» »இந்தியாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத 100 அதிர்ச்சி உண்மைகள்

இந்தியாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத 100 அதிர்ச்சி உண்மைகள்

Written By:

இந்திய சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. இந்தியா, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

மர்மங்கள் -

மர்மங்கள் -

இந்தியா மர்மங்கள் நிறைந்த தேசம் என்பது உங்களுக்கு தெரியுமா?

லிங்கராஜர் கோயில்

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக்

கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும்.

லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

Nitun007

 நவ் காஜா பீர்

நவ் காஜா பீர்

லாரி டிரைவர்கள் மற்றும் பயணிகள், பயணத்தின் போது தங்கள் இலக்கை பாதுகாப்புடன் உரிய நேரத்தில் சென்றடைய இந்த கோவிலுக்கு வருகின்றனர். இங்கு வரும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கடிகாரம், கடுகு எண்ணெய் மற்றும் துணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த அரிய கோவில் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா மற்றும் குருஷேத்ரா இடையே உள்ளது.

Kamaldevjhalli

ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா

ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம். வெளிநாடு வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படும் மக்கள் பொம்மை விமானம் ஒன்று கொண்டு வந்து இங்கு வழிபட்டால் வெளிநாடு வாய்ப்பு நிச்சியம் என்று நம்பப்படுகிறது.

PC: Malikhpur

கர்னி மாதா கோவில்

கர்னி மாதா கோவில்


ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்னி மாதா கோவில். இங்குள்ள எலிகள், தேவி கர்னி மாதா அவதாரமாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால் மற்றும் சில பிரசாத வகைகளை எலிகளுக்கு கொடுப்பர். மேலும் எலிகள் சாப்பிட பொருட்கள் புனிதமாக கருதப்படுவதுடன் சிலர் அதை கோவில் பிரசாதமாக எடுத்து கொள்கின்றனர்.

Photo Courtesy: Arian Zwegers

ஓம் பன்னா புல்லெட் பாபா:

ஓம் பன்னா புல்லெட் பாபா:


ஜோத்புரில் உள்ள பாலி மாவட்டத்தில் உள்ளது இந்த ஓம் பன்னா புல்லெட் பாபா கோவில். இங்கு வரும் மக்கள் [பயணிகள்] தங்கள் பயணத்தை பாதுகாக்க 350cc ராயல் என்பீல்ட் புல்லெட் ஒன்றை வழிபாடு செய்கின்றனர். 27 வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயம் ஓம் பன்னா, சோட்டீலா சென்றுகொண்டு இருக்கும் போது வழியிலேயே தனது புல்லட் கட்டுப்பாட்டை இழந்து இறந்துவிட்டார். பிறகு போலீசார் புல்லெட்டை அந்த இடத்தில் அகற்றினர். ஆனால் ஆச்சிரியமாக புல்லெட் அவர் உயிர் விட்ட அதே இடத்தில் திரும்ப வந்துவிட்டது. இந்த சம்பவம் முதல் இங்கு உள்ள மக்கள் புல்லெட் பைக்கை வழிபடுகின்றனர்.மேலும் ஓம் பன்னா வின் நினைவாக அந்த புல்லெட்டை புல்லெட் பாபா வாக நினைத்து வழிபடுகின்றனர்.

Photo Courtesy: Sentiments777

நாய் கோயில்

நாய் கோயில்

சன்னபாட்னா, கர்நாடகா பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்நகர் என்ற இடத்தில் தான் உள்ளது இந்த நாய் கோயில். இந்த கோவிலானது 2009 ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டது.இங்குள்ள கிராமவாசிகள் தங்கள் இடத்தில் எந்த தவறு நடக்காமலும், தீய சக்திகளை விரட்டுவதற்காகவும் நாய்கள் துணை நிற்கின்றன என்று நம்பி இந்த கோவிலில் வழிபடுகின்றனர்.

