடைகள் அதிகமாக இருக்கும் இடம் 'காவ் கல்லி' என்று அழைக்கப்படுகிறது. மும்பையின் பிரபலமான காவ் கல்லிகள் என்றால் அது கிர்கௌம் சௌபாட்டி பீச்சும், மும்பை நகரின் மிகப்பரபரப்பான இடங்களில் ஒன்றான நரிமன் பாயிட்டும் தான்.

Photo: Flickr

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

பேல் பூரி மற்றும் குல்பிக்களுக்கு இந்திய அளவில் மிகப்பிரபலமான இடமாக இருக்கிறது கிர்கௌம் சௌபாட்டி பீச். மும்பைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த கடற்கரைக்கு சென்று இந்த இரண்டு உணவுகளையும் ருசிபார்த்திடுங்கள்.

Photo:JK Werner

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

அதேபோல நரிமன் பாயிண்டில் கிடைக்கும் மும்பை மாலை நேர உணவுகளின் ராஜா & ராணி என்று சொல்லப்படும் வடா பாவையும், பாவ பாஜியையும் சாப்பிட்டு பார்க்க மறந்து விடாதீர்கள். விதவிதமான உணவுகளை சுவைபார்க்க வேண்டும் என்ற ஆசையுள்ள உணவுப்பிரியர் நீங்களென்றால் மும்பைக்கு சென்று ஒரு பிடி பிடித்திடுங்கள்.

Photo:Garrett Ziegler

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

மும்பை நகரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள், அந்த நகரில் இருக்கும் தாங்கும் விடுதிகள், எப்படி சென்றடைவது போன்ற விவரங்களை தமிழில் இருக்கும் முதன்மை பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

மும்பை - காவ் கல்லி :

மும்பை - காவ் கல்லி :

மும்பையின் புகழ்பெற்ற சுற்றுலாத்தங்கலில் ஒன்றான ஜுஹு பீச்.

Photo: FFlickr

 சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக், புது தில்லி :

இந்தியாவின் அதிகார மையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மிகப்பழமையான சந்தை வீதிகளில் ஒன்று தான் இந்த சாந்தினி சௌக் ஆகும். 17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னன் ஷாஹ் ஜகானால் கட்டப்பட்ட இந்த இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வரும் உணவுக்கடைகள் இருக்கின்றன.

Photo:Sagarika Bose

 சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக், புது தில்லி :

முகலாயர் காலத்திய உணவுகளை அதன் தனித்துவமான சுவையுடன் சாப்பிட நினைப்பவர்கள் கண்டிப்பாக இங்கு வர வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இங்கு கிடக்கும் இனிப்பு வகைகளான ஜிலேபிகள், ரசமலாய், பலூடா போன்றவை மற்ற இடங்களில் கிடைப்பதை காட்டிலும் இங்கு அதி சுவையானதாக இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

Photo: Flickr

 சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக்கில் இருக்கும் கந்தேவாலா ஹவேலி என்ற இனிப்பு பலகார கடை 1790ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடந்துவருகிறது. முகலாய மன்னர்கள், 1857ஆம் ஆண்டு கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்கள், பிரதமர் நேரு, ராஜீவ் காந்தி போன்ற பல அதிமுக்கியமானவர்கள் இந்த கடைக்கு வந்திருக்கின்றனர்.

Photo:Ekabhishek

 சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக், புது தில்லி :

இந்த கடையில் 'சோகன் ஹல்வா' மக்களால் தொடர்ந்து அதிகம் விரும்பி வாங்கப்படுவதாக இக்கடையின் தற்போதைய உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு மட்டும் இல்லாமல் ஆன்லைனிலும் இக்கடையில் தாயாராகும் இனிப்புகள் கிடைக்கின்றன.

 சாந்தினி சௌக், புது தில்லி :

சாந்தினி சௌக், புது தில்லி :

இந்திய நாட்டின் தலைநகருக்கு என்றேனும் செல்ல நேர்ந்தால் ஒரு பொன்மாலைப் பொழுதில் அப்படியே சாந்தினி சௌக் சென்று வாருங்கள். சாந்தினி சௌக் பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

திண்டி பீதி - பெங்களூர் :

திண்டி பீதி - பெங்களூர் :

ஏதும் பீதி அடையவேண்டாம். 'திண்டி பீதி' என்றால் கன்னடத்தில் உணவு வீதி என்று பொருளாகும். இந்தியாவின் ஐ.டி தலைநகரான பெங்களுரு இப்போது பன்மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக, ஒரு கலாசார கேந்திரமாக மாறிவிட்டது. வேறு எந்த மாநிலத்தில் இருந்து பெங்களுரு செல்பவரும் அங்கு கிடைக்கும் உணவுகளுக்கு அடிமையாகிவிடுவார்கள்.

Photo:Nicolas Mirguet

திண்டி பீதி - பெங்களூர் :

திண்டி பீதி - பெங்களூர் :

கன்னடிகர்களின் பாரம்பரியமான மாலை நேர உணவுகளை சுவைக்க விரும்புகிறவர்கள் செல்ல வேண்டிய இடம் சாஜன் ராவ் சர்கிளுக்கு அருகில் இருக்கும் வி.வி. புரத்திற்கு தான். மாலை 7 மணிக்கு மேல் களைகட்ட துவங்குகிறது இந்த இடம். பாரம்பரிய இனிப்புகளான சிரோட்டி, ஹூளிகே, ராஜஸ்தானி உணவுகளான விதவிதமான கச்சொரிகள், சைனீஸ் உணவுகள் போன்றவை இங்கே கிடைக்கின்றன.

Photo:Nicolas Mirguet

திண்டி பீதி - பெங்களூர் :

திண்டி பீதி - பெங்களூர் :

இங்கிருக்கும் வி.பி பேக்கரி பெங்களுருவில் இருக்கும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குரிய இடங்களில் ஒன்றாகும். காரணம் இங்கு கிடைக்கும் 'காங்கிரஸ் மசாலா பன்' தான். அதுமட்டும் இல்லாமல் இங்கு கிடைக்கும் அக்கி ரொட்டி, பிசிபிசி மசாலா தோசை, கொல்படெ போன்ற உணவுகளும் மிகவும் பிரபலமானவையே.

Photo:Nicolas Mirguet

More News

    Read more about: food tour mumbai delhi bangalore
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+