மொகலாராஜபுரம் குகைகள், விஜயவாடா

இந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன.

10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன.

தற்போது சிதிலமடைந்த நிலையில் சரியான பராமரிப்பின்றி இவை காணப்படுவது ஒரு துரதிர்ஷ்டமேயாகும். இந்த குகைக்கோயில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக்கோயில்களை தரிசிக்க வருகை தருகின்றனர். ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டு ஒரு காலப்பொக்கிஷமாக இந்த குடைவறைக்கோயில்கள் வீற்றிருக்கின்றன.

Please Wait while comments are loading...