பாபா ஹர்பஜன் சிங்

பாபா ஹர்பஜன் சிங்

கேங்டாக்லிருந்து சுமார் 60km தொலைவில் குப்அப் பள்ளத்தாக்கு அருகே உள்ளது இந்த பாபா ஹர்பஜன் சிங் சமாதி. 1962 இந்தோ-சீனா போரின் போது உயிர் நீய்த்த ஹர்பஜன் சிங்க் என்ற ராணுவ வீரரின் நினைவாக இந்த கோவில் கட்டப்பட்டது.மேலும் இந்த மலை பகுதியில் விபத்து எதுவும் நடைபெறாமல் மக்களை காக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.
Photo Courtesy: Ambuj Saxena

 மேக்னடிக் ஹில்

மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.

 காற்றில் மிதக்கும் கல்

காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம். 200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது. எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.

கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது. அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.

 ரூப்குந்த் லேக்

ரூப்குந்த் லேக்

1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன. ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

Schwiki

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர். அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஷனி ஷிங்க்னாபூர்

ஷனி ஷிங்க்னாபூர்

ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

 விருபாட்சர் கோயில்

விருபாட்சர் கோயில்

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.இந்த கோயிலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள்


ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிரடு கோயிலில் தான் வரும் பக்தர்கள் அனைவரும் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடிக்கின்றனர். காடுகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் மிகுந்த பயத்துடனே இந்த கோயில் வழிபடுகின்றனர். கோயிலில் தங்கக்கூடாது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீறி தங்கினால் அவ்வளவுதான். அவர்கள் சிலையாக மாறிவிடுகின்றனர். நம்பமுடியவில்லையா?

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது. இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. மேலும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது. இவைபோன்று இன்னும் எக்கச்சக்கமான சிதம்பர ரகசியங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

தஞ்சை பெரியகோயிலின் அதிசயங்கள்

தஞ்சை பெரியகோயிலின் அதிசயங்கள்

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜசோழன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். ஒன்றில்லை இரண்டில்லை நாற்பது மடங்கு. கற்பனை செய்து பாருங்கள். இத்தனை கோடி பொறியாளர்கள் உலகம் முழுவதும் இருந்தும், இன்னும் விளங்காத ஒன்று இதுதான்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே . சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்.

 நாசாவே வியக்கும் சிவன் கோவில் மர்மங்கள்

நாசாவே வியக்கும் சிவன் கோவில் மர்மங்கள்

கேதார்நாத்

உத்திரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து கேதார்நாத் ஆகும். இது சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ். இது கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேதார்நாத் செல்ல பிரிபெய்டு டாக்சிகள் இயக்கப்படுகின்றன. 207 கி.மீ தூரத்தை டாக்சி மூலமாக கடந்தபின் 14 கி.மீ தூரம் கால்நடையாக யாத்ரீகர்கள் கேதார்நாத்துக்கு ஏற வேண்டியிருக்கும். அடுத்ததாக இருப்பது காலேஷ்வரம். ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பதை படத்தில் காணலாம்.

காலேஷ்வரம்

காலேஷ்வரம்

காலேஷ்வரம், தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மகாதேவபூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற பகுதியாகும். கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது இந்த காலேஷ்வரம். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 277 கிமீ தொலைவிலும், வாராங்கலிலிருந்து 115 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஹைதராபாத், வாராங்கல், பர்க்கல், கரீம்நகர் மற்றும் பெடப்பள்ளி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. காலேஷ்வரத்திலிருந்து காளகஸ்தி ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதை படத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்
wiki

காளகஸ்தி

காளகஸ்தி


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளகஸ்தி மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதியிலிருந்து 36 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த கோயில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ‘வாயு'விற்காக எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது. நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள காளஹஸ்தி நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். அமைதி மற்றும் தெய்வீகச்சூழலுடன் தனித்தன்மையான கோயில்கள் நிரம்பி காட்சியளிக்கும் இந்த ஸ்ரீ காளஹஸ்தி நகரம் மனச்சாந்தியை தேடி பயணிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும். காளகஸ்தியிலிருந்து காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் எந்த கோணத்தில் உள்ளது என்பது உங்களுக்கு இப்போது விளங்கியிருக்குமே...

