விஜயேஸ்வரர் கோயில் இந்திரகீலாத்ரி மலையின் மீது அமைந்துள்ளது. மிக அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.
புராதனமான இந்த கோயில் பற்றிய குறிப்புகள் மஹாபாரத காவியத்தில் இடம்பெற்றுள்ளன. புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில் வேடுவ ரூபத்தில் வந்த சிவபெருமானுடன் போரிட்டு அர்ஜுனன் ஜெயித்ததாகவும் அப்போது இந்த கோயில் சிலையையும் ஸ்தாபித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த புராணக்கதை கோயிலின் சுவரில் கல்வெட்டாக வடிக்கப்பட்டிருப்பது மற்றொரு ஆச்சரியமான அம்சமாகும். அந்நாளைய கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாக வீற்றிருக்கும் இக்கோயில் ஆன்மிக புராணிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டு அவசியம் தரிசிக்க வேண்டிய வரலாற்றுச்சின்னமாகும்.



Click it and Unblock the Notifications