Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் 200 ரூபாயில் இந்தியாவின் அழகான கிராமங்களை கண்டு கொண்டே பயணிக்கலாம்!

வெறும் 200 ரூபாயில் இந்தியாவின் அழகான கிராமங்களை கண்டு கொண்டே பயணிக்கலாம்!

இந்தியாவில் இயற்கை அழகு நிறைந்த அழகான மலைப்பிரதேசங்களும், கிராமங்களும், ஊர்களும் இருப்பது நம் எல்லோர்க்கும் தெரியும். எல்லா இடங்களுக்கும் நம்மால் பயணிக்க முடியாது இல்லையா, ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்தியாவின் சில குறிப்பிட்ட அழகிய ரயில் பாதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சியான, அழகான, வினோதமான பல காட்சிகளை நீங்கள் கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம். அதற்கு அதிக செலவும் ஆகாது, அதிகபட்சமாக வெறும் ரூ.200 இருந்தால் போதும்!

1

விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு

கம்பீரமான கிழக்கு தொடர்ச்சி மலைகள், காபி தோட்டங்கள் வழியாக ஷிமிலிகுடாவின் மிக உயரமான மலைப்பாதையில் நீங்கள் எண்ணற்ற சுரங்கங்கள் மற்றும் கூர்மையான வளைவுகள் வழியாக பயணம் செய்யலாம். அரக்கு பள்ளத்தாக்கை அடைய இந்த அழகிய மலைப்பாதையில் நீங்கள் பயணம் செய்யலாம்.

2

மண்டபம் - ராமேஸ்வரம்

த்ரில் மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்தியாவின் மிக அழகான ரயில் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் இரண்டாவது நீளமான பாலமான பால்க் ஜலசந்தி வழியாக செல்லும் இந்த பாலம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை பாம்பன் தீவுடன் இணைக்கும் ஒரே பாதையாகும். குறுகிய பாலத்தின் மீது கடலில் பயணிக்கும் போது இந்த பயணம் பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. பாம்பன் பாலம் மீது பயணிக்கும் எவரும் நிச்சயம் பிரமிப்படையாமல் இருக்க முடியாது.

3

ஜெய்சால்மர் - ஜோத்பூர்

'டெசர்ட் குயின்' ரயில் பாதையில் செரோஃபைடிக் தாவரங்கள், மஞ்சள் மண், குன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பாலைவன வாசிகளின் சிறு சிறு குடியிருப்புகள் போன்ற பொதுவான பாலைவன நிலப்பரப்பு போன்ற பலதரப்பட்ட நிலப்பரப்பை நீங்கள் கண்டு மகிழலாம். 6 மணி நேர பயணம் கொண்ட இந்த அழகிய ரயில் பாதை பயணம் இந்தியாவின் மிக அழகான ரயில் பயணங்களில் ஒன்றாகும்.

4

ஜம்மு - பாரமுல்லா

ஜம்மு, உதம்பூர், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில் பாதை அழகானது மற்றும் வசீகரமானது மட்டுமல்ல, மிகவும் சவாலானதும் கூட. உயரமான மலைப்பாதைகள் மற்றும் கடுமையான நிலப்பரப்புகளுக்கு இடையே கடுமையான குளிருக்கு நடுவே பயணம் செய்யும் போது, காஷ்மீரின் அழகில் திளைப்பதோடு சாகசத்தையும் உணருவீர்கள்.

5

கல்கா - சிம்லா

அழகிய பள்ளத்தாக்குகள், செங்குத்தான பாதைகள் மற்றும் பனிமூட்டமான புல்வெளிகள் வழியே இந்த அழகிய பயணம் சிம்லாவிற்கு பயணிக்கும் பயணிகளின் மனதை கவர்கிறது. செங்குத்தான பாதையை கட்டி முடித்ததற்காக 'கின்னஸ் சொசைட்டி'யால் இது மிகவும் பாராட்டப்பட்ட ஒரு முயற்சியாகும். ஐந்து மணி நேரம் நீடிக்கும் இந்த பயணத்தில் 20 ரயில் நிலையங்கள், 102 சுரங்கப்பாதைகள், 900 வளைவுகள் மற்றும் 82 பாலங்களை நீங்கள் கடந்து செல்வீர்கள்.

6

ரத்னகிரி - மங்களூர்

இயற்கையின் சில அசாதாரண அழகை அனுபவிக்க ரத்னகிரியில் இருந்து மங்களூர் செல்லும் கொங்கன் இரயில்வேயில் நீங்கள் பயணிக்க வேண்டும். அடர்ந்த காடுகள், வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆழமான சுரங்கங்கள், ஆற்றுப் பாலங்கள், கூர்மையான வளைவுகள் மற்றும் எண்ணற்ற பருவகால நீரோடைகள் வழியே செல்லும் இந்த மயக்கும் இந்த ரயில் பயணம் இந்தியாவின் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இரயில் பயணங்களில் ஒன்றாகும்.

7

கவுகாத்தி - சில்சார்

ஜடிங்கா நதி, பசுமையான அசாம் பள்ளத்தாக்கு, தேயிலை தோட்டங்கள் மற்றும் அலை அலையான ஹஃப்லாங் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் இந்த அழகிய பாதை உங்கள் மனதை மயக்க தவறாது. கவுகாத்தியில் இருந்து லும்டிங் மற்றும் பராக் பள்ளத்தாக்கு வழியாக சில்சார் செல்லும் பாதை இந்தியாவின் மிக அழகான ரயில் பயணங்களில் ஒன்றாகும்.

8

புதிய ஜல்பைகுரி - டார்ஜிலிங்

நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் இந்த அழகிய பயணம் 78 கிமீ நீளமுள்ள ஒரு 8 மணிநேரம் பயணமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த மலைப்பாதை ரயில் பயணத்தில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் டார்ஜிலிங்கிற்கு வருகிறார்கள். இந்த டாய் டிரெயினில் பயணம் செய்தபடியே கஞ்சன்ஜங்கா மலையின் அழகைப் பார்த்து ரசிப்பதை நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.

More News

Read more about: travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+