Kalyan Kumar

காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில்


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ தலமாகும். ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள், காஞ்சிபுரத்துக்கும், காஞ்சிபுரத்திலிருந்தும், நாள்தோறும் இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள், சாலை வழியாகவே காஞ்சிபுரத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். சென்னையிலிருந்து, பேருந்தில் சென்றால், சுமார், ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம். டாக்ஸியில் போனால், இன்னும் விரைவாகச் செல்லலாம்; ஆனால் அதிக கட்டணம் வசூலிப்பர். காஞ்சிபுரம், தென்னிந்தியாவின் பிற நகரங்களுக்கு, இரயில் சேவைகளின் வலுவான கட்டமைப்பினால், நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு-அரக்கோணம் தடத்தில் அமைந்துள்ள, செங்கல்பட்டு இரயில் நிலையம் உள்ளது. சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில், ஒரு பாசஞ்சர் இரயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில் போனால், சென்னையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையலாம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

சுற்றியுள்ள நகரங்களோடும், பட்டணங்களோடும் திருவண்ணாமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த புனித நகரத்தை அடைய தமிழக அரசு எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதோடு திருவிழா காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசாங்கம் அதிகரிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 சிதம்பரம்

சிதம்பரம்


சாலை மார்க்கமாகவும் சிதம்பரம் நகரம் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிதம்பரத்தை அடையலாம். இப்படி பயணிக்கும்போது பாண்டிச்சேரி நகரத்தையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது மற்றொரு விசேஷம்.

 இராமேஸ்வரம்

இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் சாலை வழியாக சென்னையுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. நல்ல சொகுசான வோல்வோ பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் என எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வோல்வோ பேருந்து கட்டணம் ரூ.500/- ஆகவும், மாநில அரசுப் பேருந்துகள் கட்டணம் ரூ.1000-1500/- ஆகவும் உள்ளன.

 முருகன் கோயிலா திருப்பதி

முருகன் கோயிலா திருப்பதி

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார். வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்.

 பெசன்ட் அவென்யூ சாலை

பெசன்ட் அவென்யூ சாலை

இந்த சாலை மிகவும் அமைதியானதாகவும், ஆள் நடமாட்டமற்றதாகவும் இருக்கும். பெசன்ட் அவென்யூ சாலை பேய் உலாவுகிற இடம் என்றும், இங்கு நிறைய அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் பலர் பேசி வருகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் மக்களுக்கு பயம் உருவாக்குவது போல மர்ம நிகழ்வுகள் திடீரென நிகழ்கின்றனவாம். ஆயிரம் பேர் சொன்னாலும், நம்ம கண்ணால பாக்குறவரைக்கும் பேய நம்ப போறது இல்ல. பேய் இருக்கா இல்லயா என்பது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்

PC: Sankar Pandian

புளூ கிராஸ் ரோடு

புளூ கிராஸ் ரோடு

சென்னையில் தற்கொலைச் சாலை என்று அழைக்கப்படுகிறது இந்த புளூ கிராஸ் சாலை. இந்த சாலை நிறைய தற்கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது. ஆவிகள் அதிகளவில் உலாவும் சாலையாக இந்த புளூ கிராஸ் ரோடு உள்ளது. இந்த வழியில் யாராவது நடந்தோ, பைக்கில் சென்றாலோ, ஆவிகளின் குரல் உங்கள் மூளையை மழுங்க செய்து உங்களைத் தற்கொலைச் செய்யத்தூண்டும் என்கிறார்கள் இங்குள்ளவர்கள். சில நாள்களுக்கு முன்னர், அங்கு பைக்கில் சென்ற நபரிடம், ஒரு குரல் லிப்ட் கேட்டதாகவும், திரும்பி பார்க்கையில் யாரும் இல்லாததால் பயந்துபோன அந்த நபர், அதன் பின்னர் அந்த வழியில் செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

