» »இந்தியாவின் மிகப்பெரிய 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியாவில் எத்தனை எத்தனையோ ஏழைகள் இருந்தாலும், இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய பணக்கார நாடுகளில் ஒன்று. என்ன என்று மலைக்கிறீர்களா.. அம்பானி, அதானிக்களை அறியாதவர்களா நீங்கள். உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களெல்லாம் இந்தியர்கள்தான். சரி. இந்தியாவில் எந்த நகரம் மிகப்பணக்கார நகரம் என்று தெரியுமா. வாருங்கள் பார்க்கலாம்.

பணக்காரநகரம் #5

பணக்காரநகரம் #5

பணக்கார நகரங்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப்பிடித்திருப்பது ஹைதராபாத் நகரமாகும். முன்னர் ஆந்திரப்பிரதேசத்திலும், தற்போது தெலுங்கானாத் தலைநகராகவும் இருக்கும் இந்த நகரம் 74 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார பங்கு வகிக்கிறது.

Yedla70

ஹைதராபாத்

ஹைதராபாத்

தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்' நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

Fountain

பணக்காரநகரம் #4

பணக்காரநகரம் #4


இந்திய தொழில்நுட்பத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரம் பணக்கார நகரங்களின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. இது இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது.


Muhammad Mahdi Karim

பெங்களூர்

பெங்களூர்

பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால் 1537- ஆண்டு, தற்சமயம் பெங்களூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
https://tamil.nativeplanet.com/bangalore/

Prathyush Thomas

பணக்காரநகரம் #3

பணக்காரநகரம் #3

கொல்கத்தாதான் மூன்றாவது பணக்கார நகரமாகும். ஆம். அவ்ரா பிரிஜ் இருக்குற அதே ஊர்தான். கலாச்சாரத் திருவிழாக்கள் அதிகம் கொண்டாடப்படும் இந்தியாவின் மிகச்சிறந்த பண்பாட்டு நகரங்களில் ஒன்றான கொல்கத்தா. 150பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இங்கு பொருளாதார வர்த்தகம் உள்ளது.

123sarangi

கொல்கத்தா

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய பெருமையை பெற்றுள்ளது. வெகு சமீப காலம் வரை கல்கத்தா என்று அறியப்பட்ட இந்நகரம் காலத்தில் உறைந்து போன பழமையின் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
/

பணக்கார நகரம் #2

பணக்கார நகரம் #2

இந்தியாவின் தலைநகரம்தான் பணக்கார நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகசந்தை டெல்லி ஆகும். 160 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 370 பில்லியன் வரை இங்கு வர்த்தகம் நிகழ்கிறது.

wiki

டெல்லி

டெல்லி

மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு உன்னதமான அனுபவம் எனில், அதன் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநகரத்துக்கு விஜயம் செய்வதும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

wiki

பணக்கார நகரம் #1

பணக்கார நகரம் #1

இந்தியாவின் பொழுதுபோக்கு, பொருளாதார தலைநகரம் மும்பைதான் பணக்காரநாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 370பில்லியனுக்கும் அதிகமாக வர்த்தகம் நிகழ்கிறது.

wiki

மும்பை

மும்பை


மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள். மும்பையின் ஜனக் கூட்டமும், பல்வேறு இடங்களும், பலவகைப்பட்ட வழிபாடுகளும், எண்ணற்ற உணவு வகைகளும் அதன் வெவ்வேறு நிறங்களை பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன.இதன் காரணமாக மும்பை நகரம் இந்தியாவின் தனித்துவம் மிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

wiki

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்