சிபார் டிஸ்னி லேண்ட், விஜயவாடா

சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகவே ஒரு சொர்க்கம் போன்று இந்த சிபார் டிஸ்னி லேண்ட் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. விஜயவாடா நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள இந்த நவீன பொழுதுபோக்கு பூங்கா குடும்பத்தினருடன் இன்பமாக கழிப்பதற்கு மிகவும் ஏற்ற உல்லாசபுரியாகும்.

இங்கு பலவிதமான வழுக்கு மேடை அமைப்புகள், நீர் விளையாட்டு தடாகங்கள், பல்வகை இயந்திரச்சவாரிகள், உணவுக்கூடங்கள், பரிசுப்பொருள் அங்காடிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனுள்ளே அமைக்கப்பட்டுள்ள ஒரு செயற்கை எரிமலை அமைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்வதாக உள்ளது. குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக விஜயவாடாவில் விஜயம் செய்ய வேண்டிய ஒரு பொழுதுபோக்கு ஸ்தலம் இந்த சிபார் டிஸ்னி லேண்ட் ஆகும்.

Please Wait while comments are loading...