PC: Sunciti _ Sundaram

 அடையாறு உடைந்த பாலம்

அடையாறு உடைந்த பாலம்

அடையாறு பாலம் பற்றிய கதை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இதுவரை இங்கு யாரும் இறந்ததாக ஆதாரம் இல்லை என்றாலும், அடிக்கடி மர்ம நிகழ்வுகள் நடப்பதாக கூறுகின்றனர் இங்கு வரும் இளைஞர்கள். பகலில் எந்தவித சலனமும் இன்றி காணப்படும் இந்த பாலம், இரவில் அமானுஷ்ய குரல் ஒலிக்கும் பாலமாக இருக்கிறதாம். சிலர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காற்று எழுப்பும் ஒலிதான் இது என்கிறார்கள். இருந்தாலும், இந்த பக்கம் போனீங்கன்னா எதுக்கும் பாத்து போங்க
PC: PlaneMad.

சென்னை பெங்களூரு சாலை

சென்னை பெங்களூரு சாலை


இந்த சாலையில் பயணிப்பவர்கள் எதுக்கும் இந்த இடத்தை வேகமாக கடந்துவிடுவது நல்லது. ஒருவேளை நீங்களும் அந்த குரலைக் கேட்கலாம். சாலை விபத்தில் மரணமடைந்த ஒரு பெண், இரவு வேளைகளில் இந்த சாலையில் மர்ம நிகழ்வுகளை ஏற்படுத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர். இந்த சாலைகளில் செல்பவர்களை நோக்கி கையசைக்கு ஒரு பெண்ணின் உருவம், தன்னை நோக்கி வருமாறு அழைப்பதாக கூறுகின்றனர் இங்கு அனுபவம் பெற்றவர்கள்.
PC: Soham Banerjee

டிமான்டி காலனி

டிமான்டி காலனி

டிமான்டி காலனி என்ற பகுதியை நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பரிடம் கேளுங்கள். சென்னை செயின்ட் மேரி சாலையில் உள்ளது இந்த டி மான்டி காலனி. அந்த காலனிக்குள் சென்ற விலங்குகள் திரும்பி வரவேயில்லயாம். ஒரு காவலாளியும் உள்ளே சென்று மாயமானதாக தகவல்கள் பரவியுள்ளன. தமிழ் படத்தில் வருவது கற்பனை கதையல்ல.... அது நிஜமாகவே நடந்த நிகழ்வு என்கிறார்கள் சிலர். இந்த காலனியை ஜான் டி மான்டி என்பவர்தான் கட்டியுள்ளார். அவர்தான் பேயாக இருக்கிறார் என்றும், அவரால் கொலை செய்யப்பட்டவர்கள் தான் பேயாக இருக்கிறார்கள் என்றும் வேறு வேறு தகவல்கள் கிடைக்கின்றன. பட்டபகலிலேயே பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருக்கும் பங்களாவுக்குள் இரவில் போக யார்தான் தயாராக இருப்பார்கள் ஏன் நீங்கள் தயாரா

கரிக்காட்டுக் குப்பம் கடற்கரை

கரிக்காட்டுக் குப்பம் கடற்கரை


2004ஆம் ஆண்டு வந்த சுனாமி, சென்னை உட்பட தமிழகக் கடற்கரையெல்லாம் சுத்தம் செய்து, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்னு கூட இரக்கமில்லாம எல்லாத்தையும் தூக்கி விழுங்கிடுச்சி. அப்பா, அம்மா, தம்பி, தங்கைனு எல்லா உறவுகளையும் இழந்து அனாதயா நின்னவங்க நிறைய பேரு.. அப்படி பாதிக்கப்பட்ட கடற்கரைகள்ல ஒன்னுதான் இந்த கரிகாட்டுக் குப்பம் கடற்கரை. இந்த கடற்கரையில் தான் ஒரு முதியவர், தன் பேத்தியுடன் அமர்ந்திருந்ததாகவும், கொஞ்ச நேரத்துல மறஞ்சிட்டதாகவும் சொல்றாங்க. அவர்கள் சுனாமியால் இறந்தவர்களோட ஆவினு சொல்கிறார்கள் உள்ளூர் வாசிகள். தினமும் சரியாக மாலை 7 மணி அளவில் இந்த அமானுஷ்யங்கள் நிகழ்கிறதாகவும், அவர்கள் இருவரையும் பார்த்திருப்பதாகவும் நிறைய பேர் சொல்கிறார்கள்.

