» »இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நகரங்கள்

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நகரங்கள்

Written By: Staff

கடந்த பத்து-இருபது ஆண்டுகளாக, இந்தியா, படைப்புத்திறனில் - குறிப்பாக, சினிமாவில், நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. பாலிவுட் எனப்படும் ஹிந்தி சினிமாவே உலகிற்கு பிரபலம் என்றாலும் ஹிந்தி அல்லாத மாநில மொழித் திரையுலக‌மும் தங்களின் தரத்தில் நல்ல வளர்ச்சியை கண்டிருக்கின்றனர்.

படவுருவாக்கத்தில் முக்கிய பகுதியில் ஒன்று படப்பிடிப்பு. படத்தின் தேவை மற்றும் செலவை கருத்தில் கொண்டு படப்பிடிப்புத் தளங்களை கவனமாகத் தேர்வு செய்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு புதிதாக செட்களை(அமைப்புகள்) நிறுவினாலும், இன்றும், பல படங்கள், திரைப்பட நகரங்களில், உடனடி பயன்பாட்டிற்கு அமைத்து வைத்திருக்கும் செட்களையே நம்பியிருக்கின்றனர்.

அப்படி, இந்தியாவில் நாம் அவசியம் காண‌ வேண்டிய சில திரைப்பட நகரங்களைப் பற்றி பார்க்கலாம்.

Hyderabad

Ramoji Filmcity - Hyderabad

Photo courtesy : Vinayaraj

ராமோஜி திரைப்பட நகரம், ஹைதராபாத்

இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த திரைப்பட நகரம். காண்போரை மயக்கும் இந்த திரைப்பட வளாகத்தில், வருடம் முழுதும் படப்பிடிப்புகள் நடக்கின்றன. இந்த நகரத்தின் அற்புதத்தைக் காண‌ லட்சக்கணக்கான‌ சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த திரைப்பட நகரத்தில், மக்களை அதிகமாக ஈர்ப்பது: பசுமையான தோட்டங்களும், உலகத்தரத்தில் இருக்கும் சினிமா செட்டுகளும்- மருத்துவமனை, காவல் தலைமையகம், தாஜ் மஹால் மற்றும் விமான நிலையம். கண்களுக்கு விருந்தளிக்ககூடிய இந்த நகரை முழுமையாக‌ காண்பதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது பிடிக்கும். என்றாலும், ஒரு நாள் சுற்றுப்பயண‌ங்களும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன.

மும்பைத் திரைப்பட நகரம்

தாதா சாஹேப் பால்கே சித்ரந‌கரி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம், இந்தியாவில், மக்கள் அதிகம் வரும் திரைப்பட நகரங்களில் ஒன்று. 1911 ஆண்டிலிருந்து இயங்கி வருவதால் பல ஹிந்தி மற்றும் வேற்று மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்திருக்கின்றன. படவுருவாக்கத்திற்கு தேவையான நவீன வசதிகள், கருவிகள் இங்கு இருக்கின்றன. நிஜத்திற்கும், மனிதன் அமைத்தத‌ற்கும் வித்தியாசம் காண முடியாத வகையில் இருக்கும் இங்குள்ள செட்டமைப்புகள்:, நீர்வீழ்ச்சி, நகரம், ஏரி, மலைகள் ஆகியவற்றை காண ஒரு நாளாவது ஒதுக்க வேண்டும்.

Hyderabad

Innovative FilmCity - Bengaluru

Photo Courtesy : Rameshng
 

இன்னோவேட்டிவ் திரைப்பட நகரம், பெங்களூர்

பெங்களூரின் புறநகரில் இருக்கும் இந்த திரைப்பட நகரம் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும். கார்ட்டூன் நகரம், டைனோசர் பூங்கா, சிறு கோல்ஃப் மைதானம், பேய் மாளிகை, இன்னோவேட்டிவ் டாக்கீஸ், கண்ணாடிச் சிக்கலறை (Mirror Maze) என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இதோடு, பழங்குடி/மெழுகு/தொல்பொருள் என பலவகை அருங்காட்சியகங்களும் இருக்கின்றன. மேலும், பார்வையாளர்களுக்கு பல சாகச விளையாட்டுகளான‌ : பங்கி ஜம்பிங், வில்வித்தை, நெட் கிரிக்கெட், இருக்கின்றன.

நொய்டா திரைப்பட நகரம்

டெல்லிக்கு அருகில் இருகில் இருக்கும் இந்த நொய்டா திரைப்பட நகரம், நூறு ஏக்கர்களைத் தாண்டி பர‌ந்து விரிந்து இருக்கும் ஒரு முக்கிய சுற்றுலா தளமாகும். பாலிவுட் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் என்று பலவிதமான படப்பிடிப்புகள் இங்கு நடைபெறுகின்றன.

எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் - சென்னை

1994'இல் திறக்கப்பட்ட இந்த திரைப்பட நகரத்திற்கு சினிமா இயக்குனர்கள், சுற்றுலா பயணிகள் என்று பலர் வருகின்றனர். நகரங்கள் மற்றும் கிராமங்களின் மாதிரி செட்டமைப்புகள், கோவில், மசூதி, தபால் நிலையம், ஏரி என்று பலவிதமான வசதிகள் இங்கு இருக்கின்றன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்