Search
  • Follow NativePlanet
Share
» »வளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்!

வளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்!

என்னங்க, சவால்னு சொன்னதுமே எல்லாரும் தயாராகிட்டிங்க போல. சந்தோசம் தான், ஆனா நீங்க இப்ப பாக்கப் போர சாலைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்லக்கூடியது அல்ல. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அதற்கு ஏற்ற சொர்க்க வாசல் என்றே இதனைக் கூறலாம். நண்பர்களுடன் செல்பவர்கள், குடும்பத்தினர் என யாரும் வீம்புக்கு இச்சாலையை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாமல் சற்று கவனமுடனேயே பயணியுங்கள். ஏனென்றால் சவாலை விட நமக்கு முக்கியமான விசயம் நிறையவே இருக்கு. சரி வாங்க, அப்படி நம்மலை அச்சுருத்துர சாலை எல்லாம் எங்க இருக்குன்னு பார்க்கலாம்.

நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் என்றதுமே ஓரளவிற்கு புரிந்திருக்க வேண்டும் எந்த சாலை என்று. புரியாதவங்களுக்கு ஒரு சின்ன க்ளு, இது ஒரு மலைப் பாதை. அடி ஆமாங்க, இப்ப நம்ம பாக்கப் போரது, இல்ல, இல்ல பயணிக்கப் போறது நாமக்கலில் இருந்து கொல்லிமலைக்குத் தான். நகரில் இருந்து முதுகபட்டி, சேந்தமங்கலம் வரை சமவெளிப் பகுதியில் எளிதில் பயணித்திடலாம். அதற்கு பின் வரும் சாலை கூட காரவல்லி வரை இருபுறமும் பசுமை நிறைந்த சாலையாகத்தான் இருக்கும். இங்கிருந்துதான் உங்களது வாகன ஓட்டும் திறனை பரிசோதிக்கக் கூடிய சாலையே ஆரப்பமாகிறது.

Dhiviyan R

காரவல்லி - கொல்லி மலை

காரவல்லி - கொல்லி மலை

கொல்லி மலை சிறப்புகளை பட்டியலிட முடியாது. மலையில் எங்கு சென்றாலும் இயற்கை அம்சங்களும், சித்தர் குகை, திருத்தலங்கள், அருவிகள்னு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதில், இச்சாலை கூட பிரசிதிபெற்றிருப்பது ஆச்சரியம் தான். இந்தியாவின் சிறந்த பந்தையக் கார் ஓட்டுநரே இச்சாலையில் ஒரு முறை திகைத்துப் போய்விட்டாருன்னா பாருங்களேன்.

Dilli2040

அப்படி என்னதான் உள்ளது ?

அப்படி என்னதான் உள்ளது ?

தென்னிந்தியாவிலேயே அதிக கொண்டை ஊசி வளைவு கொண்ட மலையில் மிக முக்கியமானது நாமக்கல், கொல்லி மலை தான். ஆமாங்க, இந்த மலையில் அடுத்தடுத்து வரும் கொண்டை ஊசிகளின் வளைவு புதிதாகப் பயணிக்கும் எவருக்கும் தலைசுற்ற வைத்திடும். அத்தனை வளைவுகள்.

எத்தனை வளைவுகள் ?

எத்தனை வளைவுகள் ?

காரவல்லியில் இருந்து செம்மேடு நெருங்கும் வரை கையில் இருந்து தவறி விழுந்த நூடுல்ஸ் போல அடுத்தடுத்து வருது 70 கொண்டை ஊசி வளைவுகள். அதுவும் வெறும் 20 கிலோ மீட்டருக்கு உட்பட்ட தொலைவுல. இப்ப சொல்லுங்க, இச்சாலையில் வாகனம் ஓட்ட தனிப் பயிற்சி காட்டாயம் தேவை தானே.

முள்ளி - ஊட்டி

முள்ளி - ஊட்டி

கொல்லி மலைக்கு அடுத்து தமிழகத்தில் அதிக கொண்டை ஊசி முனை கொண்ட சாலை முள்ளியில் இருந்து ஊட்டி செல்லக்கூடிய சாலை தான். இருபுரமும் அடர் பச்சை நிறைந்திருக்க சட்டென அடுத்தடுத்து வருகிறது 43 ஊசி வளைவு முனைகள்.

வால்பாறைக்கு அடுத்தபடியாக அதிக கொண்டை ஊசி வளைவுகளை இச்சாலை சற்று சவாலான ஒன்று தான். அவ்வப்போது யானைகளைக் கூட இச்சாலையில் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கேத்தி காட்சி முனைக்குப் பின் சாலை கொஞ்சம் சுமார்தான். ஒற்றை வழி மலைப்பாதை போல காணப்படும் அங்கே மலைப் பாதையில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இன்றி தோன்றும்.

பொள்ளாச்சி - வால்பாறை

பொள்ளாச்சி - வால்பாறை

என்னதான் இருந்தாலும், பொள்ளாச்சி - வால்பாறை வரையிலான சாலையை எதனாலும் அடித்துக் கொள்ள முடியாது. ஆனா, இயற்கை சீற்றத்தால அப்ப அப்ப அதுவே சேதமாகிக்கும். ஆனால், கோடை காலத்தில் இச்சாலையில் பயணிப்பதை எந்த வரிகளாலும் விளக்கிவிட முடியாது. அத்தனை அழகு நிறைந்தது. கொஞ்சம் ஆபத்தும் கூடவே. ஆழியார் தொடங்கி வால்பாறை வரை 40 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாகத்தான் இருக்கும்.

அழகு நிறைந்த ஆபத்து

அழகு நிறைந்த ஆபத்து

இந்த வால்பாறை கொண்டை ஊசி முனை சாலைகள் ஒவ்வொன்றிலும் பல இயற்கை அம்சங்களை ரசித்தபடியே பயணிக்க முடியும். ஆழியார் அணையின் முழுக் காட்சி, உயர்ந்த பாறையில் சருக்காமல் நிற்கும் வரையாடுகள், சிங்கவால் குரங்குகளின் சேட்டை, திடீரென முன்னே தோன்றும் காட்டு யானை என எந்ததனை அழகுகளை இந்த சாலை கொண்டுள்ளதோ அதற்கு ஈடாக சற்று ஆபத்தையும் கொண்டுள்ளது. கொண்டை ஊசி முனையில் சிறிது தவறினாலும் பேராபத்துதான். பொருமையாக இயற்கையை ரசித்தபடியே பயணிக்க விரும்புவோருக்கு சூப்பர் சாலை இதுதான்.

Jaseem Hamza

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X