PC: sambath sathyan

 மதராஸ் கிறிஸ்துவ கல்லூரி

மதராஸ் கிறிஸ்துவ கல்லூரி

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதிலும் ஒரு தலைக் காதல் அதிக ஆபத்தானது. ஒருதலைக்காதலால் செய்யப்படும் கொலைகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் ஒருதலைக் காதலால் தற்கொலை செய்து கொண்டதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் வந்தன. அதன்பிறகு அங்கு தினமும் அமானுஷ்யங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர் அங்கு பணிபுரிபவர்கள். தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞர், அதிகம் விரும்பும் இடங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் அந்த இடங்களுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கிறார் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர்.

PC: Tshrinivasan

வால்மீகி நகர்

வால்மீகி நகர்

வால்மீகி நகரில் கடந்த 10 வருடமாக பூட்டிக்கிடக்கும் ஒரு மர்ம வீடு உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாகவும், பயந்து போய் இரவு நேரங்களில் இந்த பகுதியை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்கின்றனர் அந்த வீட்டினருகில் வசிப்பவர்கள். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டு உரிமையாரின் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் ஆவி அந்த வீட்டையே சுற்றி சுற்றி வருவதாகவும் கூறுகின்றனர். பூட்டிக்கிடந்த வீட்டினுள் இருந்து அவ்வப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்பதாகவும், பெண் அழும் சத்தம் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் அக்கம்பக்கத்தினர். இரண்டு பேர் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய வந்ததாகவும், அவர்களில் ஒருவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் , மற்றொருவர் ஊரை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார் என தகவல்கள் பரவியுள்ளன.

PC: Effulgence108

 கொல்கத்தா தேசிய நூலகம்

கொல்கத்தா தேசிய நூலகம்

பேய்கள் மற்றும் ஆவிகள் பாழடைந்த கட்டிடங்களில் மட்டுமே வாழும் என்று பல கதைகள் கேட்டுள்ளோம். அப்படி நீங்கள் நினைத்தால் , அது தவறு என்பதை இதை படித்து முடித்தவுடன் ஒப்புக் கொள்வீர்கள். Pc: Avrajyoti Mitra

தேசிய நூலகம்

தேசிய நூலகம்

கொல்கத்தாவில் தேசிய நூலகத்தில் இயற்கைக்கு புறம்பான நிகழ்வுகள் பல நடக்கின்றன. அங்குள்ள காவலர்களே இரவில் பணி செய்ய அச்சமடைகிறார்கள். எனினும் , அவர்கள் அதை பற்றி ஊடகங்களில் வாய் திறப்பதில்லை. தனிப்பட்ட முறையில் கேட்டபோது, நூலகம் இறந்த ஆத்மாக்கள் அங்கு காணப்பட்டதாகவும், மேலும், ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இரவு தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது இறந்ததாகவும் கூறப்படுகிறது. நிறைய பேர் ஒவ்வொரு நாள் காலையிலும், கடிதங்களும் , ஆவணங்களும் நூலகத்தில் மேசை மீது சிதறி காணப்படுகின்றன என்று சொல்கிறார்கள் .

