ராஜீவ் காந்தி பார்க், விஜயவாடா

விஜயவாடா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றாக இந்த ராஜீவ் காந்தி பார்க் அறியப்படுகிறது. விஜயவாடா நகரத்தில் நுழையும்போதே இந்த பூங்காவை பயணிகள் பார்க்க முடியும்.

விஜயவாடா நகராட்சியால் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ஒரு இசை நீரூற்றும் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் மாலை நேரத்தில் இயக்கப்படுகிறது.

பூங்காவின் புல்வெளிகள் மற்றும் ஒரு சிறிய வனவிலங்கு காட்சிக்கூடம் ஆகியவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. கற்கால விலங்குகளின் உருவமாதிரிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கல்விப்பூங்காவும் இந்த பூங்கா வளாகத்தில் காணப்படுகிறது.

Please Wait while comments are loading...