Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் 'தலைவர்' வந்து செல்லும் விருப்ப இடங்கள் தெரியும்?

சென்னையில் 'தலைவர்' வந்து செல்லும் விருப்ப இடங்கள் தெரியும்?

வளமான வரலாறு, கலாசாரத்தை உள்ளடக்கிய நகரம் சென்னை. அத்தகைய சிறப்பு மிக்க மாநகரத்தில், 'தலைவா' என அன்புடன் அழைக்கும் பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வரும் இல்லமும் உள்ளது.

Discover Superstar Rajinikant s Favorite Spots in Chennai

பழமையான நகரம் என்பதற்கு, சென்னையில் பல அடையாளங்கள் இருந்தாலும், தமிழ் திரை உலகில் இன்றளவும் ஜொலிக்கும் 'ஸ்டார்'கள் வசிக்கும் இல்லங்கள் அமைந்திருக்கும் இடங்களும் பிரசித்தி பெற்றவை.

அந்த வரிசையில், 'தலைவா' என, அனைவராலும் அன்புடன் அழைக்கும் பாக்கியத்தை பெற்றவர் ஒருவர் என்றால், அது 'ரஜினிகாந்த்'.

நீங்கள் ஒரு ரசிகராக இருந்தால், சென்னைக்கு சுற்றி பார்க்க வரும்போது, நம் தலைவர் அவருக்கு பிடித்த இடங்களுக்கு வரும் போது, ஒரு முறையாவது அவரை பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.

Discover Superstar Rajinikant s Favorite Spots in Chennai

அப்படி தன் தலைவருக்கு பிடித்த இடங்களை தேடி பார்க்காமல் இருந்தால், சென்னை வந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்காது அல்லவா...! அப்படி எந்தெந்த பகுதிகள் தலைவரின் வருகை தரும் இடங்கள் என்பது உங்களுக்கு தெரியும்?... வாருங்கள் பார்ப்போம்...!

' நீ நடந்தால் நடை அழகு - அழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு - அழகு, நீ பேசும் தமிழ் அழகு - அழகு, நீ ஒருவன் தான் அழகு என்ற வரிகளுக்கு பொருத்தமானவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் 'ரஜினிகாந்த்' .

பெயரை கேட்டாலே, 'சும்மா அதிருதுல', அந்தளவுக்கு அன்று முதல் இன்றைய '2k'கிட்ஸ் வரை, 'ரஜினிகாந்த்' படங்கள், அவரின் ஸ்டைலை ரசிக்காதவர்கள் இல்லை. அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி குட்டீஸ்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்ப்பர்.

இன்றைய தலைமுறை, 'ரஜினிகாந்த்' என்பவரின் செயல், நடவடிக்கைகளை, ட்விட்டர், பேஸ்புக் என, பலதரப்பட்ட சமூக வலைதள ஊடகங்களில் வெளியிட்டு, நொடியில் கோடி லைக்ஸ்களை எட்டும் அளவுக்கு தெறிக்கவிடுகின்றனர்.

அப்படிப்பட்ட தலைவர், அன்றாட செல்லும் இடங்களை நோக்கி, அவரின் வருகைக்காக தினசரி 'தவம்' கிடைக்கும் ரசிகர்களை, சென்னை மாநகரின் பல இடங்களில் பார்க்கலாம் என்பதில் ஐயமில்லை. அப்படி உங்கள் தலைவருக்கு பிடித்த முக்கிய ஸ்பாட்கள் தெரியும்?

ராகவேந்திரா கல்யாண மண்டபம்

கடந்த 1980களில், ரஜினிகாந்த இந்த திருமண மண்டபத்தை வாங்கினார். கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இந்த மண்டபத்தில், அன்று முதல் இன்று வரை, திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளுக்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இந்த மண்டபம், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடையாளமாகவும், அவரது வெற்றியின் அடையாளமாகவும் திகழ்கிறது. திருமணம், சூட்டிங் என பிஸியா இருக்கும் இந்த மண்டபம், ஆண்டில் ஒரு முறையாவது தலைவனை காண வருகை தரும் ரசிகர்களால் நிரம்பியிருக்கும்.

அந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவரது ரசிகர்கள் என்றால் மிகையாது. அந்தளவுக்கு முக்கிய நாட்கள் எப்போதும் வரும் என எதிர்நோக்கியே அவரது ரசிகர்கள் காத்திருப்பர். ஏனெனில், அந்த நாட்களில் தலைவரின் வருகை நிச்சயம் இருக்கும் அல்லவா...!

ஆஞ்சநேயர் கோவில்

'ஆன்மிகம்' என்ற ஐந்து எழுத்தை, வாழ்வில் ஒரு முறையேனும் தழுவாதவர்கள், இவ்வுலகில் இல்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு, ஒவ்வொருவர் வாழ்விலும் ஆன்மிகம் முக்கிய அங்கம் வகிக்கும். ஆன்மிகம், 'ரஜினிகாந்த்' என்ற திரை ஆளுமையின் முக்கிய அங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆன்மிகத்திற்கு பெயர் பெற்றவர் ரஜினிகாந்த்.

தென் சென்னை பகுதியான நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு, ரஜினிகாந்த் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும். ஆஞ்சநேயரின் அருளை பெற வரும் பக்தர்கள் மற்றும் ரசிகர்கள், ஒரு முறையாவது தலைவர் கடவுளை வேண்டி உருகும் ஸ்டைலை காண்போம் என, நம்பிக்கையில் வந்து செல்கின்றனர்.

ஏவிஎம் ஸ்டுடியோஸ்

இந்தியாவின் பழமையான திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டுடியோஸ் ரஜினிகாந்தின் கேரியரில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல.

ரஜினிகாந்த் மட்டுமில்ல; சினிமாவில் கோலோச்சிய பல முன்னணி ஸ்டார்கள், தாங்கள் யாரை பார்த்து வாய்ப்புகளை தங்கள் வசமாக்கி கொள்ள கால்கடுக்க நின்ற இடம் என்றே கூறலாம்.

அந்தளவுக்கு பலர், தங்களின் புன்னிய பூமி என்றே அழைப்பர். அதேபோல ரஜினிகாந்த்தின் பல சின்னத்திரை படங்கள், இங்கு படமாக்கப்பட்டன. சென்னைக்கு வரும் ரசிகர்கள் மட்டும் அல்ல... சென்னையை தேடி முதல் முதலாக வரும் சுற்றுலா பயணியரும், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்டுடியோவை சுற்றி பார்க்க தவறமாட்டார்கள். நீங்களும் தவறாதீர்கள்.

பெசன்ட் நகர் கடற்கரை

பெரியவர் முதல் சிறியவர் வரை, 'கடற்கரை' என்றால் குஷியாகிவிடுவர் அல்லவா...! நம் எண்ணங்களுக்கு ஏற்பவும், நம் ஆழ் மனதில் புரையோடி நம்மை அழுத்தும் தேவையற்ற எண்ணங்களை ஆற்றும் வலி நிவாரணி என்றே கூறலாம்.

அழகியலை, அவ்வவ்போது வாரி வழங்கும் இந்த கடற்கரை, பிரபலங்களுக்கும் அருமருந்து. அந்த வரிசையில், எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த ரிலாக்ஸ் ஸ்பாட்.

கடற்கரை, ஒரு அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது; ஓய்வெடுக்க ஏற்றது. அமைதியை அனுபவிக்கும் நம்பிக்கையில் ரஜினிகாந்த் மட்டுமில்லை, அவரது ரசிகர்களும் அடிக்கடி இந்த கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

ஹோட்டல் தாஜ் கோரமண்டல்

ஒரு முறையாவது, தன் தலைவனை காண வேண்டும் என்ற ஆவலில், எதையும் இழக்க தயாராகுபவர் யார் என்றால், ஒரு கலைஞனின் ரசிகன் மட்டுமே. ஆகையால் தன் தலைவன், எங்கு செல்கிறாரோ, அந்த இடத்துக்கு ஒரு முறையாவது, அவரது ரசிகர் சென்றுவிடுவர்.

அந்த வரிசையில், ரஜினிகாந்த் அடிக்கடி ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் உணவருந்துவார். ஆடம்பரமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற இந்த ஹோட்டல், பிரபலங்களுக்கு பிரபலமான இடமாகும்.

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை முறையை கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அவரது ஒரு சில ரசிகர்கள் இங்கே வந்து உணவை உண்டு மகிழ்கின்றனர்; மகிழுவர்.

சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸ், ராயப்பேட்டை பகுதியின் இதயம் என்றே கூறலாம் . இங்கு வெளியாகும் புதிய புதிய திரைப்படங்களின் அனைவரின் கவனத்தை ஈர்த்த படங்களின் முதல் நாள் ஷோவை பார்க்க, ரஜினி வந்து செல்லும் விருப்பமான திரையரங்குகளில் ஒன்றாகும்.

அதிநவீன வசதிகள் திரைப்பட ஆர்வலர்களின் பிரபலமான தேர்வாக அமைகிறது. இங்கே ஒரு படத்தைப் பார்ப்பது ரஜினிகாந்தின் திரைப்பட அனுபவத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் என்றே கூறலாம்.

பிருந்தாவனம்

பிருந்தாவனம் ஒரு காலத்தில் ரஜினிகாந்த் வாழ்ந்த அமைதியான குடியிருப்பு பகுதி. அவரது ஆரம்பகால வாழ்க்கையை உணர, அவரது ரசிகர்கள் அடிக்கடி வருகை தருகின்றனர். வீடு தனியாக இருந்தாலும், அக்கம் பக்கத்தினர், சூப்பர் ஸ்டாரின் நினைவுகளால் எதிரொலிக்கின்றனர்.

இவ்வுலகில் சினிமா என்ற ஒன்று இருக்கும் வரை, ரஜினிகாந்த் மட்டுமில்ல திரையில் ரசிகர்களை கட்டிப்போட்ட அனைவரின் நினைவுகளும், அவர்கள் திரையில் உதிர்த்த வசனங்களும் காலத்துக்கும் மங்காது.

ரஜினிகாந்த் ரசிகர்கள், அவரின் விருப்ப இடங்களுக்கு ஒரு முறையாவது சென்று அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலை போல, இன்றைய இளைய தலைமுறையினர் பலர், தங்களின் தலைவனை காண, சென்னை நோக்கி வருவர் என்பதில் ஐயமில்லை.

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+