Search
  • Follow NativePlanet
Share
» »ராயல் ராஜஸ்தான் - இந்தியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்

ராயல் ராஜஸ்தான் - இந்தியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்

இந்தியா என்னும் பரந்துபட்ட இந்த நாட்டின் நாடி நரம்புகளாக இருப்பது ரயில்கள் தான். வேறெந்த வகையிலும் செல்ல சாத்தியமற்ற இந்நாட்டின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் நம்மை கொண்டு செல்வது ரயில்கள் தானே அன்றி வேறேதுமில்லை. ஒவ்வொரு இந்தியரின் வாழ்வோடும் இரண்டற கலந்துவிட்டதாலோ என்னவோ ஐந்து ரூபாய் ரயில் கட்டணம் உயர்ந்தாலும் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கிறது. இப்படி சாமானிய மனிதனின் வாகனமாக ரயில்கள் திகழும் இதே நாட்டில் தான் உலகத்தின் மிக காஸ்ட்லியான ரயில் பயணமும் இருக்கிறது.

சில நாட்கள் பயணத்திற்கே லட்சங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும் அந்த ரயில் பயணத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருப்பதை காட்டிலும் தன்னுடைய ராஜ பாரம்பரியத்தை இழக்காமல் இன்றும் போற்றி பாதுகாத்து வரும் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். இதனை பார்வையிடுவதர்க்காகவே ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ராஜஸ்தானுக்கு வருகின்றனர். அவர்களை ஈர்க்கும் விதமாக செயலுருவாக்கம் தரப்பட்ட அம்சங்களில் ஒன்று தான் 'ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்' எனப்படும் ஆடம்பர ரயில் சேவையாகும்.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

இந்திய ரயில்வே துறையினால் நடத்தப்படும் இந்த ரயில் சேவை ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு உங்களை அழைத்து செல்வதோடு மட்டுமில்லாமல் ஒரு அரண்மனையில் கிடைக்கும் எல்லா ஆடம்பர அம்சங்களுடன் கூடிய மறக்க முடியாதவொரு ரயில் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை 'டியுலக்ஸ்' மற்றும் 'சூப்பர் டியுலக்ஸ்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பேட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ஹவா மஹால், பத்மினி மஹால், கிஷோரி மஹால் என ராஜஸ்தானில் இருக்கும் அரண்மனைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

இந்த ரயிலில் வை-பை, செயற்கைக்கோள் தொலைகாட்சி, குளிர்சாதன வசதி, மது அருந்துவதற்கான பார், ஸ்பா போன்ற சாதாரண ரயிலில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சேவைகள் இந்த ரயிலில் கிடைக்கின்றன.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு குறைந்தது 2-3 மாதங்கள் முன்னரே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். ராயல் ராஜஸ்தான் ரயில் பயணமானது 8 இரவுகள் மற்றும் 7 பகல்களை கொண்டதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் இருந்து ஆரம்பிக்கும் அந்த பயணத்தின் போது நாம் செல்லும் இடங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

1-ஆம் நாள் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ரயிலின் 8 நாள் பயணம் இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியில் இருக்கும் சாப்டுர்ஜுங் ரயில் நிலையத்தில் இருந்து துவங்குகிறது. இந்த ரயில் நிலையமானது டெல்லியின் மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலான 'தி லீலா பேலஸ்'க்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ரயில் நேராக ஜோத்புரை நோக்கி பயணப்படும்.

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

2-ஆம் நாள், ஜோத்பூர் :

இந்த ரயிலானது டெல்லியில் இருந்து 600 கி.மீ தொலைவில் இருக்கும் ராஜஸ்தானின் ராஜ பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றான ஜோத்புரை ஓரிரவு பயணத்திற்கு பிறகு சென்றடையும். இந்நகரத்தில் இருக்கும் அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள் மற்றும் தார் பாலைவனம் ஆகியவற்றை சுற்றிப்பார்க்கலாம்.

Photo:Phil Robinson

மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை :

மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை :

ஜோத்பூர் நகரின் மிக முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது 1460ஆம் ஆண்டு கட்டப்பட்ட மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை தான். இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை வளாகங்களில் ஒன்றான இங்கே அந்தக்காலத்தில் நடைபெற்ற போரினால் ஏற்ப்பட்ட தடையங்கள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

Photo:Flip Nomad

மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை :

மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டை :

இங்குள்ள அருங்காட்சியகத்தில் இந்த அரண்மனையில் வாழ்ந்த அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், ஆபரணங்கள், பல்லக்குகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டையை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Photo:Flip Nomad

நீல நகரம் :

நீல நகரம் :

ஜோத்புருக்கு நீல நகரம் என்ற ஒரு புனைப்பெயரும் இருக்கிறது. அதற்கு காரணம் இங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள வீடுகள் அனைத்துமே நீல நிற வர்ணம் பூசப்பட்டிருப்பதே ஆகும். மெஹ்ரங்கர்க்ஹ் கோட்டையின் மேல் இருந்து அற்புதமான இந்த நீல நகரத்தை கண்டு மகிழலாம். ஜோத்புரை நகரை மட்டும் சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்கள் அந்நகரத்தை எப்படி அடைவது?, அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Flip Nomad

3-ஆம் நாள் :

3-ஆம் நாள் :

ஜோத்புரை நகரை சுற்றிப்பார்த்த பிறகு மூன்றாம் நாள் ராஜஸ்தானில் இருக்கும் மற்றுமொரு பேரழகு ததும்பும் நகரமான உதைபுருக்கு செல்லலாம். ஜோத்பூரில் இருந்து 260 கி.மீ தொலைவில் உதய்பூர் நகரம் அமைந்திருக்கிறது. மேவார் ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்த இந்நகரம் மஹாராண உதய் சிங் என்பவரால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது.

3-ஆம் நாள் :

3-ஆம் நாள் :

வர்ணிக்க முடியாத பேரழகு கொண்டிருப்பதாலோ என்னவோ 'கிழக்கின் வெனிஸ்' என்று இந்நகரம் அழைக்கப்படுகிறது. பாலைவன நகரமாக இருந்தாலும் இத்தாலி நாட்டில் இருக்கும் வெனிஸ் நகரை போலவே இங்கும் பிசோலா ஏரி, பதெஹ் சாகர் ஏரி, சுவரூப் சாகர் ஏரி என அழகு நிறைந்த ஏரிகள் நிறைய இருக்கின்றன.

3-ஆம் நாள் :

3-ஆம் நாள் :

உதய்பூரில் இருக்கும் மிக முக்கிய சுற்றுலா அம்சம் பிசோலா ஏரியின் நடுவே அமைந்திருக்கும் 'லேக் பேலஸ்' என்ற தாங்கும் விடுதி தான். பிசோலா ஏரியின் நடுவே இருக்கும் ஒரு சிறு தீவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனையான இது ஆசியாவின் மிக ரோமேண்டிக்கான ஹோட்டல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உதய்பூர் :

உதய்பூர் :

உதய்பூர் நகரில் இருக்கும் இன்னும் பல நல்ல சுற்றுலாத்தளங்களை பற்றிய தகவல்களையும் லேக் பேலஸில் தங்குவதர்க்கான முன்பதிவுகளை பற்றிய தகவல்களையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள். உதய்பூர், லேக் பேலஸ்.

ரத்ம்போர் தேசிய பூங்கா :

ரத்ம்போர் தேசிய பூங்கா :

உதைபுரை சுற்றிப்பார்த்த பிறகு அடுத்ததாக வட இந்தியாவின் மிகப்பெரிய வன உயிரியல் பூங்காவான ரத்ம்போர் தேசிய பூங்காவில் யானை மீது அமர்ந்தபடி சபாரி பயணம் மேற்கொள்ளலாம். இந்தியாவில் புலிகளை அதன் இயல்பான வாழ்வை நேரடியாக பார்க்க இந்த பூங்கா சிறந்ததொரு இடமாகும். அடுத்ததாக இப்பயணம் ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்புரை நோக்கி...

Photo: FLickr

பிங்க் சிட்டி :

பிங்க் சிட்டி :

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூர் நாம் முன்னர் பார்த்த நகரங்களுடன் ஒப்பிடுகையில் இங்கிருக்கும் காலச்சார பெருமைகள் மற்றும் சுற்றுலா அம்சங்களை சற்றும் குறைந்தவை அல்ல. ராஜஸ்தானின் அடையாளங்களில் ஒன்றான ஹவா மஹால் இந்நகரத்தில் தான் இருக்கிறது. மேலும் இந்த நகரமானது ராஜஸ்தானின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் வாங்க சிறந்ததொரு இடமாகும்.

Photo:enjosmith

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் :

ராஜஸ்தானின் இருந்து இப்பயணம் மைதுன சிற்பங்கள் கொண்ட கோயில் அமைந்திருக்கும் கஜுராஹோ, அதனை தொடர்ந்து ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் கடைசியாக தாஜ் மஹால் அமைந்திருக்கும் ஆக்ராவுக்கு சென்று விட்டு 8ஆம் நாள் இறுதியாக டெல்லியை அடைவதோடு முடிவடைகிறது இந்த ரயில் பயணம்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+