Search
  • Follow NativePlanet
Share

வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!

18

வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதற்காக வைசாலி நகரம் மிகவும் அறியப்பட்டிருக்கிறது.

வைசாலி நகரம் அங்கு வந்து சென்ற பயணிகளின் நினைவில் இருந்து என்றென்றும் நீங்காத இடம் பெற்றிருக்கும் நகரமாகும். இந்நகரத்தின் வரலாற்றைப் பற்றி பேசும் போது இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில், வைசாலி அரசரைப் பற்றி பேசப்பட்டிருப்பதை குறிப்பிடலாம். மகாவீரர் பிறப்பதற்கு முன்னரே, இந்நகரம் லிச்சாவி நாட்டின் தலைநகரமாக இருந்துள்ளது.

மகாவீரர் இந்நகரத்தில் பிறந்ததாலும் மற்றும் புத்தர் வேறு பல வகைகளில் இந்த இடத்தின் நினைவுகளில் இடம் பெற்றிருப்பதாலும் இந்நகரம் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது.

புத்தர் ஞானோதயம் அடைந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது புத்த சமய மாநாட்டை நடத்திய இடமாகவும் வைசாலி உள்ளது. கி.மு.6-வது நூற்றாண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டிருந்த உலகின் முதல் குடியரசு நாடாக வைசாலி இருந்ததாக பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைசாலி ஒரு சிறந்த வணிக தலமாகவும் வைசாலி இருந்துள்ளது. புத்தருடைய கடைசி சொற்பொழிவு மற்றும் பின்னால் வரும் அவருடைய நிர்வாண நிலை பற்றி அறிவித்த கொலுகாவில் வாழ்நிலை தூண் (Life size) ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.

மதம், கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறைகளில் மிகவும் ஆழமான பதிவுகளை கொண்டிருக்கும்  சுற்றுலா அமைவிடமாக வைசாலி உள்ளது.

அசோகர் தூண், புத்தர் ஸ்தூபி, குண்டல்பூர், ராஜ் விஷால் கா கார், காரனேஷன் குளம், புத்தி மாய், ராம்சௌரா, வைசாலி அருங்காட்சியகம், உலக அமைதி பகோடா ஆகியவை வைசாலி சுற்றுலாவின் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

மகாவீரரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வைசாலி மஹோத்சவம் மற்றும் நகரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள சோன்பூர் கண்காட்சி ஆகியவைகளுக்காகவும் வைசாலி மிகவும் அறியப்படும் இடமாக உள்ளது.

இவை மட்டுமல்லாமல், மதுபானி ஓவியங்கள், கற்சிற்பங்கள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களுக்காகவும் வைசாலி மிகவும் அறியப்படுகிறது. இந்த கலை மற்றும் கைவினைப் பொருட்களை இங்கு வரும் அனைவரும் புகழ்வதுடன், அவற்றில் சிலவற்றை இங்கிருக்கும் கிராமப்புற கடைகளிலும் வாங்கி செல்கின்றனர்.

வைசாலியின் உள்ளூர் கைவினைப் பொருட்களாக வீடுகளில் செய்யப்பட்ட பொம்மைகள் மற்றும் லாக் வளையல்கள் உள்ளன. பிளேட் புற்களைக் கொண்டு நெய்யப்படும் அழகிய 'சிக்கி வேலைப்பாடுகள்' மிகுந்த கூடைகள் மற்றும் பாய்களுக்காகவும் வைசாலி புகழ் பெற்றிருக்கிறது.

புத்துணர்ச்சியும், சாறும் நிரம்பிய லிச்சி பழங்கள் இங்கே உங்கள் நாவிற்கு சுவையூட்ட காத்திருக்கின்றன. சாலை, இரயில் மற்றும் விமானம் என மூன்று வகை போக்குவரத்து வசதிகளாலும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள வைசாலி நகரத்தை உங்களால் எளிதில் அடைய முடியும்.

வளமான பாரம்பரியத்துடன் இன்னமும் மிகவும் நல்ல பிணைப்புடன் இருப்பதுதான் வைசாலி சுற்றுலாவின் சிறப்பான தரமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இன்னும் அதனை கண்டு இரசிக்க முடியும்.

மித வெப்ப பருவநிலையை கொண்டிருக்கும் இந்த நகரத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் சுற்றுலா வரலாம். வைசாலியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள முஸ்ஸாஃபாபூர் இந்தியாவின் லிச்சி தலைநகரம் என்று அழைக்கப்படும் இடமாகும்.

வைசாலி சிறப்பு

வைசாலி வானிலை

சிறந்த காலநிலை வைசாலி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வைசாலி

  • சாலை வழியாக
    வைசாலி சாலை வசதிகளால் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வைசாலியில் இருந்து பாட்னாவிற்கும், வடக்கு பீகாரில் உள்ள பிற நகரங்களுக்கும் தொடர்ச்சியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாட்னாவில் இருந்து தொலைக்காட்சி பெட்டி வசதியுடைய பேருந்துகள் வைசாலிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    35 கிமீ தொலைவில் உள்ள ஹாஜிபூர் இரயில் நிலையம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் வாரணாசி இரயில் நிலையங்களுடன் தொடர்பில் உள்ளது. இங்கிருந்து, இந்த இடங்களுக்கு செல்ல தொடர்ச்சியான இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    70 கிமீ தொலைவில் உள்ள பாட்னா விமான நிலையம் வைசாலிக்கு மிகவும் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். பெருநகரங்கள் மட்டுமல்லாமல் வேறு சில நகரங்களுடனும் இந்த விமான நிலையம் தொடர்பிலுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Sep,Sun
Return On
14 Sep,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Sep,Sun
Check Out
14 Sep,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Sep,Sun
Return On
14 Sep,Mon