Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக உயரமான கட்டிடங்கள்!

இந்தியாவின் மிக உயரமான கட்டிடங்கள்!

By

இந்தியா பழங்காலத்திலும் சரி, நவீன காலத்திலும் சரி கட்டிடக்கலையில் சிறந்து விளங்குகிறது. அந்தக் காலங்களில் கருங்கற்களைக் கொண்டு அட்டகாச கலா நேர்த்தியுடன் பல கோயில்கள் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கின்றன.

அதுவே இந்தக் காலங்களில் நவீன வசதிகளுடன் வானை முட்டும் கட்டிடங்கள் இந்திய பெருநகரங்களில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

முன்பெல்லாம் உயரமான கட்டிடங்கள் என்றால் வெளிநாடுகளில் இருக்கின்றன என்றளவிலே நாம் அறிவோம். ஆனால் இன்று அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர உயரமான கட்டிடங்கள் இந்தியாவிலும் ஒய்யாரமாக நின்றுகொண்டிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை மும்பை மாநகரத்திலும் ஏனைய கட்டிடங்கள் டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

இம்பீரியல் டவர், மும்பை

இம்பீரியல் டவர், மும்பை

மும்பையிலுள்ள இம்பீரியல் டவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகும். 61 தளங்களை கொண்ட இந்தக் கட்டிடம் 254 மீட்டர் உயரம் கொண்டது. இது 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

படம் : KuwarOnline

கோஹினூர் ஸ்குவயர், மும்பை

கோஹினூர் ஸ்குவயர், மும்பை

மும்பையிலுள்ள கோஹினூர் ஸ்குவயர் 203 மீட்டர் உயரம் கொண்டது. 52 தளங்களை கொண்ட இந்தக் கட்டிடம் 2013-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது குடியிருப்பு பகுதி, சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

படம் : Hemant meena

அசோக் டவர்ஸ், மும்பை

அசோக் டவர்ஸ், மும்பை

2009-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அசோக் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு மும்பையில் உள்ளது. 49 தளங்களை கொண்ட இந்தக் கட்டிடம் 193 மீட்டர் உயரம் கொண்டது.

படம் : Uniconnect

பிளானட் கோத்ரேஜ், மும்பை

பிளானட் கோத்ரேஜ், மும்பை

181 மீட்டர் உயரம் கொண்ட பிளானட் கோத்ரேஜ் ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகும். 2009-ஆம் ஆண்டு மும்பையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் 51 தளங்களை கொண்டது.

படம் : Humayunn N A Peerzaada

சன்ஷைன் டவர், மும்பை

சன்ஷைன் டவர், மும்பை

மும்பையிலுள்ள சன்ஷைன் டவர் 180 மீட்டர் உயரம் கொண்டது. 40 தளங்களுடன் இது 2011-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

படம் : Bionmba

உலக வர்த்தக மையம், பெங்களூர்

உலக வர்த்தக மையம், பெங்களூர்

பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையம் 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 32 தளங்களுடன் 128 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

படம் : Cv manjoo

யு.பி.டவர், பெங்களூர்

யு.பி.டவர், பெங்களூர்

பெங்களூரில் உள்ள யு.பி.சிட்டியில் மொத்தம் 3 டவர்கள் உள்ளன. அவற்றில் மிகவும் உயரமானதாக திகழும் யு.பி.டவர் 128 மீட்டர் கொண்டது.

(படம்)

பப்ளிக் யூட்டிலிட்டி பில்டிங், பெங்களூர்

பப்ளிக் யூட்டிலிட்டி பில்டிங், பெங்களூர்

சுபாஷ் சந்திர போஸ் டவர் என்ற பெயரிலும் அறியப்படும் பப்ளிக் யூட்டிலிட்டி பில்டிங் பெங்களூரில் அமைந்திருக்கிறது. இந்தக் கட்டிடம் 25 தளங்களுடன் 106 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

படம் : Nikkul

கிஃப்ட் ஒன், அஹமதாபாத்

கிஃப்ட் ஒன், அஹமதாபாத்

குஜராத் இன்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி என்பதன் சுருக்கமே கிஃப்ட் ஒன் (GIFT One) என்பது. இது 2013-அம ஆண்டு அஹமதாபாத்தில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 29 தளங்களுடன் 122 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

படம் : Gujaratin

எம்.சி.டி.சிவிக் செண்டர், புது டெல்லி

எம்.சி.டி.சிவிக் செண்டர், புது டெல்லி

28 தளங்களுடன் 102 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம்தான் டெல்லியின் உயரமான கட்டிடமாக அறியப்படுகிறது. இது 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

படம் : Harrasis

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X