Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூர்க் » ஈர்க்கும் இடங்கள் » பாகமண்டலா

பாகமண்டலா, கூர்க்

86

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக இந்த பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இந்த இடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது.மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர். திரிவேணி சங்கமத்திற்கு அருகில் பிரசித்தி பெற்ற பாகெந்தேஸ்வர கோயில் அமைந்துள்ளது.

இங்கு பாஹேந்தேஸ்வரர், சுப்ரமண்ய சுவாமி, மஹாவிஷ்ணு மற்றும் கணபதி போன்ற தெய்வங்களுக்கான சிலைகள் காணப்படுகின்றன. இந்த கோயில் இருக்குமிடம் பாஹெந்தேஸ்வர ஷேத்திரம் என்று அழைக்கப்படுவதால் இந்த ஒட்டுமொத்த ஸ்தலமும் பாகமண்டலா என்றே அழைக்கப்படுகிறது. கேரள கட்டிட கலை பாணியில் இங்குள்ள கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

1785 லிருந்து 1790 வரை இப்பகுதி திப்பு சுல்தானின் ஆளுகைக்குள் இருந்தது. அச்சமயம் இப்பகுதி அஃப்சலாபாத் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1790ம் ஆண்டு தொட்ட வீர ராஜேந்திரா இப்பகுதியை மீட்டு கொடகு பகுதியை தனி  ராஜ்யமாக மாற்றியபின் திரும்பவும் இந்த பாகமண்டலா தன் பழைய தொன்மைக்கு மீட்டுக்கொண்டது.

பாக மண்டலா மடிகேரியிலிருந்து 33 கி.மீ தூரத்தில் வீர ராஜபேட் மற்றும் அருகிலுள்ள கேரள நகரங்களுடன் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue