Search
  • Follow NativePlanet
Share
» »30 வயதுக்குள் பார்க்க வேண்டிய இடங்கள்!!!

30 வயதுக்குள் பார்க்க வேண்டிய இடங்கள்!!!

By

ஒவ்வொருவரும் 30 வயதை கடப்பதற்கு முன் சில இடங்களை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும். அது என்ன 30 வயது என்ற கணக்கு என்றால், 30 வயதுக்கு பின்னர் கல்யாணம், குழந்தை என்று பொறுப்பான ஒரு வாழ்க்கைக்கு பெரும்பாலான மக்கள் தாவி விடுகிறார்கள்.

எனவே 30 வயதுக்கு முன்னர் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய சாகசங்களை அனுபவித்து விட வேண்டும். அப்பறம் திருமணம் ஆன பிறகு இதையெல்லாம் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுபதில் எந்த பலனும் இல்லை.

மணாலி-லே பாதையில் பைக் பயணம்

மணாலி-லே பாதையில் பைக் பயணம்

மணாலி-லே பாதையை 'ஆஃப் ரோடு' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது இந்தச் சாலை குண்டும் குழியுமாக ஒழுங்கற்றதாக ஒரே ஒரு லாரி மட்டுமே போகக்கூடியதான அளவில் இருக்கிறது. இதில் ஒரு பக்கம் வானுயர மலைகள், மறுபக்கம் அதல பாதாளம். எனவே கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்தால் இந்தப் பாதை மரணப் பாதை என்றே வர்ணிக்கப்படுகிறது.

படம் : Woudloper

ரிஷிகேஷ் வெள்ளை நீர் சவாரி

ரிஷிகேஷ் வெள்ளை நீர் சவாரி

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதியில் வெள்ளை நீர் சவாரி செய்வது சாகசத்தின் உச்சம் என்று சொல்லலாம். இங்கு 5 நிலைகளில் பயணிகள் வெள்ளை நீர் சவாரியில் ஈடுபடுகின்றனர். அதாவது சிறிய அலைகளில் சவாரி, மிதமான அலைகள், கடினமான அலைகளில் சவாரி, கடினமான அலைகள் மற்றும் நெருக்கடியான பாதை, மிகக்கடுமையான அலைகள் என்று படிப்படியாக 5 நிலைகளில் இந்த வெள்ளை நீர் சவாரியில் நீங்கள் ஈடுபடலாம்.

படம் : AbinoamJr

உறைந்த ஜன்ஸ்கர் ஆற்றில் டிரெக்கிங்

உறைந்த ஜன்ஸ்கர் ஆற்றில் டிரெக்கிங்

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஜன்ஸ்கர் ஆறு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உறைந்து காணப்படும். அப்போது அந்த ஆற்றில் டிரெக்கிங் செல்லும் அனுபவம் திகிலூட்டுவதாக இருக்கும். அதாவது ஆறு உறைந்து போய் கிடப்பதால் ஒரு குச்சியை வைத்து குத்திப் பார்த்துதான் அடியெடுத்து வைக்க வேண்டும், மைனஸ் 15 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை என்று 15 கி.மீ தூரம் டிரெக்கிங் செல்வதை பற்றி நினைத்துப்பாருங்கள்!

நீம்ரானா கோட்டையில் ஜிப்லைனிங்

நீம்ரானா கோட்டையில் ஜிப்லைனிங்

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள நீம்ரானா கோட்டையில் ஜிப்லைனிங் செய்வது சிலிர்ப்பூட்டும் சாகசம். அதாவது மொத்தம் 2 கி.மீ நீளம் போடப்பட்டிருக்கும் ஜிப்லைனில் நீங்கள் செல்லுபோது உங்களுக்கே கீழே ராஜஸ்தானின் கோட்டைகளும், கொத்தளங்களும் மிகச் சிறியதாக தெரியும். இவ்வளவு உயரத்தில் ஜிப்லைன் செய்வது ஆபத்தானது என்றாலும் உலகத் தரமான உபகரணங்களும், நன்கு பயிற்சி பெற்ற உதவியாளர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த ஜிப்லைன் பயணத்தை முடிப்பதற்கு நீங்கள் 2 மணி நேரம் ஆகாயத்தில் மிதக்க வேண்டும்.

படம் : Zooz gunner

குல்மார்க்கின் ஹெலி-ஸ்கையிங்

குல்மார்க்கின் ஹெலி-ஸ்கையிங்

குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு சீசன் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் பாதியில் முடிவடையும். இச்சமயங்களில் குல்மார்க்கில் பனிச்சறுக்கு வீரர்களுக்காக 'ஹெலி-ஸ்கையிங்'-யையும் ரிசார்ட் ஏற்பாடு செய்துகொடுக்கிறது. இந்த ரிசார்ட்தான் ஆசியாவிலுள்ள ஒரே ஹெலி-ஸ்கையிங் ரிசார்ட். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே கேனடாவுக்கு பிறகு ஹெலி-ஸ்கையிங் செய்வதற்கு காஷ்மீர்தான் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதாவது ஹெலி-ஸ்கையிங் என்பது கேபிள் கார் இன்றி ஹெலிகாப்டர் மூலம் நீங்கள் பனிமூடிய சிகரத்தின் உச்சியை அடைந்து பின்னர் அங்கிருந்து கீழே பனிச்சறுக்கு செய்து வரவேண்டும். அதோடு உங்களை பின்தொடர்ந்து ஹெலிகாப்டரும் வரும்.

கூர்க் அருவிகளில் ரேப்பெலிங்

கூர்க் அருவிகளில் ரேப்பெலிங்

கூர்க் அருவிகள் சிலவற்றில் ரேப்பெலிங் எனப்படும் கயிறு கட்டி மலையிறங்கும் சாகச விளையாட்டு பிரபலம். அதாவது 50 அடி உயரத்திலிருந்து, அருவி நீர் கொட்டிக்கொண்டிருக்கும் வழுக்கும் மலைப்பாறையில் கால் வைத்து இறங்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் அது.

பாராகிளைடிங்

பாராகிளைடிங்

காஷ்மீரில் சோனாமார்க், குல்மார்க், பதர்வாஹ் பகுதிகளில் பாராகிளைடிங் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதற்கான சிறந்த சீசனாக மே முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலுமான காலங்கள் கருதப்படுகின்றன. மேலும் பாராகிளைடிங் தற்போதுதான் காஷ்மீர் பகுதியில் பிரபலமடைந்து வருகிறது.

கோவாவில் ஸ்கூபா டைவிங்

கோவாவில் ஸ்கூபா டைவிங்

கடலின் அடி ஆழத்தில் மீன்களோடு மீனாக ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு நீந்திச் செல்பவர்கள் சிலரை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இதற்கு பெயர்தான் ஸ்கூபா டைவிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. கோவாவின் மற்ற நீர் விளையாட்டுகள் எல்லாம் கடலுக்கு வெளியே விளையாடுவது. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு புது உலகத்தையே உங்கள் கண்முன் படைக்கும் ஸ்கூபா டைவிங்கை கோவா வரும்போது முயற்சித்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் நீண்ட நாட்கள் கோவாவில் தங்க நேர்ந்தால் ஸ்கூபா டைவிங் செய்வது குறித்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலலாம்.

படம் : Hpm

Read more about: சாகசம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X