
வணக்கம் நண்பர்களே. இது தமிழ் நேட்டிவ் பிளானட். தமிழின் நம்பர் 1 சுற்றுலா இணைய வழிகாட்டி. சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கான முதன்மை தளம். உங்களுக்கு பயனுள்ள வகையில் பல இடங்களைப் பற்றியும், அதன் சிறப்புகள், செல்லும் நேரம், எப்படி செல்வது என்பன பற்றியும் நிறைய தகவல்களைத் திரட்டி, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியாம் நம் செம்மொழி தமிழில் தந்துவருகிறோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கவிருப்பது ஒரு தேசிய நெடுஞ்சாலையைப் பற்றி.
தேசிய நெடுஞ்சாலையைப் பற்றி தெரிந்துகொள்ள இப்போது என்ன அவசியம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலையை பின்பற்றி சென்றால் நீங்கள் சென்னையிலிருந்து கொல்கத்தாவை எளிதில் அடையலாம். அதுமட்டுமல்லாமல், காணவேண்டிய இடங்கள், நிறைய சுற்றுலாத் தளங்களையும் இங்கு காணமுடியும். தேசிய நெடுஞ்சாலை எண் 16 தான் அது. வாருங்கள் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல ஒரு சூப்பரான பயண வழிகாட்டியை பார்க்கலாம்.

சென்னை
இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம். ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி' என்றே விளிக்கும் ஒரு காலமும் இருந்திருக்கிறது. திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.
சென்னையின் சுற்றுலாத் தளங்கள்
பெசன்ட் நகர் கடற்கரை, மாங்காடு காமாட்சியம்மன் கோயில், அஷ்டலட்சுமி கோயில், காளிகாம்பாள் கோயில், தக்சனசித்ரா, கிஷ்கிந்தா தீம் பார்க், சாந்தோம் தேவாலயம், சென்னை முழுவதுமுள்ள மால்கள், பிர்லா கோளரங்கம், கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், ராமகிருஷ்ண மடம், தேவி கருமாரியம்மன் கோயில், ஜகன்னாத் கோயில், மெரினா கடற்கரை, வடபழனி முருகன் கோயில், நவகிரகக் கோயில்கள் போன்ற எண்ணற்ற இடங்கள் சென்னையில் காண இருக்கின்றன.
சென்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதைச் சொடுக்குங்கள்.

நெல்லூர்
சென்னையிலிருந்து நெல்லூர் 175 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் தொடங்கிய நம் பயணம் தேநெ எண் 16ல் செல்லும்போது முதலில் வரும் பெரிய பகுதி இதுதான். இதே சாலையில் முன்னதாக பழவேற்காடு ஏரி, ஸ்ரீஹரிகோட்டா, காளகஸ்தி, திருப்பதி ஆகிய இடங்கள் வரும். அவற்றுக்கு வேறு சாலையில் பயணிக்கவேண்டும்.
நெல்லூர் நகரமானது பெண்ணா ஆற்றின் தென் கரையில் அமைந்திருக்கிறது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து விஜயவாடா நகரம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் இது முக்கியமான தொழில் மற்றும் வியாபாரக்கேந்திரமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் மிகச்சிறந்த கட்டுமான வசதிகளுடன் வளர்ந்துவரும் செழிப்பான நகரமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
நெல்லூருக்கு அருகில் பல இயற்கை எழில் அம்சங்களும் நிறைந்துள்ளன. இவற்றில் மைப்பாடு பீச், புலிகாட் ஏரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நேலபட்டு பறவைகள் சரணாலயமும் நெல்லூருக்கு அருகில் உள்ளது. இங்கு பல அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன. ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் மட்டுமல்லாமல் நெல்லூரில் வேறு பல புராதனக்கோயில்களையும் பயணிகள் தரிசிக்கலாம். இவற்றில், நகரமையத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ல நரசிம்மஸ்வாமி கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நெல்லூருக்கு அருகில் உள்ள சோமசீலம் எனும் இடம் ஒரு பிரபலமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. அற்புதமான இயற்கை காட்சிகளுடன் அமைதி தவழும் ஏகாந்த ஸ்தலமாக இந்த சோமசீலம் காட்சியளிக்கிறது.
நெல்லூர் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்
Indian7893

குண்டூர்
நெல்லூரிலிருந்து குண்டூர் 243 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொதுவாக 4 மணி நேரங்கள் ஆகின்றன. போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இருக்காது. இங்கு நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
குண்டூர் மாவட்டம் கி.மு 500 வரை நீளும் மிகப்புராதனமான வரலாற்றுப்பின்னணியை பெற்றுள்ளது. வேறு எந்த பிரதேசமும் தென்னிந்தியாவில் இந்த அளவுக்கு பழமையான வரலாற்றுப்பின்னணியை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டூர் மாவட்டம் அமைந்திருக்கும் இடத்தில் புராதன காலத்தில் பிரதிபாலபுரம் அல்லது பட்டிபுரோலு எனும் ராஜ்ஜியம் இருந்ததாக தெரியவருகிறது. 922 - 929ம் ஆண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வெங்கி சாளுக்கிய வம்ச அரசரான முதலாம் அம்மராஜா என்பவரது ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஓட்டுக் குறிப்புகளில் குண்டூர் இடம்பெற்றுள்ளது. 1147 - 1158 ம் ஆண்டுகளைச்சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளிலும் குண்டூர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் குண்டூர் நகரம் கர்த்தபுரி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தபுரி எனும் பெயருக்கு குளங்களால் சூழப்பட்ட ஊர் என்பது பொருளாகும்.
சீமாந்திரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் குண்டூர் நகரம் கொண்டவீடு கோட்டை, உண்டவல்லி குகைகள், அமராவதி, உப்பலபாடு தோட்டப்பூங்கா மற்றும் பிரகாசம் அணைக்கட்டு போன்ற சுற்றுலா அம்சங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
குண்டூர் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்
IM3847

விஜயவாடா
குண்டூரிலிருந்து விஜயவாடா 1 மணி நேரத் தொலைவில் தான் இருக்கிறது. வெறும் 45 கிமீ தூரம் பயணித்தால் இந்த இடத்தை அடையலாம்.
பல ராஜவம்சங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் இந்த விஜயவாடா நகரம் கண்டு வந்துள்ளது. 15ம் நூற்றாண்டுகளில் கலிங்கத்தில் கோலோச்சிய கஜபதி வம்சம் தொடங்கி, கிழக்குச்சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய கிருஷ்ணதேவராயர் ஆட்சி வரை பல அரசாட்சிகளுக்குள் இந்த நகரம் இருந்து வந்துள்ளது. பல புராணக்கதைகள் மற்றும் ஐதீகக்கதைகளிலும் விஜயவாடா நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள இந்திரகீலாத்ரி மலையில்தான் அர்ஜுனனுக்கு சிவன் வரம் தந்தருளியதாக கூறப்படுகிறது. ஒரு புராணக்கதையின்படி, மஹிஷாசுரனை வதம் செய்த பின்னர் இந்த ஸ்தலத்தில்தான் துர்க்கை ஓய்வெடுத்ததாகவும், எனவே இதற்கு விஜய-வாடா என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன. மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.
மேலும் தெரிந்துகொள்ள:
Vamsi Matta

விசாகப்பட்டினம்
விஜயவாடாவிலிருந்து விசாகப் பட்டினம் 5 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன்னுள்ளே பல எழில் அம்சங்களை இந்த விசாகப்பட்டணம் நகரம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. அழகிய கடற்கரைகள், கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், நவீன நகர்ப்புற வசதிகள் என்று எல்லாம் கலந்த கதம்பமாக, எல்லோருக்கும் பிடிக்கும்படியான இயல்புடன் இது காட்சியளிக்கிறது.
வைசாக் நகரத்தின் அழகிய கடற்கரைகளாக ரிஷிகொண்டா பீச், கங்கவரம் பீச், பிம்லி மற்றும் யரடா பீச் போன்றவை நகரின் கிழக்குப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும், இயற்கை எழில் அம்சங்களாக கைலாசகிரி ஹில் பார்க், சிம்மாசலம் மலைகள், அரக்கு வேலி, கம்பலகொண்டா காட்டுயிர் சரணாலயம் போன்றவை இங்கு இயற்கை ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. சப்மரைன் மியூசியம், வார் மெமோரியல் மற்றும் நேவல் மியூசியம் போன்றவை விசாகப்பட்டிணம் நகரில் பார்க்க வேண்டிய இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். பார்க்க வேண்டிய இடங்களை பார்த்தபின் நகரின் முக்கியமான அங்காடி வளாகமான ‘ஜகதாம்பா சென்டர் மால்' க்கு விஜயம் செய்து ‘ஷாப்பிங்' தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
மேலும் தெரிந்துகொள்ள:
Sunny8143536003

புவனேஸ்வர்
ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது.
ஒடிஷா மாநிலத்தின் பெரிய நகரமான புபனேஷ்வரில் ஏரிகள், குகைகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் அணைகள் போன்றவை நிரம்பியுள்ளன. இவை தவிர பழமையான கோயில்களான லிங்கராஜ் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜாராணி கோயில், இஸ்க்கான் கோயில், ராம் மந்திர், ஷிர்டி சாய் பாபா மந்திர், ஹிராபூர் யோகினி கோயில் போன்றவை ஒடிஷா கோயிற்கலை பாரம்பரியத்தின் சான்றுகளாக வீற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல்லாமல் புபனேஷ்வர் நகரின் எழிலைக்கூட்டும் வகையில் பிந்து சாகர் ஏரி, உதயகிரி மறும் கண்டகிரி குகைகள், தௌலிகிரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம், அத்ரி வெந்நீர் ஊற்று ஸ்தலம் போன்ற எராளமான இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன.
மேலும் தெரிந்துகொள்ள:
Coolduds12

கட்டாக்
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும் வியாபார தலைநகராக கருதப்படுகிறது. மகாநதி மற்றும் கத்ஜோரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ளபடியால் அழகுமிக்கதாக தோன்றும் இந்த சமவெளி நகரம் சுற்றுலாவிற்கு ஏற்றவாறு திகழ்கிறது. பழங்கால வரலாற்றை இங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் மூலம் தெரிந்துகொள்ளமுடிந்த அதே சமயத்தில் நவீன வாழ்க்கை முறையையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
யாத்ரீக ஸ்தலங்கள், மலைகள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் என ஏகப்பட்ட சுற்றுளா தளங்கள் இங்கு உள்ளன. அன்சுபா நன்னீர் ஏரி, தபாலேஷ்வர் கோவில், ரத்னகிரி, லலித்கிரி மற்றும் உதயநிதி மலைகள் போன்ற ரம்மியமான இடங்கள் இங்கு நிறைய உண்டு. பங்கியில் உள்ள சர்சிகா கோவிலுக்கு நிறைய யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். மா பட்டாரிக்கா என்ற கோவில், செளதார் என்னும் சிவன் கோவில், புத்தமதத்தைப் பற்றி அறிவிக்கும் நராஜ், சந்தி தேவி கோவில் என இங்கு ஏராளம் உண்டு
மேலும் தெரிந்துகொள்ள:
Deepak das

கொல்கத்தா
கொல்கத்தா மக்கள் பல காலமாக கலாரசனை மிகுந்தவர்களாகவும் பல்வேறு நிகழ்த்து கலை பாரம்பரியங்களை ஊக்குவிப்பவர்களாகவும், இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். துர்க்கா பூஜை, தீபாவளி மற்றும் காளிபூஜா போன்ற பண்டிகைக்காலங்களில் தங்கள் வீடுகளை ஒளிமயமாக அலங்கரித்து பாரம்பரிய மரபுகளை அப்படியே பின்பற்றுவதில் கல்கத்தாவாசிகள் தங்கள் தனித்துவத்தை உணர்கின்றனர் . தற்போது கல்கத்தா நாடகக்குழுக்கள் நடத்தும் நாடக வடிவங்கள் மற்றும் பரீட்சார்த்த குறு நாடகங்கள் உலகாளவிய கவனிப்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்கத்தா நகரின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் விக்டோரியா மெமோரியல், இந்தியன் மியூசியம், ஈடென் கார்டன்ஸ், சைன்ஸ் சிட்டி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.பி.ஓ மற்றும் கல்கத்தா ஹைகோர்ட் போன்ற பல பாரம்பரிய கட்டிடங்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.
மேலும் தெரிந்துகொள்ள:
Biswarup Ganguly