Search
  • Follow NativePlanet
Share
» »வாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்!

வாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்!

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே சாலையில் இணைக்கும் வாஜ்பாயின் கனவுத் திட்டமான தங்க நாற்கர சாலையின் சிறப்புகள் குறித்தும், அதனுள் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்தும் தெரியுமா ?

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைத் திட்டம் குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தான் தங்க நாற்கர சாலைத் திட்டம். இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய பெருநகரங்களை இணைக்கும் சாலைத் திட்டமாக அமல்படுத்தப்பட்ட இது பல்வேறு சிறுநகரங்களையும் இணைத்தபடியே ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைக்கும். அப்படி, இந்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் உள்ள நகரங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம்.

உலகிலேயே நீளமான நெடுஞ்சாலை

உலகிலேயே நீளமான நெடுஞ்சாலை


சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் தரமான சாலைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் உலகிலேயே 5-வது நீளமான நெடுஞ்சாலை கட்டமைப்பாக இது உள்ளது பெருமைக்குறிய விசயமே. அதாவது, ஏற்கனவே கூறியது போல நாட்டின் முக்கிய நகரங்களை 5,846 கிலோ மீட்டர் மொத்த நீளத்தில் இது இணைக்கிறது.

Anubrata29

எந்தெந்த நகரங்கள் ?

எந்தெந்த நகரங்கள் ?


வடக்கே டெல்லியை மையமாகக் கொண்டு இச்சாலை துவங்குகிறது என்றால் கிழக்கே மும்பை, தெற்கே சென்னை, மேற்கே கொல்கத்தா என நான்கு புறங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் ஒற்றைச் சாலையாக இது உள்ளது. குறிப்பாக, நாற்கரம் போல இச்சாலை தோற்றமளிப்பதால் தங்க நாற்கரச் சாலை என்ற பெயரைப் பெற்றுள்ளது எனலாம்.

DasAritra

டில்லி - மும்பை

டில்லி - மும்பை


புதுடில்லியை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு இச்சாலை தொடங்குகிறது என வைத்துக் கொள்வோம். புதுடில்லியில் தொடங்கும் சாலை ஜெய்ப்பூர், உதய்ப்பூர் காந்திநகர் வழியாக வதோதரா, சில்வாரா என சுமார் 1411 கிலோ மீட்டர் நீண்டு மும்மையை அடைகிறது. இச்சாலையில் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால், ஜெய்ப்பூர், உதய்ப்பூர் என ஒட்டுமொத்த சாலை இணைப்பில் பல சுற்றுலாத் தலங்களை ஒட்டியவாரே பயணிக்கலாம்.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் தங்கநாற்கர சாலையில் டில்லியில் இருந்து 276 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோட்டைகளும், அரண்மனைகளும் நிறைந்த ஜெய்ப்பூர் நகரம் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கே பயணிப்போர் யாவரும் தவறாமல் ஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால் போன்ற இந்நகரின் புகழ்மிக்க சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க வேண்டும்.

Mayank Bhagya

உதய்ப்பூர்

உதய்ப்பூர்


தங்கநாற்கர சாலையிலேயே ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உதய்பூர். ஜெய்ப்பூரைப் போலவே அரண்மனைகளின் அங்கமாக திகழும் இந்நகரில் பிரசிதிபெற்றது சஜ்ஜன்கர் அரண்மனை. மலை முகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவே அமைந்துள்ள இது இயற்கை ஆர்வலர்களாளும் பெரிதும் விரும்பி பயணிக்கக் கூடிய தலமாக உள்ளது.

Vivek Shrivastava

காந்திநகர்

காந்திநகர்

உதய்பூரில் இருந்து மும்பைக்கு இடைப்பட்டு வாஜ்பாயின் தங்கநாற்கரச் சாலையில் அமைந்துள்ள மற்றுமொரு சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதிதான் காந்திநகர். குஜராத்தின் தலைநகராக திகளும் இங்கே இன்ட்ரோடா டைனோசர்கள் மற்றும் புதைபடிவ பூங்கா, மகாத்மா மந்திர் உள்ளிட்டு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தலங்கள் உள்ளன.

Harsh4101991

காந்திநகர் - மும்பை

காந்திநகர் - மும்பை


காந்திநகரில் இருந்து வதோதரா வழியாக 550 கிலோ மீட்டர் பயணித்தால் மும்பையை அடைந்துவிடலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளாலும் பெரிதும் விரும்பக் கூடிய குட்டி கோவாவான மாஹிக்கும், நர்மதை நதிக் கரைக்கும் இடையில் இந்நகரம் அமைந்துள்ளது. லட்சுமி விலாஸ் அரண்மனை, கடியா துங்கார் குகைகள், மகர்பூரா அரண்மனை, நஸார்பாக் அரண்மனை உள்ளிட்டவை இங்கே கட்டாயம் பயணிக்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.

