அக்கணா மற்றும் மடண்ணா குகைகள், விஜயவாடா

முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » ஈர்க்கும் இடங்கள் » அக்கணா மற்றும் மடண்ணா குகைகள்

விஜயவாடா பகுதியில் இந்த அக்கணா மற்றும் மடண்ணா குகைகள் எனப்படும் பாறைக்குடைவு குகைக்கோயில்கள் உள்ளன. 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அப்துல் ஹசன் தனாஷா என்பவரின் அவைப்பிரதானிகளான அக்கணா மற்றும் மடண்ணா ஆகியோரின் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

இருவருமே இந்த குகைக்கோயில்களோடு சம்பந்தப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கனதுர்க்கா கோயிலுக்கு செல்லும் வழியிலேயே மலையடிவாரத்தில் இந்த குகைக்கோயில்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு குடைவறைக்குகைகளில் மேற்பகுதியில் அமைந்திருப்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரர் ஆகிய மும்மூர்த்திகள் சித்தரிக்கப்பட்டுள்ள கோயிலாக காட்சியளிக்கிறது.

Please Wait while comments are loading...