» »'என்னை அறிந்தால்' - அழகான அப்பா, மகளுடன் நாமும் இனிமையாக பயணம் போகலாம் வாங்க

'என்னை அறிந்தால்' - அழகான அப்பா, மகளுடன் நாமும் இனிமையாக பயணம் போகலாம் வாங்க

Posted By: Staff

ஆக்ஷன் படம் என்ற அடையாளத்தையும் தாண்டி படம் பார்த்து முடித்த பிறகு அஜித்துக்கும் அனிகாவுக்குமான அந்த அப்பா மகள் கட்சிகள் தான் நம் மனதில் நிற்கும். தன் குழந்தை இல்லை என தெரிந்தும் சத்யதேவ்(அஜித்) ஈஷாவின்(அனிகா) மேல் காட்டும் பாசம் பார்க்கும் எல்லோரையும் நிச்சயம் நெகிழ வைக்கும். கதைப்படி அடுத்தடுத்து நிகழும் துயரங்களில் இருந்து மீண்டு வர சத்யதேவும், ஈஷாவும் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்வார்கள். வாழ்கையே மற்றும் அந்த பயணத்தில் நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கலாம் வாருங்கள்

காதலர் தின சிறப்பு சலுகை - ஹோட்டல் கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற்றிடுங்கள்   

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

சத்யதேவும் ஈஷாவும் செல்லும் முதல் இடம் ஜெய்சால்மர் என காண்பிக்கப்பட்டாலும் உண்மையில் அந்த நகரம் ராஜஸ்தானில் இருக்கும் பண்டி என்ற இடமாகும். நீல நிறத்தில் நனைந்தது போன்று இருக்கும் இங்கு நீல நிறத்தில் மட்டுமே வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மிக குறுகலான வீதிகள், திரும்பும் இடமெங்கும் காணக்கிடைக்கும் கோயில்கள், பெரும் வரலாற்று பின்னணி கொண்ட கோட்டைகள், குளங்கள் என ராஜஸ்தானின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இருக்கும் அத்தனை விஷயங்களும் இந்த நகரத்திலும் இருக்கின்றன.

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

நவீனத்தின் தீண்டல் சற்றும் இல்லாத இந்நகருக்கு சுற்றுலா சென்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த உலகத்தில் நுழைந்ததை போன்ற வித்தியாசமான அனுபவத்தை பெறலாம். புகழ்பெற்ற 'பேட் மென்' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் சில காட்சிகளில் இந்நகரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

தரகர்க்ஹ் கோட்டை:

தரகர்க்ஹ் கோட்டை அல்லது நட்சத்திர கோட்டை என அழைக்கப்படும் இந்த இடம் தான் புண்டி நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை காலப்போக்கில் கைவிடப்பட்டு, சிதலமடைந்து காணப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகள் சென்று காணும் வகையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில் இதனுள் சுற்றியிருக்கும் மலைகளை கடந்து செல்வதற்கு ஏற்றவாறு சுரங்கப்பாதைகள் இருந்திருகின்றன. புண்டி நகரின் அழகை இந்த கோட்டையின் மதில்களில் நின்று ரசிக்கலாம்.

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

ராஜஸ்தான் மாநிலத்தின் தங்க நகரம் இந்த ஜெய்சால்மர். சுவாரஸ்யமான வீர வரலாறு கொண்ட அரண்மனைகளும், கோட்டைகளும் இங்கே ஏராளமாக இருக்கின்றன. இந்த கட்டிடங்கள் எல்லாம் மஞ்சள் நிற மணல் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலோ என்னவோ அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஜெய்சால்மர் நகரமே தங்க நிறத்தில் ஒளிர்கிறது. வாருங்கள் இங்கே இருக்கும் சில அருமையான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் கோட்டை:

உலகில் இருக்கும் மிகப்பெரிய கோட்டை வளாகங்களுள் ஒன்றான ஜெய்சால்மர் கோட்டை கி.பி. 1156 ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தின் நடுவில் திரிகுட மலையின் மேல் கம்பீரமாக இது வீற்றிருக்கிறது. இக்கோட்டையினுள் ராஜ் மஹால் என அழைக்கப்படும் ராஜ அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தினர் வசித்து வந்த இந்த அரண்மனையினுள் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த அரச கட்டில், சிம்மாசனம், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை இன்றும் நாம் காணலாம்.

ஜெய்சால்மர் :

ஜெய்சால்மர் :

படா பாக்:

பெரிய தோட்டம் என அர்த்தப்படும் இந்த இடம் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 6கி.மீ தொலைவில். அமைந்திருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தை தோற்றுவித்த மகாராஜா ஜெய்சால் சிங்கின் வழிவந்தவரான மகாராஜா இரண்டாம் ஜெய் சிங் பாலைவனத்தின் நடுவே ஒரு நந்தவனத்தை உருவாக்க விரும்பி ஓரிடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் அதனைசுற்றி சத்த்ரிக்கள் எனப்படும் ஓய்வரைகளையும் கட்டியுள்ளார். மாலை நேரத்தில் இதமான வெயில் நிலவும் வேலையில் இங்கே சென்று பாலைவனத்தின் அழகை ரசிக்கலாம்.

ஜெய்பூர் :

ஜெய்பூர் :

ஜெய்சால்மரில் இருந்து அடுத்ததாக தந்தையும் மகளும் செல்லும் இடம் ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்பூர் ஆகும். இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

 ஹவா மஹால் :

ஹவா மஹால் :

ஜெய்ப்பூர் நகரின் பிரபலமான நினைவுச்சின்னமாக திகழும் இந்த ஹவா மஹால் ஒரு கவிஞராகவும் விளங்கிய சவாய் பிரதாப் சிங்மஹாராஜாவால் 1799ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்த ஐந்து அடுக்கு மாளிகை ஜோஹரி பஜாருக்கு அருகில் அமைந்துள்ளது.

சண்டிகர் - பஞ்சாப் :

சண்டிகர் - பஞ்சாப் :

அஜீத்தும் ஈஷாவும் ராஜஸ்தானில் இருந்து அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் நகருக்கு செல்வார்கள். ராஜஸ்தான் போல இங்கு சுற்றுலாத்தலங்களுக்கு செல்லாமல் ஒரு பஞ்சாபியை போல இருவரும் மிக சந்தோசமாக சில நாட்களை காண்பிக்கப்பட்டிருக்கும். மிக கொண்டாட்டமாகவும், வித்தியாசமாகவும் சில நாட்களை கழிக்க விரும்புபவர்கள் தாரளமாக பஞ்சாப் சென்று பஞ்சாபியர்கள் போல வாழ்ந்தாலே போதும்.

பஞ்சாபில் என்ன செய்யலாம் :

பஞ்சாபில் என்ன செய்யலாம் :

பஞ்சாபின் தவிர்க்க முடியாத அடையாளம் என்றால் அது அவர்கள் அணிதிருக்கும் முண்டாசு தான். சீக்கிய மத வழக்கப்படி அப்படி அணியவேண்டும் என்றாலும் சுற்றுலாப் பயணியாக மூண்டாசு அணிந்துகொண்டு பஞ்சாபில் வலம் வருவது நிச்சயம் பலரை நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்.

பஞ்சாபி உணவுகளை சுவைத்து மகிழலாம் :

பஞ்சாபி உணவுகளை சுவைத்து மகிழலாம் :

இந்தியா முழுக்கவே பஞ்சாபி உணவுகள் கிடைக்கும் என்றாலும் அதை பஞ்சாபில் சென்றே சாப்பிடுவது இன்னும் சுவை கூட்டும். பஞ்சாபி உணவுகளை ஒருமுறை சுவைத்தவர்கள் பின்னர் ஆயுசுக்கும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். சண்டிகர் நகரில் இருக்கும் சில சாலையோரக்கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடவே கூட்டம் அள்ளும். அதிகமாக வெண்ணை கலந்து தந்தூரி முறையில் சமைக்கப்படும் தந்தூரி சிக்கன், மக்கி ரொட்டி, ஆலூ கோபி போன்ற உணவுகள் நாம் நிச்சயம் சுவைத்திட வேண்டிய உணவுகளாகும்.

பெல்லிங் - சிக்கிம் :

பெல்லிங் - சிக்கிம் :

பஞ்சாப் ராஜஸ்தானுக்கு அடுத்து அஜித்தும் ஈஷாவும் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் பெல்லிங் என்ற இடத்திற்கு செல்வார்கள். வெளி உலகுடன் அதிக தொடர்பில்லாத இங்கு இமய மலையின் பசுமையையும், பேரழகையும் ரம்மயமாக ரசித்து மகிழலாம். எந்த விதத்திலும் மனிதனால் மாசுபடாத இந்த ஊரில் இருந்து தான் இமயமலையில் மலையேற்றம் செய்பவர்கள் தங்களின் சாகச பயணத்தை தொடங்குகின்றனர். பிப்ரவரி முதல் ஜூன் வரை பெல்லிங் வர சிறந்த காலகட்டமாகும்.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

கடைசியாக சத்யதேவும் ஈஷாவும் நான்கு வருடங்களை செலவிடும் இடம் சிக்கிம் தலைநகரான கேங்டக் ஆகும். இங்கே ஈஷா சேர்ந்து படிக்கும் அதே பள்ளியில் அஜித் ஆசிரியராகவும் பணியாற்றுவார். கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் இந்நகரம் தான் சிக்கிம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. புத்த மடாலயங்கள் ஏராளமாக இங்கே இருக்கின்றன.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

நாத்து லா கணவாய், ரும்தேக் புத்த மடாயலாம் என்ச்சே மடாலயம், நாதுல்லா பாஸ் (கணவாய்ப்பாதை), நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி, டோ ட்ருல் சோர்ட்டென், கணேஷ் தோக், ஹனுமான் தோக், ஒயிட் வால், தி ரிட்ஜ் கார்டன், ஹிமாலயன் ஜூ பார்க், எம்.ஜி. மார்க் மற்றும் லால் பஜார் போன்ற இடங்கள் இங்கிருக்கும் குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத்தலங்கலாகும்.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

கேங்டக் நகரத்தின் சில அற்புதமான புகைப்படங்கள்.

ரும்தேக் புத்த மடாலயம்.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

கேங்டக் நகரத்தின் சில அற்புதமான புகைப்படங்கள்.

டீஸ்டா நதியின் மேல் அமைந்திருக்கும் பாலம்.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

கேங்டக் நகரத்தின் சில அற்புதமான புகைப்படங்கள்.

கேங்டக்மலைச்சிகரங்கள்.

கேங்டக், சிக்கிம் :

கேங்டக், சிக்கிம் :

கேங்டக் நகரத்தின் சில அற்புதமான புகைப்படங்கள்.

சீறிப்பாயும் டீஸ்டா நதி.