Nichalp

மும்பை - பெங்களூர்

மும்பை - பெங்களூர்


தங்க நாற்கர நெடுஞ்சாலையின் அடுத்த பிரிவு தான் மும்மையில் இருந்து சென்னை செல்லக் கூடிய நெடுஞ்சாலை. மும்பை, புனே, ஹுப்ளி வழியான கர்நாடகாவிற்குள் நுழைந்து 984 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களுருடன் இணைகிறது. இச்சாலையின் இடைப்பட்ட தொலைவில் உள்ள கோலாப்பூர், பெல்காம், ஹுப்ளி உள்ளிட்டவை உலகப் புகழ்பெற்ற இயற்கை எழில்கொஞ்சும் வரலாற்றுச் சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Haji Ali

கோலாப்பூர்

கோலாப்பூர்

கோலாப்பூரில் அமைந்துள்ள கோட்டைகள் ஒவ்வொன்றும் பல புகழ்மிக்க அம்சங்களாகும். இயற்கை ரசிகர்களுக்காகவே பல ஏரிகளும் இங்கே உள்ளன. அவற்றுள் ரங்கலா சௌபாத்தி எனும் அற்புதமான இடம் அவசியம் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.

Sandeeppatil123

பெல்காம்

பெல்காம்


கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள பெல்காம், பெங்களூருக்கு அடுத்த பெரிய தலைநகரமாக உள்ளது. இங்கே உள்ள கமல் பசாதி ஜைன கோவில், ஹலசி, கோகாக் அருவி, ஆயிரம் ஆண்டுகள் கடந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில், தூத்சாகர் அருவி உள்ளிட்டவை பெல்காமின் சிறப்புமிக்க சுற்றுலா அம்சங்களாகும்.

Manjunath Doddamani

ஹுப்ளி

ஹுப்ளி


கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஹுப்ளி. அஸார், சித்தரூத மடம், நிருபதுங்க பெட்டா, உன்கால் ஏரி மற்றும் கண்ணாடி மாளிகை உள்ளிட்டவை ஹூப்ளியில் முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். மேலும், இந்நகரின் அருகில் உள்ள தார்வாட், சத்தோடா, சொகல்லா, நவில்தீர்த், மத்தோடா நீர்வீழ்ச்சிகள் போன்ற முக்கிய இடங்களும் குறிப்பிடத்தக்கவை.

Deepak Patil

பெங்களூர் - சென்னை

பெங்களூர் - சென்னை


பெங்களூர் - சென்னை இடையே 350 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த தங்க நாற்கரச் சாலை ஒசூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என பல சிறு நகரங்களைக் கடந்து இந்த சாலை இணைகிறது. பெங்களூர் - சென்னை இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாகவும், எளிதாகவும் இருப்பதற்கு இந்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம் முக்கிய பங்காக உள்ளது.

wikipedia

சென்னை - கொல்கத்தா

சென்னை - கொல்கத்தா


சென்னையில் இருந்து மூன்றாவது பிரிவாக தங்க நாற்கர சாலை கொல்கத்தா வரை 1670 கிலோ மீட்டருக்கு நீண்டுள்ளது. சென்னை- கொல்கத்தா இடையே காரக்பூர், கட்டாக், புபனேஸ்வர், விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், கும்மிடிப்பூண்டி என பல சிறிய சிறிய முக்கிய நகரங்களையும் இச்சாலை இணைப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

DasAritra

கட்டாக்

கட்டாக்


ஒடிசாவின் தலைநகருக்கு அருகே அமைந்துள்ள கட்டாக் மகாநதி மற்றும் கத்ஜோரி என்னும் நதிக் கரைகளில் அமைந்துள்ள பசுமைச் சூழல் மிக்க சமவெளி நகரமாகும். குறிப்பாக, சுற்றுலாவிற்கும், சாகசத்திற்கும் ஏற்றவாறு மலைகள், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் என ஏராளமான சுற்றுளாத் தளங்கள் இங்கு உள்ளன.

Deepak das

புபனேஷ்வர்

புபனேஷ்வர்


ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ள நகரம் என்பதால் பெரும்பாலும் புபனேஷ்வர் கோவில்களின் நகரம் என்றே அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கு ஏற்ப நீர்நிலைகள், பழமைவாய்ந்த குகைகள், குழந்தைகளுக்கான பூங்காக்கள், அணைகள் உள்ளிட்டவை உள்ளன. அதுமட்டுமின்றி, பிந்து சாகர் ஏரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம் உள்ளிட்டவையும் சுற்றுலாப் பயணிகளி அதிகம் பயணிக்கக்கூடிய தலங்களாகும்.

Naveen Patnaik

கொல்கத்தா - டில்லி

கொல்கத்தா - டில்லி


டில்லியில் தொடங்கிய இந்த தங்க நாற்கரச் சாலை மும்பை, சென்னை, கொல்கத்தா என கடந்து மீண்டும் இணைவது டில்லியுடன் தான். கொல்கத்தாவில் இருந்து 1475 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது டில்லி. கொல்கத்தா- டெல்லி இடையே பரீதாபாத், மதுரா, ஆக்ரா, இட்டாவா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, தான்பாத், அசன்சோல், துர்காபூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சிறப்பான சாலை இணைப்பை பெற்றிருக்கின்றன. மேலும், இவை அனைத்தும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்கள் என்பது மேலும் சிறப்புக்குறியது.

Avik Haldar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X