» »அட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..

அட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..

Written By: Sabarish

லவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என தட்டிக் கழிக்க விரும்புவதில்லை. பைக்கிலோ, காரிலோ பனிமூட்டம் நிறைந்த சாலையில், காதலியின் கரத்தைக் கைப்பற்றியவாறு ரம்மியமான ஓர் பயணம் எல்லாரும் விரும்பும் ஒன்றுதானே. அதுவும், கொஞ்சம் லாங் ட்ரிப், நெருங்கிய நண்பர்களுடன் சென்றால் குதூகளத்துக்கா பஞ்சம். இப்படி, இந்தியாவில் மனதை மயக்கும் வகையிலான சாலைகள் எங்கவெல்லாம் இருக்கு என தெரியுமா ? வாருங்கள், அப்படிப்பட்ட சாலையில் பயணம் மேற்கொள்வோம்.

மும்பை - கோவா

மும்பை - கோவா


மும்பையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-48யில் சுமார் 587 கிலோ மீட்டர் பயணம் செய்தால் கோவாவை அடையலாம். மும்மை, புனே, கோலாப்பூர் வழியாக செல்லும் இச்சாலையின் ஓரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களும், சூரிய ஒளியில் மிளிரும் மலையின் முகடுகளும் மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும். கோலாப்பீரில் இருந்து கங்கவள்ளி, பனாஜி வழியாகவும் 635 கிலோ மீட்டர் பயணித்தால் கோவாவை அடையலாம். ஆனால், இது கூடுதல் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Nikkul

பெங்களூர் - மூணார்

பெங்களூர் - மூணார்


பெங்களூரில் இருந்து மூணார் செல்ல திட்டமிட்டால் ஓசூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக பொள்ளாச்சி சென்று மூணாரை அடையலாம். இந்த பயணத்தில் போது தேசிய நெடுஞ்சாலையில் எண்ணற்ற காட்சிகள் உங்களது மனதைக் கொள்ளைகொள்ளும். அதிலும், பொள்ளாச்சியில் இருந்து மூணார் சாலை வாகன நெரிசலற்ற, இருபுரமும் பசுமைக் காடுகளால் நிறைந்து, வாய்பிருந்தால் வனவிலங்குகளையும் நேரடியாகக் காண முடியும். ஜில்லென்ன இப்பகுதிக்கு உங்க துணைவிய மட்டும் கூட்டிட்டு போயி பாருங்க...

Bimal K C

தில்லி - லே

தில்லி - லே


தில்லியில் இருந்து சண்டிகாரைக் கடந்து அடர் பனிப் பிரதேசம் தான் இந்த லே. ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்ட இப்பகுதி வருடந்தோரும் பனிப்பொழிவால் ஜில்லென்று உறையும் தன்மையைக் கொண்டுள்ளது. இங்கே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால் சுமார் 1014 கிலோ மீட்டர் பனிகளால் சூழப்பட்ட சாலையைக் கடக்க வேண்டும். இமாச்சலைக் கடந்து வளைந்து நெளிந்த சாலையில் பின் இருக்கையில் நண்பரோ அல்லது மனதிற்கு விருப்பப்பட்டவரோ... கொஞ்சம் கூட தயங்காம ஒரு உள்ளாச ட்ரிப் போக இதவிட பெஸ்ட் சாய்ஸ் வேற ஏதாவது இருக்கா ?

Neil Satyam

வதோதரா டூ கட்ச்

வதோதரா டூ கட்ச்


வதோதராவில் இருந்து 513 கிலோ முட்டர் தொலைவில் உள்ள கட்ச் பசுமை நிறைந்த குளிர்பிரதேசம் இல்லை. முற்றிலும் வறண்ட பாலைவனப் பூமி. இருப்பினும் ஆண்டுதோரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுத்து வரக் காரணம் இங்குள்ள சாலைகளும், உப்பலங்களுமே. கட்ச் மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி 'ராண் ஆப் கட்ச்' என்று அழைக்கப்படுகிறது.

Nagarjun Kandukuru

பெங்களூர் - கூர்க்

பெங்களூர் - கூர்க்


பெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 75யில் சுமார் 264 கிலோ மீட்டர் குனிகல், யதியூர், வழியாக பயணித்தால் கூர்க் மாநிலத்தை அடையலாம். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர் வனக் காடுகளின் நடுவே பசுமை போர்வையின் ஊடாக பயணிக்கும் அனுபவம் அவ்வளவு இனிமையானது. சில்லென்ற காற்று, பறவைகளின் ஓசை உங்களை வரவேற்கும் விதமே தனி. இங்கு சென்றால் அதிகாலைப் பொழுதில் கூர்க் வனக் காடுகளில் ஜீப்பில் சவாரிசெய்வதை தவறவிட்டுறாதீங்க.

