Search
  • Follow NativePlanet
Share
» »உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..!

உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..!

உத்திர பிரதேசத்தின் ஒட்டுமொத்த அடையாளச் சுற்றுலாத் தலங்கள் எதுவெல்லாம் என உங்களுக்குத் தெரியுமா ?. வாங்க, அதுகுறித்து அறிந்துகொள்வோம்.

உத்தரப் பிரதேசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரவலான இந்து கோவில்களே. ஆவாதி உணவு வகைகள், தம் பிரியாணி, கெபாப் உணவு போன்றவை உபியின் அடையாள உணவு வகைகளாகும். பல அற்புதமான வரலாற்று சின்னங்கள் வாய்க்கப்பெற்றிருக்கும் உத்தரப்பிரதேசம் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசிதிபெற்றது. கட்டிடக்கலையின் உன்னத சாட்சியாய் ஒளிரும் தாஜ் மஹாலை கொண்டுள்ள ஆக்ரா, லக்னோ, மீரட், ஃபதேபூர் சிக்ரி போன்ற முக்கியமான வரலாற்று நகரங்கள் இந்த மாநிலத்தில் அடையாளங்களாக உள்ளன. இவை தவிர பாராபங்கீ, ஜவுன்பூர், மஹோபா, தேவ்கர் போன்ற நகரங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும். அதெல்லாம் சரி, உத்திர பிரதேசத்தின் ஒட்டுமொத்த அடையாளச் சுற்றுலாத் தலங்கள் எதுவெல்லாம் என உங்களுக்குத் தெரியுமா ?. வாங்க, அதுகுறித்து அறிந்துகொள்வோம்.

அசோகர் தூண்

அசோகர் தூண்


உத்திர பிரதேசத்தின் அடையாளங்களைப் பட்டியலிட்டால் அவற்றுள் தவிர்க்க முடியாத ஒன்று இந்த அசோகர் தூண். சாரநாத்தில் அமைந்துள்ள இந்த தூண்கள் வட இந்தியாவில் தொடர்ச்சியாக காணப்படுபவைகளாகும். இந்த தூண்களின் பெயருக்கேற்ப, இவற்றை கி.மு.3-ம் நூற்றாண்டில் அசோகர் தான் எழுப்பியிருக்கிறார். இந்த தூண்கள் அனைத்துமே 40 அடிகள் உயரமாகவும், சுமார் ஓரு டன் எடை கொண்டதாகவும் உள்ளன. இந்த தூண்கள் உருவாக்கப்பட்டுள்ள கற்கள், வாரணாசிக்கு அருகிலிருக்கும் சூனார் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்பட்டு சாரநாத்திற்கு கொண்டு வந்து தூண்களாக செதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு தூண்கள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றில் மட்டுமே எழுத்துருக்களைத் தாங்கியவாறு இன்றளவும் நிலைத்து நின்று கொண்டுள்ளன. இவற்றில், நான்கு சிங்கங்களை நான்கு திசைகளிலும் நோக்கியபடி கொண்டுள்ள அசோகர் தூண் மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த சின்னம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் அடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையப்பகுதியை அலங்கரிக்கும் பெருமையையும் பெற்றுள்ளது.

Bpilgrim

வாரணாசியின் படித்துறைகள்

வாரணாசியின் படித்துறைகள்


கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோவில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. வாரணாசி இந்துக்கள் போற்றும் மிகப் புனிதமானதோர் நகரமாகும். இந்து புராணங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ள இந்நகரில் உள்ள படித்துறைகளின் வழியே ஓடும் கங்கை நதியில் புனித நீராடுவோரின் பாவங்கள் யாவும் கரைந்தோடி விடும் என்ற நம்பிக்கை உலவி வருகின்றது. வருடத்தின் எந்த நேரத்தில் வாரணாசி சென்றாலும் இங்கு மக்கள் புனித நீராடுவதைக் காணலாம். முக்கிய மதசார்ந்த விழாக்களின் போது இங்கு நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மணிகர்னிகா படித்துறை தான் வாரணாசி படித்துறைகளுள் மிகவும் புகழ் பெற்றது.

