» »சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்

சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்

Written By: Staff

உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் சூரிய உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை தண்ணீர் கூட பருகாமல் நோன்பு மேற்கொள்கின்றனர். இது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாகும். இப்படி ஒவ்வொரு நாளும் மாலையில் அதிசுவையான அசைவ உணவுகளை உட்கொண்டு நோன்பை நிறைவு செய்வர்.  

மாலை நேரத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாக சென்றால் நாமும் நாவூற வைக்கும் உணவுகளை ருசிக்கும் வாய்ப்பை பெறலாம். குறிப்பாக இந்தியாவில் சில இடங்கள் ரம்ஜான் உணவுகளுக்கேன்றே பெயர்போனவை. அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

 ஃபிரேசர் டவுன் - பெங்களூர்:  

சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்

Hill93

பெங்களூரு நகரின் மையத்தில் அமைந்திருக்கும் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஃபிரேசர் டவுனில் உள்ள மசூதி சாலையில் சுவையான இப்தார் உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக இங்கே கிடைக்கும் பீப் பிரியாணியையும், மட்டன் பிரியாணியையும் சுவைக்கவே அசைவப்பிரியர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கே வருகின்றனர்.  வாயில் போட்டதுமே கரைந்துவிடும் பக்குவத்தில் அசைவ உணவுகள் இங்கே சமைக்கப்படுவதே இதற்கு காரணம் ஆகும். 

முஹம்மது அலி சாலை - மும்பை:  

 

சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்

Miansari66

மும்பையில் இருந்தால் ரம்ஜான் நேரத்தில் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் தெற்கு மும்பையில் முஹம்மது அலி சாலை ஆகும். இங்கு அமைந்திருக்கும் பரா ஹந்தி என்ற உணவகம் நல்லி நிஹாரி சூப்(மட்டன்), பாயா சூப்(பீப்) ஆகியவற்றிற்கு பிரபலமானதாகும். இங்கே இப்தார் உணவுகள் முகலாயர்கள் காலத்தைய சமையல் முறைப்படி சமைக்கப்படுகிறது.  

கரீம்'ஸ், ஜம்மா மசூதி - டெல்லி: 

சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்
 

lydime

இந்தியாவின் மிகப்பெரிய மசூதியான ஜம்மா மசூதிற்கு வெகுஅருகில் அமைந்திருக்கும் 'கரீம்'ஸ்' என்ற உணவகத்தில் தான் இந்தியாவிலேயே மிகவும் சுவையான முகலாயக உணவுகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. முகலாய பேரரசர்களின் சமையல்காரர்களாக இருந்தவர்களால் துவங்கப்பட்ட இந்த உணவகத்தில் கிடைக்கும் நர்கிசி கோப்தா, கரஹி கோஸ்த் போன்றவை இங்கு மட்டுமே கிடைக்கும் ஸ்பெஷல் உணவுகள் ஆகும். நியாயமான விலையில் ராஜ உணவுகள் கிடைக்கும் இந்த உணவகத்திற்கு நிச்சயம் வாய்ப்புக்கிடைக்கும் போது சென்று சுவைத்துப்பாருங்கள்.

சார்மினார் தெருவோர உணவகங்கள் - ஹைதிராபாத்: 

சுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்

orchidgalore

ஹைதிராபாத் நகரின் அடையாளமாக திகழும் சார்மினாரை ஒட்டியுள்ள தெருக்களில் ரம்ஜான் மாதத்தில் களைகட்டுகின்றன. இங்கே ஏற்கனவே உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்களை தாண்டி மேலும் பல தற்காலிக ரம்ஜான் உணவகங்கள் அமைக்கப்படும். பலவகையான சமோசாக்கள், கபாப்புகள், இரானி னான், பாத்தார் கா கோஸ்த் மற்றும் மிர்ச்சி பஜ்ஜி போன்றவை இங்கே கிடைக்கின்றன.    

உங்களுக்கும் இதுபோல சுவையான ரம்ஜான் உணவுகள் கிடைக்கும் இடங்கள் பற்றி தெரிந்திருந்தால் அவற்றை கமென்ட் பகுதியில் பகிர்ந்திடுங்கள்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்