காந்தி ஸ்தூபம், விஜயவாடா

விஜயவாடா நகரத்தில் உள்ள காந்தி மலையில் இந்த காந்தி ஸ்தூபம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு ஸ்தூப அமைப்புகளுடன் காணப்படும் இந்த நிர்மாணம் மஹாத்மா காந்திக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

500 அடி உயரத்தை கொண்டுள்ள ஒரு மலையின்மீது இந்த ஸ்தூப ஸ்தலம் அமைந்துள்ளது. 1968ம் ஆண்டில் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். ஜாஹீர் ஹுசேன் அவர்களால் இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

சிவப்பு பளிங்கு கற்களால் ஆன இந்த ஸ்தூப அமைப்பு 52 அடி உயரம் கொண்டதாக, நந்தலால் போஸ் எனும் சிற்பியின் தலைமையில் துர்கி கிராமத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த நினைவுச்சின்ன வளாகத்திலேயே ஒரு காந்தி நினைவு நூலகம், காந்தி காட்சிப்பட திரையரங்கு மற்றும் ஒரு கோளரங்கம் (பிளானட்டோரியம்) போன்றவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Please Wait while comments are loading...