ஆக்ரா கோட்டை அல்லது செங்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வரலாற்றுக்கோட்டை டெல்லியிலுள்ள செங்கோட்டைக்கு முன்னோடியாகும். வடிவவைப்பு மற்றும் கலையம்சங்கள் போன்ற யாவற்றிலும் ஒத்து காணப்படும் இந்த கோட்டைகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த கோட்டையை பார்த்தவுடனேயே இது டெல்லி செங்கோட்டையை ஒத்திருப்பதை பயணிகள் உணர்ந்துவிடுகின்றனர். தாஜ் மஹாலை அடுத்து ஆக்ராவில் உலகப்பண்பாட்டு சின்னமாக இந்த செங்கோட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோட்டை முகலாயப்பேரரசர் அக்பரால் 1565ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. எனினும் மற்றொரு சுவாரசியமான தகவலாக கி.பி 1000 த்திற்கு முன்பே இக்கோட்டை கட்டப்பட்டுவிட்டதாகவும் அக்பர் இதனை புதுப்பிக்க மட்டுமே செய்தார் என்றும் இந்த கோட்டை வாசலிலுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்த கோட்டை ஷாஜஹான் மன்னர் காலத்தில் இன்னும் மெருகேற்றப்பட்டு பல புதிய கட்டமைப்புகளும் நிர்மாணிக்கப்பட்டன. பிறை நிலா வடிவில் யமுனை நதிக்கு எதிரே இந்த அரண்மனை அமைந்துள்ளது. பாதுகாப்புக்கொத்தளங்கள் இந்த கோட்டையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய அம்சமாக காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications