Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இத்தனை மர்மங்கள் இருக்கின்றன என்று நமக்கு தெரியுமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இத்தனை மர்மங்கள் இருக்கின்றன என்று நமக்கு தெரியுமா?

பாரம்பரியம், கலாச்சாரம், இசை, சிற்பம், நடனம் மற்றும் பல செயல்பாடுகளால் நிறைந்துள்ள சென்னை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரும் நகரமாக உள்ளது. சென்னைக்கு வருகை தரும் எவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடக்காமல் செல்ல முடியாது. ஏன் நாமும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பலமுறை சென்று இருப்போம். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி நாம் நிச்சயம் தெரிந்திருக்க மாட்டோம்! 1873 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பின்னால் பல சுவாரஸ்யமான பலரும் அறிந்திராத உண்மைகள் மறைந்துள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்!

சென்னையின் முக்கிய அடையாளம் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் மற்றும் அதிகம் பார்வையிடப்படும் நகரங்களில் சென்னையும் ஒன்று! தனிழ்நாட்டின் தலைநகராக மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வருவோரை வாழவைக்கும் தாயாக விளங்குகிறது. சுற்றிப் பார்க்க, வேலைக்காக, உறவினர்களைப் பார்க்க, படிக்க என பல லட்சக்கணக்கானோர் தினமும் சென்னை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

சென்னைக்கு வருபவர்கள் எவருக்கும் சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம் பற்றி தெரிந்து இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான மற்றும் பலரும் அறிந்திராத உண்மைகளைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்காது.

மேற்கூறிய அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சித்ரா என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும்..

சென்னையின் முதல் ரயில் நிலையம் இதுவல்ல

சென்னையின் முதல் ரயில் நிலையம் இதுவல்ல

சென்னை பார்க் டவுனில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் புது தில்லி மற்றும் இந்தியாவின் பல முக்கிய மாநிலத் தலைநகரங்களான அகமதாபாத், பெங்களூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் பலவற்றை இணைக்கிறது.

சென்னையின் முதன்முதல் ரயில் நிலையம் இதுவல்ல. 1856 ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையமே சென்னையின் முதன் முதல் ரயில் நிலையமாகும். நாளடைவில் நெரிசல் காரணமாக, ஆங்கிலேயர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜார்ஜ் ஹார்டிங்கின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம்

ஜார்ஜ் ஹார்டிங்கின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம்

147 ஆண்டுகள் பழமையான இந்த சென்ட்ரல் ரயில் நிலையம் "ஜார்ஜ் ஹார்டிங்கின்" வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தென்னிந்தியாவிற்கு வரும் அனைத்து மக்களுக்கும் முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. காக்ரேன்ஸ் கால்வாய் என்று அழைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயின் இருபுறமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இந்த கால்வாயே பிரதான நிலையத்தையும் புறநகர் ரயில் முனையையும் பிரிக்கிறது.

பாரம்பரிய கட்டிட தளமாக பட்டியலிடப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல்

பாரம்பரிய கட்டிட தளமாக பட்டியலிடப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டேஷன் கோதிக் மற்றும் ரோமானஸ்க் மறுமலர்ச்சி பாணியில் கட்டப்பட்டது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் பெயின்ட் பண்ணப்பட்ட ஜன்னல்களும் 136 அடி உயரத்தில் நான்கு முகங்களைக் கொண்ட நான்கு முனை கடிகாரக் கோபுரமும் பழங்கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.

ஆண்டிற்கு இருமுறை மட்டுமே திறக்கப்படும் படிக்கட்டு

ஆண்டிற்கு இருமுறை மட்டுமே திறக்கப்படும் படிக்கட்டு

மணிக்கூட்டு கோபுரத்தின் மேல் அதாவது தரையில் இருந்து 136 அடி உயரத்தில் ஒரு கொடிக் கம்பம் உள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மட்டுமே கொடியேற்றத்துக்காக கடிகார கோபுரத்திற்கு இட்டுச் செல்லும் சுழல் படிக்கட்டு திறக்கப்படும். இந்த படிக்கட்டுகளை நாம் மதராசப்பட்டிணம் படத்தில் பார்த்து இருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

தனித்துவமான சிகப்பு நிற விண்டேஜ் கட்டிடம்

2005 ஆம் ஆண்டு கட்டிடங்கள் வெளிர் பழுப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால், ரயில்வே பயணிகளும், பாரம்பரிய ஆர்வலர்களும், நகரின் வரலாற்றுச் சின்னத்தின் நிறத்தை மாற்றுவதில் ஆர்வம் காட்டி, கட்டிடத்திற்கு பழைய அழகை தக்கவைக்க விரும்பினர். உண்மையில் செங்கல் சிவப்பு நிறம் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஒத்ததாக இருந்தது மற்றும் நகரத்தின் அடையாளமாகவும் அடையாளமாகவும் இருந்தது.

நவீன வசதிகள் அடங்கிய சென்னை சென்ட்ரல்

நவீன வசதிகள் அடங்கிய சென்னை சென்ட்ரல்

பே பிளாட்ஃபார்ம் கொண்ட இந்தியாவின் ரயில் நிலையங்களில் சென்னை ரயில் நிலையம் ஒன்றாகும். அதாவது பிரீமியம் பார்க்கிங் வசதி கொண்ட சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தண்ணீர் இயந்திரங்கள், இலவச வைஃபை வசதி, கழிப்பறைகள், தங்கும் அறைகள், மற்றும் உணவுக் கடைகள் போன்ற வசதிகள் உள்ளன.

அதுமட்டுமின்றி ஸ்டேஷனில் 24 மணிநேரமும் இலவச மருத்துவ வசதி அளிக்கும் காத்திருக்கும் ஆம்புலன்ஸ் உள்ளது. அங்கு பயணிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ மையத்தில் மூன்று படுக்கைகள், பணியில் இரண்டு டாக்டர்கள், நான்கு செவிலியர்கள் உள்ளனர். இந்த மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஈசிஜி வசதி, டிஃபிபிரிலேட்டர் மற்றும் பல அதிநவீன கருவிகள் உள்ளன.

மிக நீண்ட பெயரைக் கொண்ட ரயில் நிலையம்

மிக நீண்ட பெயரைக் கொண்ட ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இரண்டு முறை பெயர் மாற்றம் அடைந்த ரயில் நிலையமாகும். மெட்ராஸ் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமாக முதலில் மாற்றினர். பின்னர் இது மீண்டும் சென்னை அரசால் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டது. இதன் மூலம், உலக அளவில் 2வது பெரிய ரயில் நிலையப் பெயரை பெற்ற ரயில் நிலையம் நம் சென்னை ரயில் நிலையம் ஆகும்.

இந்தியாவில் அரங்கேறிய முதல் ரயில் கடத்தல்

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏப்ரல் 2009 இல் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. ஆம்! சென்னை புறநகர் ரயில் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டது. நாட்டில் இதுவரை தெரிவிக்கப்பட்ட ஒரே ரயில் கடத்தல் இதுவாகும். இந்த சம்பவத்தில் ரயிலைக் கடத்திய நபர் 4 பேர் கொல்லப்பட்டார், 11 பயணிகள் காயமடைந்தனர் என்று குறிப்பிடத்தக்கது!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X