Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கு காரணமான பழமையான இடங்கள்

இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கு காரணமான பழமையான இடங்கள்

இந்தியாவில் பாரம்பரியம் மிக்க இடங்கள் எத்தனையோ உள்ளன. இங்குள்ள பழமையான கோவில்கள், பாரம்பரிய கட்டிடங்கள், கலை வடிவம் மிக்க சிற்பங்கள், மிக பழமையான புராதன சின்னங்கள், கலைகள், உணவுகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் ஆகியவை உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பார்க்க விரும்பம் டாப் 10 பழமையான சுற்றுலா தலங்கள் இவைகள் தான். நீங்களும் ஒருமுறை இங்கு டூர் போயிட்டு வாங்க. புதுமையான அனுபவம் கிடைக்கும்.

Taj Mahal

தாஜ்மஹால்

ஆக்ராவில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றாகும். முற்றிலும் பளிங்கு கற்களால் ஆன இந்த மாளிகையை முகலாய பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய நினைவு சின்னம் ஆகும். இது இந்து இஸ்லாமிய கட்டிடக்கலையின் ஒரு மகுடமாகும். உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் பார்க்கும் இடங்களில் தாஜ்மஹால் முதன்மையானதாகும்.

வாரணாசி

வாரணாசி, இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றாகவும், கங்கை நதியின் கரையில் அமைந்த ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது. இது தீர்த்த யாத்திரை, பூஜைகள், யோகா மற்றும் இறுதி சடங்குகள் நடைபெறும் புனிதமான இடமாகும். பக்தர்கள், இங்கு கங்கையில் புனித நீராடுதல், ஆராதனை, தவம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். வெளிநாட்டு பயணிகள், இந்த இடத்தை ஆன்மீகத் தேடல்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்காக பார்வையிடுகிறார்கள்.

Gateway of India

கேட்வே ஆஃப் இந்தியா

கேட்வே ஆஃப் இந்தியா மும்பையில், அரபிக்கடல் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரலாற்று நினைவுச்சின்னம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரியை இந்தியாவின் கடற்கரைக்கு வரவேற்க கட்டப்பட்ட ஒரு வளைவு நினைவுச்சின்னமாகும். சுற்றுலாப் பயணிகள் போட்டு எடுத்து மகிழ ஏற்ற இடமாகும்.

கோவா கடற்கரைகள்

இந்தியாவின் விருப்பமான கடற்கரை இடமான கோவா,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும்.இது அழகிய கடற்கரைகள், புகழ்பெற்ற நைட்லைஃப் (Nightlife), கடற்கரை ரிசார்ட்கள் ஆகியவற்றிற்காக உலகளவில் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது.நீச்சல், சர்ஃப்,ஸ்கூபா டைவிங் போன்ற வாட்டர் ஸ்போர்ட்ஸ்கள் வெளிநாட்டு பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.

Qutub Minar

குதுப் மினார்

குதுப் மினார், தலைநகர் டில்லியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னம். குதுப் மினார் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது. குதுப் மினார் முழுவதும் சிவப்பு மணல், கல்லால் கட்டப்பட்டுள்ளது.இந்தியாவின் வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் உன்னத சிறப்பினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதனை பார்வையிடுகின்றனர்.

ஹவா மஹால்

ஹவா மஹால், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான வரலாற்றுச் சின்னமாகும். ஹவா என்றால் இந்தியில் 'காற்று' என்று பொருள். 953 சிறிய ஜன்னல்கள் (ஜரோக்) கொண்டதால், இயற்கை காற்று சீராக உள்ளே புகுந்து, ஜெய்ப்பூரின் சுட்டெரிக்கும் கோடையில் உட்புறங்களை குளிர்விக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹனி கோம்ப் வடிவில் உள்ள இந்த அரண்மனையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதன் கலைநயத்தையும், பழைய இந்திய கட்டிடக்கலையையும் கண்டு வியக்கின்றனர்.

மாத்ரிமந்திர்

மாத்ரி மந்திர் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் அமைந்துள்ள ஒரு ஆன்மீகத் தியான மையம் ஆகும்.ஆரோவில்லின் மையத்தில் ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமத்தின் தாயான ஸ்ரீஅன்னையால் நிறுவப்பட்டதாகும். இந்த இடம் மத, சமூகம், நாடு ஆகிய எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது.

விருபாக்ஷா கோயில்

விருபாக்ஷா கோயில் என்பது கர்நாடக மாநிலம், ஹம்பியில் அமைந்துள்ள மிகப் பிரபலமான சிவன் கோயில் ஆகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இது விஜயநகரப் பேரரசின் மணிமகுடமாகும். இந்தக் கோயில் அதன் கம்பீரமான கோபுரம் மற்றும் தனித்துவமான கல் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

Mysore Palace

மைசூரு அரண்மனை

கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரத்தில் அமைந்துள்ள, இந்தியாவின் மிக பிரசித்தி பெற்ற மற்றும் அழகிய அரண்மனை ஆகும். இங்குள்ள அம்பா விலாஸ் மண்டபம் மன்னர்களின் தனிப்பட்ட அரண்மனையாகும்.இது தற்போது கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பாரம்பரிய நினைவுச் சின்னமாக உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.இந்தியாவின் மிக அழகான அரண்மனைகளில் ஒன்றாக, இது ஒரு வரலாற்று பேரழகை பிரதிபலிக்கும் ஒரு இடமாக உள்ளது.

ஆலப்புழா

கேரள மாநிலத்தின் அழகிய நகரமாகும். இது பேக் வாட்டர், ஹௌவுஸ் படகுகள் (Houseboats), மற்றும் பசுமை நிறைந்த சிற்றோடைகள் ஆகியவற்றால் பிரசித்தமானது. நீண்ட நீர்வழிப் பயணத்திற்கேற்றது. குடும்பத்துடன், நண்பர்களுடன், அல்லது தனிப்பட்ட ஓய்வுக்காக, நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா ஹவுஸ் படகுகள் சுற்றுப்பயணத்திற்காக உலகப்புகழ் பெற்றது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+