Pc: Biswarup Ganguly

 சுரங்கம் எண் 103 ,

சுரங்கம் எண் 103 ,

சிம்லா சுரங்கத்திலும் பேய் இருக்கும் என்பதை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் சிம்லாவில் ஒரு அமானுஷ்யம் நடக்கிறது. சிம்லா பேய் சிம்லாவிற்கு விடுமுறைக்கு செல்ல நீங்கள் விரும்பினால் , 103 வது எண் சுரங்கப்பாதையில் கொஞ்சம் கவனமாக இருங்கள் . இந்த சுரங்கப்பாதை எண் 103 சிம்லா-கால்கா ரயில் தடத்தில் வருகிறது . ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு ஆவிகள் அங்கு சுற்றிவருவதாக மக்கள் நம்புகிறார்கள். அதன் உள்ளே ஈரப்பதத்துடனும் இருண்டும் இருக்கும். சிலர் ஒரு பிரிட்டிஷ் ஆவி அவர்களுடன் பேசுவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த சுரங்கப்பாதையின் சுவர்களில் ஒரு பெண்ணின் ஆவி நகருவதை பார்த்திருக்கிறார்களாம். நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போது உங்கள் கண்முன் வந்து மறையுமாம் இந்த ஆவிகள்.

 ஷானிவார்வடா கோட்டை,

ஷானிவார்வடா கோட்டை,

புனே மகாராஷ்டிராவில் இருக்கும் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்று இந்த ஷானிவார்வடா கோட்டை. இந்த கோட்டையின் சுவர்கள் கூட பல மர்மமான கதைகள் சொல்லும். கோட்டை பேய் கோட்டையின் இளவரசனை அவரின் சொந்த பந்தங்களே கொலை செய்து இங்கேயே புதைத்தனராம். இன்று கூட , முழு நிலவு இரவுகளில் இளவரசனின் ஆவி தனது மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க கோட்டைக்கு வருகிறது என்கின்றனர். இதனால்தான் மக்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோட்டை வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்கின்றனர்.

ராஜ் கிரண் ஹோட்டல்

ராஜ் கிரண் ஹோட்டல்

மகாராஷ்டிரம் மராட்டிய மாநிலத்தில் இருக்கும் ஒரு விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பீதி கிளம்பியது. சில மர்ம நிகழ்வுகள் வெளி உலகத்துக்கு தெரியாமலே மறைக்கப்பட்டன. ஹோட்டல் பேய் இந்தியாவில் அமானுஷ்யத்தை பொருத்தவரையில் மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த ஹோட்டல் தான் இயற்கைக்கு மாறான விசித்திரம் நடக்கும் இடமாகும். இந்த விடுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அறையில் வசித்தவர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் ஒரு புகாரைத் தந்தனர். அடுத்த நாள் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கையுடன் ஓடி விட்டனர். அதன் பின் ஆராய்ந்ததில் அந் தம்பதி தங்கள் படுக்கை விரிப்புகள் இழுப்பது போல் காணப்பட்டது எனவும் பயத்தில் படுக்கையை விட்டு வந்த பிறகும் இழுத்தவாறு காணப்பட்டது எனவும் தெரியவந்தது. . சில மக்கள் அவர்களின் காலடியில் நீல நிற வெளிச்சம் கண்டு உறக்கத்திலிருந்து எழுந்துள்ளார்கள். ஹோட்டல் நிர்வாகம் இதை மறுத்தாலும், இன்று வரை அந்த அறையில் தங்க அந்த பகுதி மக்கள் பயந்துகொண்டே உள்ளனர்.

 சஞ்சய் வான்

சஞ்சய் வான்


புது தில்லி சஞ்சய் வான் ஏறத்தாழ 10 கி.மீ. பரப்பளவு கொண்டுள்ள ஒரு பெரிய காட்டு பகுதி . அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் வெள்ளை சேலை அணிந்து ஒரு பெண் தோன்றி திடீரென்று மறைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இதை நேரடியாக பார்த்துள்ளார்கள். தலைநகர பேய் தில்லியில் இருக்கும் இந்த பகுதி பேய்கள் நடமாடும் இடமாக கருதப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை . குறிப்பாக இருட்டிய பிறகு நீங்கள் இங்கே தனியாக இல்லை என்பதில் உறுதியாக இருங்கள். மீறி போனால்... பேயுடன் ஒரு டூயட் போட வேண்டிருயிருக்கும் அவ்ளோதான்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்