Search
  • Follow NativePlanet
Share
» »ஆன்லைனில் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது எப்படி - தேசிய டெலிமெடிசின் சேவைகள்!

ஆன்லைனில் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது எப்படி - தேசிய டெலிமெடிசின் சேவைகள்!

நோய்வாய்ப்படுவது என்பது நமது மனம் மற்றும் உடலை மட்டும் சோதிக்கவில்லை, பாக்கெட்டையும் ஒரு கை பார்த்து விடுகிறது. ஆனால் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நோயைப் பற்றிய தெளிவு கிடைத்த பின்னர் சிகிச்சை பெற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுவும் வீட்டில் இருந்தபடியே! ஆம் நமக்காகவே மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்து தான் இந்த தேசிய டெலிமெடிசின் சர்வீஸ் (National Telemedicine Services) என்று அழைக்கப்படும் "இ-சஞ்சீவனி"! அதனை எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்!

இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சேவை

சாதாரணமாக ஒரு சளி, தலைவலி, காய்ச்சால் என்று வந்தாலே, முதலில் மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என குறைந்தது ரூ.500, 1000 நாம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தரமான சேவைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைத்தாலும், காசு கொடுத்து ஊசி போட்டால் உடல் நலம் சரியாகும் என்ற என்ற மாயைக்குள் இருக்கின்றனர் நம்மில் பலர். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவும், மருத்துவர்களின் கட்டணத்தில் நல்ல தொகையைச் செலவழிப்பதில் இருந்து நம்மைக் காப்பாற்றவும், இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த சேவை உள்ளது.

1

நேஷனல் டெலிமெடிசின் சர்வீஸ்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேஷனல் டெலிமெடிசின் சர்வீஸ் நடைமுறைக்கு வந்து சில வருடங்களாகிவிட்டன. நம்மில் பலர் இதனைப் பற்றி அறிந்திருக்க மாட்டோம். இந்த ஆன்லைன் போர்டல் மூலம் மருத்துவர்கள் தேவைப்படும் பயனர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேஷனல் டெலிமெடிசின் சர்வீஸ் அல்லது இசஞ்சீவனி இந்தியா முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான தொலைத்தொடர்பு ஆலோசனைகளை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை

"இ-சஞ்சீவனி" என்று அழைக்கப்படும் இந்த ஆன்லைன் தளம் பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை எளிதாக அணுக பயனர்களுக்கு உதவுகிறது. இதற்காக யாரும் வெளியில் செல்லவோ, மருத்துவ மனைக்குச் செல்லவோ தேவையில்லை. அவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி தேவையானதைச் செய்யலாம்.

தினமும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு ஆலோசனை

தற்போது நேஷனல் டெலிமெடிசின் சேவையானது நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு தினமும் சேவை செய்து வருகிறது, இது நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் பரவலான தத்தெடுப்பைக் குறிக்கிறது.

ஏற்றுக்கொண்ட முதல் 10 மாநிலங்கள்

ஈசஞ்சீவனியை ஏற்றுக்கொண்டதில் (1033498) முன்னணி 10 மாநிலங்கள் இவைகள் தான். அவற்றில் ஆந்திரப் பிரதேசம் (37,04,258), கர்நாடகா (22,57,994), தமிழ்நாடு (15,62,156), உத்தரப் பிரதேசம் (13,28,889), குஜராத் (4,60,326) ), மத்தியப் பிரதேசம் (4,28,544), பீகார் (4,04,345), மகாராஷ்டிரா (3,78,912), மேற்கு வங்கம் (2,74,344), கேரளா (2,60,654) ஆகியவை அடங்கும். இது தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் இது செயல்பாட்டில் உள்ளது.

டிஜிட்டல் ஹெல்த் சுற்றுச்சூழல் அமைப்பு

"இ-சஞ்சீவனி" இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், தரை மட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது. நேஷனல் டிஜிட்டல் ஹெல்த் மிஷனுக்கு இணங்க, இந்த டிஜிட்டல் முன்முயற்சி, நாட்டில் டிஜிட்டல் ஹெல்த் சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்துகிறது.

ஆண்ட்ராய்ட் பயன்பாடு மூலம் அணுகவும்

eSanjeevaniOPD சேவைகளை இணைய உலாவி (Web Browser) மற்றும் ஆண்ட்ராய்ட் பயன்பாடு மூலம் அணுகலாம். மொபைல் போன் வைத்திருக்கும் எவரும் தேசிய டெலிமெடிசின் சேவையைப் பயன்படுத்தலாம். eSanjeevani இல் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கும் முன் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறுவது எப்படி

1. https://esanjeevani.mohfw.gov.in/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உங்களது மொபைல் நம்பர், OTP கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

2. அடுத்த கட்டத்தில், பயனர்கள் அறிகுறிகளைக் குறிப்பிட்டு குறிப்பிட வேண்டும். அறிகுறிகளின் நீண்ட பட்டியல் உள்ளது, எனவே மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஏற்ப விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.

3. ஆன்லைன் சேவை போர்ட்டல் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் பட்டியலைக் காட்டுகிறது, அவர்களுடன் வீடியோ அழைப்பில் ஆலோசனை செய்யலாம்.

4. இந்த மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை வழங்குகிறார்கள், இவை இந்தியா முழுவதும் செல்லுபடியாகும்.

5. நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கலாம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றலாம்.

இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள ஷேர் கொள்ளுங்கள்!

More News

Read more about: travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+