Search
  • Follow NativePlanet
Share
» »மதுரைக்கு போறீங்களா? மறக்காம இந்த உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு வாங்க

மதுரைக்கு போறீங்களா? மறக்காம இந்த உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு வாங்க

தமிழ்நாட்டின் ஒரு முக்கிய, பிரபலமான நகரங்களில் ஒன்று மதுரை. அதன் பாரம்பரியமும், பழமை வாய்ந்த கோவில்களும், ருசியான உணவுகளும், கலாச்சார அழகும் கொண்ட தென்னிந்தியாவின் சங்க தமிழ் நகரம் என்றும், கோவில்களின் நகரம் என்றும் அழைக்கப்படும் ஊராகும். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை என்றும் பெயர் சொன்னதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், மல்லிகைப்பூவும் தான் . அதே போல் மதுரையில் சாப்பிட வேண்டிய உணவு என்றதும் நினைவிற்கு வருவது ஜில் ஜில் ஜிகர்தண்டா தான். ஆனால் அது மட்டுமல்ல இன்னும் ஏராளமான, மிகவும் பிரபலமான உணவுகள் இங்கு உள்ளன. நீங்கள் மதுரைக்கு சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய பிரபலமான, சுவையான ஸ்பெஷல் உணவுகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Madurai food

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா என்பது ஒரு பிரபலமான குளிர்பானம். பால், பாதாம், நன்னாரி சிரப், மற்றும் ஐஸ்கிரீம் கலந்து தயாரிக்கப்படுகிறது.இது மதுரையின் சிக்நேச்சர் உணவுகளில் ஒன்றாக உள்ளது. பல ஆண்டுகளாக மதுரை மக்களின் ஃபேவரைட் பானமாக இருக்கும் இந்த ஜிகர்தண்டா, காதல் படம் வந்த பிறகு தமிழகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி விட்டது.

பருத்திப் பால்

பருத்திப் பால் என்பது மதுரையின் ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான பானம். இது பருத்தி விதையிலிருந்து தயாரிக்கப்படும், சுவையும், உடலுக்கு பயன்களும் கொண்ட ஒரு சிறப்பு பானமாகும்.இது உடல் சூட்டைக் குறைக்கும், ஆரோக்கியமான சக்தி பானம் என்பதால் பண்டைய காலத்திலிருந்தே பிரபலமாக உள்ளது.மதுரை வந்தால் பருத்திப் பாலை கண்டிப்பாக சுவைத்து பார்க்கலாம்.

புரோட்டா

மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் உணவு மடிப்பு மடிப்பாக இருக்கும் புரோட்டா தான். மதுரை உணவுகளில் புரோட்டாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதன் தனித்துவமான செய்முறை, சால்மா எனப்படும் குருமா, மற்றும் மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிடும் முறையால் இது உலகப் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக கொத்து பரோட்டா, மிகவும் பிரபலம். இது குழம்பு மற்றும் கோழிக்கறி மற்றும் மட்டனுடன் சேர்த்து பரிமாறப்படும்.

Madurai food

மீன் குழம்பு :

மதுரையின் மீன் குழம்பு, அதிகமான மசாலா மற்றும் செட்டிநாடு ஸ்டைலில் செய்யப்படும் பிரபலமான உணவாகும். மதுரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய மீன் வகைகளில் ஒன்று அயிரை மீன். ஆறுகளில் கிடைக்கும் இந்த அயிரை மீன் கொண்டு சமைக்கும் மீன் குழம்பு மதுரையில் மிகப் பிரபலமான ஒன்றாகும். வெளியூரிலிருந்து வரும் பிரபலங்கள் தேடி உண்ணும் உணவுகளில் அயிரை மீன் குழம்புக்கு முக்கிய இடம் உண்டு.

மட்டன் பிரியாணி

மதுரை உணவுகளில் மட்டன் பிரியாணி என்பது தனி இடம் பெற்றுள்ளது.மெல்லிய, நறுமணமான சீரகசம்பா அரிசியை பயன்படுத்தி செய்யப்படுவதால் இதன் சுவை மற்றும் மணம் அனைவரையும் சுண்டி இழுத்து, நாக்கில் எச்சில் ஊற வைத்து விடும். இதன் தனித்துவமான மணமே வேண்டாம் என்பவர்களுக்கு பசியை தூண்டி விடும். மதுரை பிரியாணிக்கென்றே தனி சிறப்பு உண்டு.

மட்டன் நல்லி குழம்பு : மட்டன் நல்லி குழம்பு என்பது மதுரை மற்றும் தென்னிந்தியாவில் பிரபலமான மற்றும் சுவையான ஒரு உணவு வகையாகும். நல்லி எலும்பு (Bone Marrow) சேர்த்து தயாரிக்கப்படுவதால், இது மிகவும் சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். மதுரை நல்லி குழம்புகென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். கிடாய் கறி உணவுகளுக்கு மதுரை எப்போதுமே ஃபேமஸ் தான்.

பட்டர் ஃபன்

மதுரை பட்டர் ஃபன் என்பது மதுரை சிறப்பு ஸ்நாக்ஸ்களில் ஒன்றாகும். வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சுவையான ஃபன் தயாரிக்கப்படுகிறது.மாலை நேரங்களில் கிடைக்கும் இந்த ஸ்நாகஸ் மதுரையில் பேமஸான ஒன்றாகும்

More News

    Read more about: madurai madurai tour tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+