» »தமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா ?

தமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா ?

Written By: Sabarish

கலாச்சார பெருமை மிகு, தொய்மையான பல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள நாடுகளில் உலகமே வியந்து பார்ப்பது நம்ம தமிகம் தான். ஆதி காலம் முதல், மன்னர் காலம் தொட்டு இன்றளவும் தமிழகத்திற்கு ஈடான வேறு மாநிலங்கள் ஏதும் இல்லை என்று கம்பீரமாகக் கூறலாம். கடற்கரைக் கோவில்களும், கங்கை கொண்ட சோழபுரக் கோவில்களும் இjற்கான சான்றுகளாக உள்ளன. இதையெல்லாம் தவிர்த்து தமிழகத்தில் வேறென்ன புராதானமிக்க கட்டிடங்கள் தற்போதும் உள்ளது என தேடிப் போகலாம் வாங்க.

மல்லாசந்த்ரம்

மல்லாசந்த்ரம்


உலகப் புகழ் பெற்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை புதைபொருள் படிவுகளாக கொண்டிருக்கும் மல்லாசந்த்ரம் என்ற இடம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கு, டோல்மென் எனப்படும் பழங்கால கல்லறைகளை கட்டுவதற்காக வைக்கப்படும் பெரிய பாறைகள் உள்ளன. டோல்மென் என்னும் வார்த்தையின் அர்த்தம் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தூண் போன்ற கற்கள் பாறையால் மேல் மூடிவைக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கிறது.

Venkasub

முதுமக்கள் தாழிகள்

முதுமக்கள் தாழிகள்


இந்த கல்லறைகள் மட்டுமல்லாமல், கற்பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், கெயர்ன் வழிகாட்டி வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் ஆகியவையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இறப்பு மற்றும் அதன் பின் வரும் மறுவாழ்வு தொடர்பான கல்லறைகள், கெயர்ன் வழிகாட்டி வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளதால் மல்லாசந்த்ரம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் என கருதப்படுகின்றது.

Venkasub

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு


காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது ஆயிரம் ஜன்னல் வீடு. இந்த வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நகருக்கு நீங்கள் வந்து, இவ்வீட்டைப் பார்க்க விரும்பினால், வழியில் பார்க்கும் யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள்.

Yashima

அமைப்பு

அமைப்பு


சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள ஆயிரம் ஜன்னல் வீடு 1941-ம் ஆண்டு, சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மத்திப்பில் கட்டப்பதாகும். இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்னல்களும் உள்ளன.

KARTY JazZ

காஞ்சி குடில்

காஞ்சி குடில்


மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள், இவ்வூரின் பெருமையை உணர்ந்து கொள்வது மட்டும் அல்லாமல் இந்நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொள்ளும் வகையிலும் இது உள்ளது.

tshrinivasan

திருப்பூர் குமரன் நினைவுத் திருவுருவச் சிலை

திருப்பூர் குமரன் நினைவுத் திருவுருவச் சிலை


சுதந்திரப் போரட்ட வீரரான திருப்பூர் குமரனின் நினைவாக அவரது திருவுருவச் சிலை இங்கு எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழருக்கும் திருப்பூர் குமரனை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சுதந்திரப் போராட்டத்தின் பொழுது ஒரு முறை திருப்பூரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அப்பொழுது திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் காவலர்களால் லத்தியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால் உயிர் துறந்த பின்னரும் இந்திய தேசிய கொடியை கைகளில் இறுக்கமாக பிடித்தபடி இருந்தார். அந்த மகா தியாகி மற்றும் சிறந்த தேச பக்தரின் நினைவாக திருப்பூரில், திருப்பூர் குமரன் சாலை என்ற மிக அகல மற்றும் நீளமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Atomking

