Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு முறை பொள்ளாச்சி போய் பாருங்க - ஊட்டி, கொடைக்கானலையே மறந்துடுவீங்க!

ஒரு முறை பொள்ளாச்சி போய் பாருங்க - ஊட்டி, கொடைக்கானலையே மறந்துடுவீங்க!

வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட பொள்ளாச்சி நகரம் வசீகரமான இயற்கை அழகைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் இதமான காலநிலையையும் வழங்குகிறது. அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக பொள்ளாச்சியில் ஏகப்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்பது நாம் ஏற்கனவே அறிந்த விஷயமே. பல நகரங்களில் இருந்தி எளிதில் அணுகக்கூடிய பொள்ளாச்சியில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இது ஊட்டி மற்றும் கொடைக்கானலை போல அல்லாமல் மிகவும், பட்ஜெட் ஃபிரண்ட்லி!

anaimalaihills1

ஆனைமலை மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரலில் அமைந்துள்ள ஆனைமலை பசுமையான காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், இயற்கை எழிலும் நிறைந்த ஒரு மலைத்தொடராகும். சின்னார் வனவிலங்கு சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் இரவிகுளம் தேசிய பூங்கா ஆகிய அனைத்தும் இந்த ஒரு இடத்தில் அமைந்துள்ளது. நண்பர்களுடன் இளசுகள் அனைவரும் இங்கு கூட்டம் கூட்டமாக ட்ரெக்கிங் செய்வதும், குழந்தைகளுக்கான ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாடாக இருப்பதால் இங்கு குடும்பங்கள் வருகை தருவதும் இங்கு வழக்கமே!

குரங்கு நீர்வீழ்ச்சி

குரங்கு நீர்வீழ்ச்சி வால்பாறைக்கு வடக்கே பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் ஆழியாறு அணையிலிருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆனைமலை மலைத்தொடரின் சாரலில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பொள்ளாச்சி அருகே பார்க்க வேண்டிய இடங்களாகும். மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது, அருவியில் குளிப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த இடத்தில் பல குரங்குகள் உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்ட இந்த மயக்கும் நீர்வீழ்ச்சியின் அழகில் நம் மனதை தொலைப்பது உறுதி.

topsliptigerreserve1

டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ்

பொள்ளாச்சியில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ் பொள்ளாச்சியின் முதன்மையான சுற்றுலாத் தலமாகும். சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கிற இந்த இடத்தில் பல வனவிலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் கண்டு களிக்கலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கு யானை சபாரி செய்து மகிழலாம். இயற்கை அழகால் கட்டிப் போடுகிற இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கும் அமைதி விரும்புகளுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

ஆழியார் அணை

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆழியார் அணையில் நீர் தேக்கம் மட்டுமின்றி மினி தீம் பார்க், தோட்டம், படகு சவாரி, விளையாட்டு பகுதி மற்றும் மீன்வளம் போன்ற மற்ற செயல்பாடுகளின் பட்டியலையும் கொண்டு, இது பொள்ளாச்சியில் பார்க்க வேண்டிய இடங்களில் இடம் பிடிக்கியது. நீர்த்தேக்கத்தை சூழப்பட்ட ஆனைமலை மலைத்தொடரின் காட்சி கண்களுக்கு விருந்தாகவும், அணையின் மேல் இருந்து விழும் நீர் அருவி இயற்கை எழில் கொஞ்சும் விதமாகமாகவும் இருப்பதாலேயே இங்கு மக்களின் கூட்டம் அதிக காணப்படுகிறது.

valparai1

வால்பாறை

பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமான வால்பாறை, தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் சூழப்பட்ட மிதமான வானிலையில் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வால்பாறையே ஒரு தனி சுற்றுலாத் தலமாகும், நீங்கள் அங்கு சென்றால் ஒரு நாளில் திரும்பி வர நிச்சயம் முடிவு செய்யமாட்டீர்கள். ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலை சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் நிறைந்த வால்பாறை உங்களுக்கு ஒரு மறக்கமுடியாத பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அட்டகட்டி மற்றும் லோம்ஸ் வியூ பாயின்ட

ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஒன்பதாவது ஹேர்-பின் வளைவில் இந்த வியூ பாயின்ட் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து ரம்மியமான நிலப்பரப்பைக் காணும் வாய்ப்பை இது சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது. பத்தாவது மற்றும் பதினொன்றாவது வளைவில் இருந்து வியூ விரிவடைகிறது, ஆனால் ஒன்பதாவது மிகவும் சிறப்புமிக்கதாகும். ஏனெனில் இது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கும், எண் பாறை மற்றும் நல்லமுடி பூஞ்சோலையை பார்ப்பதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது.

maasaaniammantemple1

மாசாணி அம்மன் கோவில்

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலைப் பற்றி தமிழ்நாட்டில் அறிந்திடாதோர் எவரும் இருக்க முடியாது. இந்துக்களிடையே மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த கோவில் மிகவும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தலமாகும். பொள்ளாச்சியிலிருந்து 20 - 30 நிமிடங்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலை அடையலாம். நான்கு கைகளுடன் கபாலம், பாம்பு, மேளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 15 அடி உயரத்தில் படுத்த நிலையில் அம்மன் இங்கு காட்சியளிக்கிறார். பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் நலன்புரி அரசாகவும், மக்களின் உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருத்துவ மருந்தகமாகவும், ஆண்கள் மற்றும் பெண்களின் துன்பங்களைக் குறைக்கும் நீதி மன்றமாகவும் இந்தக் கோவில் திகழ்கிறது.

மேலும் அறிவு திருக்கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், திருமூர்த்தி மலை, ஆத்துப்பாறை நீர் அருவி ஆகியவையும் நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

More News

    Read more about: travel tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+