» » கிறிஸ்துமஸை தெறிக்க விடும் அந்த 10 இந்திய நகரங்கள் எவை தெரியுமா

கிறிஸ்துமஸை தெறிக்க விடும் அந்த 10 இந்திய நகரங்கள் எவை தெரியுமா

Written By: Udhaya

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள கிறிஸ்துவ மதத்தினர் உட்பட பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் இந்த பண்டிகையை உற்சாகம் கரைபுரல கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த பண்டிகை ஆர்முடன் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதுமுள்ள கிறித்துவ தேவாலயங்களில் அலங்காரங்கள், சான்டாகிளாஸ் உடை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்  டாப் 10 நகரங்களைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

கோவா

கோவா

வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வரும் சுற்றுலாத்தளம் என்பதால் இங்கு கிறிஸ்துமஸ் பரவலாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள தேவாலயங்களில் பிரார்த்தனைகளில்
ஈடுபட்டும், கேக், கிறிஸ்துமஸ் பரிசு வழங்கியும், வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவை தெறிக்க விடும் நகரங்களின் பட்டியலில், கோவா முக்கிய பங்கு வகிக்கிறது.
இரவு விருந்துகள், கடற்கரையில் நண்பர்களுடன் கொண்டாட்டம் என இந்த கிறிஸ்துமஸ் இரவு டரியலாகப் போகின்றது என்று வைத்துக்கொள்ளுங்களேன்...


PC: HolidayLandmark

சில்லாங்

சில்லாங்

கிறிஸ்துமஸ் நேரங்களில் வடகிழக்கு இந்தியாவில் அதிகப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபடும் நகரம்
சில்லாங்க். நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது இன்றைய கிறிஸ்துமஸ் இரவு இங்கு கொண்டாடுபவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.

PC: HolidayLandmark

புதுச்சேரி

புதுச்சேரி

இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வசிக்கும் இன்னொரு பகுதி புதுச்சேரி. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நீங்கள் பாண்டிச்சேரி அருகிலிருந்தால் உடனடியாக கிளம்புங்கள் அதிர வைக்கும் கிறிஸ்துமஸ் இரவு காத்திருக்கிறது உங்களுக்காக....


PC: HolidayLandmark

கேரளா

கேரளா

கேரளாவில் கிட்டத்தட்ட மற்ற இரு மதங்களுக்கு நிகரான எண்ணிக்கையில் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி மாற்று மதத்தினரும் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் உள்ளது. நீங்கள் கேரளாவில் இருந்தால் கிட்டத்தட்ட மாநிலம் முழுவதுமே இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை கண்குளிரக் காணலாம்.

PC: HolidayLandmark

மும்பை

மும்பை

தொழில் நகரமான மும்பையில் கிறிஸ்துமஸ் பெருவிழா மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாலையே தொடங்கிவிடும் ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டங்களுடன், தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெறும். மால்கள், பூங்காக்கள், தேவாலயங்கள் என பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விளக்குகள், அலங்காரச் செடிகள் தொங்கியபடியே காட்சிதருகின்றன. நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு கிறிஸ்துமஸை மும்பையில் கொண்டாடவேண்டுமென்று முடிவு செய்துகொள்ளுங்கள்...

PC: British High Commission, New Delhi

கொல்கத்தா

கொல்கத்தா

சான்டா மகிழ்ச்சியை கொண்டு வரும்வரை ஏன் காத்திருக்கவேண்டும். நாம் நமக்குள்ளேயே மகிழ்வை பகிர்வோம். கத்தோலிக்கர்களோ இல்லையோ.. நாம் அனைவரும் இணைந்து இந்த கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுவோம்.


PC: Dipanjan Roy

பெங்களூரு

பெங்களூரு

சொகுசான இருக்கைகளில் அமர்ந்து, வண்ண விளக்குகளை ரசித்துக்கொண்டு, கேக்குகளைப் பகிர்ந்துண்டு உங்கள் கிறிஸ்துமஸை கொண்டாட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் பெங்களூருதான் உங்கள் சிறந்த சாய்ஸ்.. பண்டிகை மதுவை சுவைத்து, அலங்கரிக்கப்பட்ட இனிப்புகளை பகிர்ந்து கொண்டு உங்கள் மனம் விரும்புபவர்களுடன் இந்த கிறிஸ்துமஸ் இரவு இனிதாகட்டும்.

PC: ckshanthakumar

டையூ

டையூ

கிறிஸ்துமஸை கொண்டாடும் டாப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு டையூ பொருத்தமானதா என்ற சந்தேகம் வரலாம். ஆனால் இங்கு நடைபெறும் விசித்திரமான விளையாட்டுக்கள், நடனப் போட்டிகள், ஆட்டம் பாட்டம், நைட் பார்ட்டிகள், கேளிக்கை விடுதி விருந்துகள் இந்த பட்டியலில் இடம்பெறச்செய்துள்ளது.

PC: HolidayLandmark

சென்னை

சென்னை

சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவது வழக்கம். குடும்பமாக சேர்ந்து பிரார்த்தனைகளை முடித்த பின்பு, கிறிஸ்துமஸ் மது வகைகள், கேக்குகள், இனிப்புகள் என கொண்டாட்டம் களைகட்டும். இங்குள்ள மால்களில் பல போட்டிகள் வைத்து, சான்டாக்கள் வேடமணிந்து பரிசுகள் வழங்குவது வழக்கம். இன்று இரவிலிருந்து களைக்கட்டும் விருந்துகளில் பங்கேற்க விரும்புபவர்கள் சென்னையில் உள்ள மால்களுக்கு செல்லுங்கள்.


PC: Srinivasan Rengaswami

டெல்லி

டெல்லி

நாட்டின் தலைநகரான டெல்லியில் கிறிஸ்துமஸ் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். மற்ற பண்டிகைகளைப் போல கிறிஸ்துமஸை டெல்லி இளைஞர்கள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இறை வழிபாடு தவிர்த்து, டெல்லியி்ல் இன்னும் சிறப்பான முறையில் கொண்டாட்டங்கள் களைக்கட்டும்....

PC: HolidayLandmark