Salmanrkhan91

கொல்கத்தா - குமான்

கொல்கத்தா - குமான்


கொல்கத்தாவில் இருந்து அலகாபாத், லக்னோ வழியாக உத்திரகாண்டில் உள்ள குமானை அடையலாம். சுமார், 1395 கிலோ மீட்டர் பயண தூரத்தில் கொல்கத்தா முதல் அலகாபாத் tரை 858 கிலோ முட்டர் நேர் கோட்டில் பயணிப்பதைப் போல இருக்கும்.

Rajarshi MITRA

ஜெய்பூர் - ரண்தம்போர்

ஜெய்பூர் - ரண்தம்போர்


ஜெய்பூரில் இருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தானுக்கு உட்பட்டது ரண்தம்போர். சுற்றிலும் மலை முகடுகள், நடுவே புட்களால் ஆன சமவெளிக் காடு, தேசியப்பூங்கா என இருசக்கர வாகனத்தில் பயணிக்க ஏற்ற பகுதி இதுவாகும். இதைத் தவிர்த்து கோட்டைகளும், வன விலங்கு சரணாலயமும் என ஏரளமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஜேய்பூரில் இருந்து இதன் சாலையானது சற்று பாலைவத்தைப் போல தோற்றம் கொண்டதாக இருந்தாலும் போக்குவரத்து இடையூரின்றி உரையாடிக் கொண்டே செல்ல ஏற்ற சாலையாக உள்ளது.

Mayank Bhagya

சென்னை - ஏலகிரி

சென்னை - ஏலகிரி


வார விடுமுறை நாட்கள்ல சும்மா சின்னதா ஒரு ட்ரிப் போகலாம்னு பிளேன் பன்றவங்க வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏலகிரிக்கு போய்ட்டு வாங்க. வளைந்து நெழிந்த மலைப் பாதை, காலைவேலையில் வீசும் தென்றல், நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் சொக்கவைக்கும் சொர்க்கத்தை பார்க்கலாம். உதகை, கொடைக்கானல்ல ஒப்பிடும்போது ஏலகிரி சின்னதாக இருந்தாலும் ஓரிரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

L.vivian.richard

மும்பை - மவுன்ட் அபு

மும்பை - மவுன்ட் அபு


மும்பையில் இருந்து 766 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரம் மவுன்ட் அபு. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும் கொண்ட தனிச்சிறப்புமிக்க பீடபூமியை உருவாக்குகிறது. இம்மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம், குரு ஷிங்கார் ஆகும். ஏரிகளுக்கும், நீர் வீழ்ச்சிகளுக்கும், பசுமைமாறாக் காடுகளுக்கும் உங்களை முழுமையாக மெய்மறக்கச் செய்திடும்.

Camaal Mustafa Sikander aka Lens Naayak

பெங்களூர் - ஊட்டி

பெங்களூர் - ஊட்டி


தென்னிந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம், பேரச் சொன்னாலே உடலில் சிலிர்ப்பூட்டும் மலைப் பிரதேசம், ஏன் இந்தியாவில் மலைகளின் இராணி என இதன் பெருமைகளைச் பட்டியலிட்டாலும் மிகையாகாது, அதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் சிறப்புவாய்ந்த உதகமண்டலம் என்னும ஊட்டி. பெங்களூரில் இருந்து 417 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இதனை அடைந்துவிடலாம். பெங்களூரில் இருந்து இதற்கான சாலையில் என்னதான் நீங்கள் ரசிக்கக் கூடிய காட்சிகள் நிறைய இருந்தாலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை அடையும் வரை உங்கள் கண்ணுக்கு ஒரே விருந்தாகத்தான் இருக்கும்.

Ambigapathy

கவுகாத்தி - தவாங்

கவுகாத்தி - தவாங்


தவாங் இந்தியாவின் வடகிழக்கில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இங்கு பிரபலமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கவுகாத்தியில் இருந்து 444 கிலோ மீட்டர், பாதிக்குப் பாதி சமவெளியும், அடல் மலை வழிப்பாதையும் கொண்டது. மலையேற்றம் துவங்கியது முதல் ஒவ்வொரு கிலோ மீட்டரும் பல நினைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.

Chaduvari

ராஜஸ்தான் - தியூ

ராஜஸ்தான் - தியூ


ராஜஸ்தானில் இருந்து சுமார் 935 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது தியூ மாவட்டம். இறுக்கமற்ற உல்லாச வாழ்க்கை இயல்புடன் காட்சியளிக்கும் இது தன் இயற்கை எழில் அம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஜம்போர் பீச், தேவ்கா பீச், வைபவ் வாட்டர் வேர்ல்டு, ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்', ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் ஜெரோம் ஆகிய சுற்றுலா அம்சங்கள் தமன் சுற்றுலாவில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

Akkida

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்