The Ganges

கெளஸ்மி காடுகள்

கெளஸ்மி காடுகள்


கோரக்பூரில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று கெளஸ்மி காடுகள். இந்த காடுகள் சால் மற்றும் செகோயா மரங்களால் நிறைந்துள்ளது. இங்கு குரங்குகள், மான் மற்றும் நரி போன்ற பல விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வனதேவதையான புத்தியா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த காட்டிற்கு மிக அருகில் ஒரு பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா ஆகியன அமைந்துள்ளன.

மூஸாம்மான் புர்ஜ்

மூஸாம்மான் புர்ஜ்


ஆக்ராவில் உள்ள மூஸாம்மான் புர்ஜ் எனப்படும் இந்த கோபுரம் சமான் புர்ஜ் அல்லது ஷா புர்ஜ் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டையின் உள்ளே ஷாஹஹான் கட்டிய திவான் இ காஸ் மாளிகைக்கு அருகே அமைந்திருக்கிறது. எண்கோண வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இந்த கோபுரம் ஷாஜஹான் மன்னரால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோபுரத்திலிருந்து தாஜ் மஹாலின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல அடுக்கு கோபுரத்தில் விலைமதிப்பற்ற கற்கள் அதிகமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்ப்பகுதியில் சல்லடைச்சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட குழிவு அமைப்புகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் அந்தப்புர மகளிர் வெளியே நடப்பவற்றை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

David Castor

ஆனந்த் பவன்

ஆனந்த் பவன்


அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவன் எனும் பெயருக்கு விளக்கமே தேவையில்லை. மகிழ்ச்சி நிறைந்த வீடு எனப்படும் இது இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் நேரு வாழ்ந்த மாளிகையாகும். தற்போது ஸ்வராஜ் பவன் என்று இதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சிதிலமாக கிடந்த இந்த மாளிகை முதலில் நேருஜியின் தந்தையான மோதிலால் நேரு அவர்களால் வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவர் இம்மாளிகையை புதுப்பித்து ஐரோப்பிய இருக்கைகள் மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றை நிரப்பி அக்காலத்தில் ஒரு நாகரிக மாளிகையாக ஆங்கிலேய நாகரிகத்தை ஒத்ததாக உருவாக்கியிருக்கிறார். காலப்போக்கில் இந்த மாளைகை சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அந்நாளைய சிந்தனையாளர்களும் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக மாறிற்றும். சொல்லப்போனால் இந்திய தேசிய விடுதலைப்போராட்டத்தின் அறிவிக்கப்படாத தலைமைச்செயலகமாக இம்மாளிகை திகழ்ந்தது. தற்போது ஒரு நினைவு இல்லமாக வெறுமை வைக்கப்பட்டிருக்கும் இம்மாளிகை ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட் எனும் அறக்கட்டளை அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றின் ஒரு முக்கிய சான்றாக வீற்றிருக்கும் இந்த இல்லத்திற்கு சிந்தனையாளர்களும் தேசாபிமானிகளும் விரும்பி பயணம் செய்வது வழக்கம்.

Balasub

அனூப் தலாவ்

அனூப் தலாவ்


ஃபதேபூர் சிக்ரியில் அக்பரின் பிரத்யேக மாளிகையின் முன்பு அமைந்துள்ள அனூப் தலாவ் தனித்துவமிக்க மிகப்பெரிய தண்ணீர் தொட்டியாகும். காவாப்கா வளாகத்தின் முன் அமைந்துள்ள இத்தொட்டி அக்காலத்தின் சிறப்புடன் விளங்கிய ஒன்றாகும். இந்த செங்கல் கட்டிடம் அழகிய மேடைகளுடன், சிறப்பான கோணங்களுடன் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு புறத்திலும் சிறிய வழித்தடங்களுடன் உள்ளது. பழங்காலங்களில் எந்த நேரத்திலும் சுத்தமான நீர் இருக்கும் வண்ணம் பிரதான நீர்நிலையுடன் இணைக்கப்பட்டிருந்தது. பழைய பதிவுகளின்படி சூரிய ஒளியில் மின்னும் வண்ணம் இத்தொட்டியின் உள்ளே தங்க மற்றும் வெள்ளி நாணயங்கல் போடப்பட்டிருக்கிறது. பின்னர் ஜஹாங்கீர் அந்த நாணயங்களை தர்மமாக கொடுத்திருக்கிறார். தனது குறிப்பேடுகளில் ஒரு கோடியே மூன்று லட்சம் காசுகளை அதிலிருந்து எடுத்து தர்மமாக கொடுத்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

Sanyam Bahga

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X