Search
  • Follow NativePlanet
Share
» »கங்கணம் ரிஸ்ட் பேண்ட் இருந்தால் போதும் – வெறும் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!

கங்கணம் ரிஸ்ட் பேண்ட் இருந்தால் போதும் – வெறும் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!

உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 65,000 முதல் 85,000 பக்தர்கள் வரை திருமலையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களில் பலர் முன்கூட்டியே சிறப்பு தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவாக்கள், விஐபி பிரேக் தரிசனம் என டிக்கெட் வாங்கி இருப்பார்கள். ஆனால் எந்த வித திக்கெட்டும் இல்லாமல் திருப்பதி ஏழுமலையானை 2 மணி நேரத்தில் தரிசிக்க தற்போது ஒரு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது!

அதிகரித்து வரும் திருப்பதி பக்தர்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு ஆண்டும் புனித மலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கானோர் வருகை தருவதினாலும், யாத்ரீக அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையானை, இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் பக்தர்கள் விரைவில் தரிசிக்க முடியும்.

Tirupati

மீண்டும் மீண்டும் வர தூண்டும் திருப்பதி

வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை திருப்பதி! கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. மாறாக அவர் திருமுகத்தை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் பார்த்த வந்து விட்ட அடுத்த நொடியிலேயே நம்மைப் பற்றிக் கொள்ளும் என்று அனைவருமே நினைப்பார்கள்!

பலவகையான திருப்பதி பாலாஜி தரிசனங்கள்

மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். திவ்ய தரிசனம், சர்வ தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், சுப்ரபாத தரிசனம் என பலவகையான தரிசனங்கள் உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் மற்றும் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10000 ரூபாய் நன்கொடை வழங்குபவர்கள் ஆகியோருக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

Tirupati

அதிக நேரம் குடவுனில் அடைபடும் சர்வ தரிசன பக்தர்கள்

அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக இரவு முழுவதும் காத்திருப்பு குடவுனில் அடைபட்டு வேண்டி இருக்கிறது. சர்வ தரிசன பக்தர்கள் 18 முதல் 30 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் விஐபி தரிசனம் பெறும் நபர்களால் தங்குமிடங்களும் அதிகமாக புக் ஆகி விடுகின்றனர்.

சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய கங்கணம் ரிஸ்ட் பேண்ட்

பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை குறைக்கும் நோக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கங்கணம் ரிஸ்ட் பேண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கங்கணம்' அமைப்பானது, கோயிலுக்கு தரிசனத்திற்கு குறிப்பிட்ட நேர இடங்களை ஒதுக்க அனுமதிக்கும், மேலும் பக்தர்கள் திட்டமிட்ட நேரத்தில் கோயிலுக்குச் செல்லவும், இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் அவர்கள் செயல்முறையை முடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். இந்த அணுகுமுறையானது பார்வையாளர்களின் வருகையின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் மற்றும் கோவிலில் நெரிசலைக் குறைக்கும், குறிப்பாக அதிக தேவை உள்ள காலங்களில்.

நீண்ட காத்திருப்பு காலம் தேவையில்லாமல் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு இடமளிக்கும் நோக்கில், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்து TTD ஆராய்ந்து வருகிறது.

More News

    Read more about: tirupati tirumala travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+