ஃப்ரென்ச் பங்களா

ஃப்ரென்ச் பங்களா


ஃப்ரென்ச் பங்களா அல்லது ஃப்ரெஞ்சு கோட்டை என்று அழைக்கப்படும் இந்த மாளிகை வேலூரில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இம்மாளிகைக்கு பின்னால் ஒரு காதல் கதையும் சொல்லப்படுகிறது. இன்றும் மைசூர் ராஜபரம்பரைக்கு சொந்தமான இந்த மாளிகை அவ்வம்சத்தை சேர்ந்த ஒரு இளவரசரால் கட்டப்பட்டிருக்கிறது. வெளி நாட்டில் கல்வி பயில சென்ற இந்த இளவரசர் ஒரு ஃப்ரெஞ்சு பெண்மணியை காதலித்து மணம் செய்து கொண்டதாகவும் பின்னர் இந்தியாவில் தனது ஃப்ரெஞ்சு மனைவிக்காகவே இம்மாளிகையை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

Kamel15

அயல்நாட்டு கலைப் பொருட்கள்

அயல்நாட்டு கலைப் பொருட்கள்


பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களை இம்மாளிகை கொண்டிருக்கிறது. இதன் கட்டுமானம் சுண்ணாம்புக்கற்கள் மற்றும் கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மாளிகையின் நான்கு மூலைகளிலும் காவற்கோபுர அமைப்புகளும் காணப்படுகின்றன. ரோமானிய குளியல் முறை சார்ந்த ஒரு கிணறு அமைப்பும் இதன் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.

Kamel15

ஜான் சுல்லிவன் நினைவிடம்

ஜான் சுல்லிவன் நினைவிடம்


ஜான் சுல்லிவன் நினைவிடம் கண்ணேரிமுக்கு என்ற இடத்தில உள்ளது. கோத்தகிரி நகரின் மையத்திலிருந்து 2 கிலோ தொலைவில் இந்த இடம் உள்ளது. ஜான் சுல்லிவன் உதகையில் முதன் முதலில் குடியமர்ந்த ஆங்கில ஆட்சி அலுவலர் ஆவார். நீலகிரிக்கு இப்போது இருக்கும் புகழுக்கு இவரே காரணம். இவரது காலத்தில் இங்குள்ள பூர்வீகர்களின் பிரச்சனைகளுக்காக போராடி அவர்களின் மதிப்பைப் பெற்றவராக அறியப்படுகிறார். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிடப்படுவது பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இவரும் ஒரு காரணம் ஆவார். கி.பி 1788ல் பிறந்த இவர், கி.பி. 1855ல் இறந்தார். ஜான் சுல்லிவன் நினைவிடம் ஒரு காலத்தில் அவர் குடியிருந்த இடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. பெத்தக்கல் பங்களா என்று அறியப்படும் இங்கு நீலகிரி ஆவண மையம் மற்றும் நீலகிரி அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.

Hari Prasad Sridhar

வேலூர் மணிக்கூண்டு

வேலூர் மணிக்கூண்டு


வேலூர் நகரின் மையப்பகுதியில் கே.வி. ரோடு எனும் சாலையில் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா நினைவாக இந்த மணிக்கூண்டு எழுப்பப்பட்டிருக்கிறது.

Barry Mangham

அறப்பலீஷ்வரர் கோவில்

அறப்பலீஷ்வரர் கோவில்


அறப்பலீஷ்வரர் கோவில், வல்வில் ஓரி என்னும் மன்னனால் கிபி 1 அல்லது 2ஆம் நூற்றாண்டில் கொல்லிமலையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரியகோவிலூரில் அமைந்திருக்கும் இக்கோவிலில் இருந்து ஆகாயகங்கை அருவி விழும் அழகிய இயற்கை காட்சியை காணலாம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் பல சோழர் காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியின் போது பழங்கால கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அறப்பலீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கம் ஒரு விவசாயி நிலத்தை உழும் போது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் மண் வெட்டியால் அடிபட்டு அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும் அந்த காயம் இன்றளவும் அந்த லிங்கத்தில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Karthickbala

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்