Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூர்க் » ஈர்க்கும் இடங்கள் » பொல்லிபெட்டா

பொல்லிபெட்டா, கூர்க்

86

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விவசாய பள்ளதாக்கு பகுதி இந்த பொல்லிபெட்டா ஆகும். இது இங்குள்ள காபி தோட்டங்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த காபி தோட்டங்கள் பொல்லிபெட்டாவிலிருந்து அம்மத்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளன.

டாட்டா காபி தோட்டங்களின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. டாடா நிறுவனம் தனக்கு சொந்தமாக 10000 ஏக்கர் நிலத்தில் காபித் தோட்டங்களை கொண்டுள்ளது. காபித்தோட்டங்கள் என்ற போதிலும் இவற்றில் ஊடுபயிராக மிளகு, ஏலக்காய் மற்றும் வெனிலா போன்ற பணப்பயிர்கள் விளவிக்கப்படுகின்றன.

இந்த காபித்தோட்டங்களில் காபிச்செடிகளுக்கு நிழல் தரும் வகையில் பெரிய மரங்களும் வளர்க்க படுகின்றன. இந்த பொல்லிபெட்டா பகுதி சிறந்த காபி விதைகளுக்கான இடம் என்ற புகழைப்பெற்றுள்ளது. தரமான காபி விதைகள் இங்குள்ள தோட்டங்களில் விற்பனைக்கு தயாராகின்றன.

காபி மட்டுமல்லாது இந்த பிரதேசத்தில் ஆரஞ்சும் பயிர் செய்யப்படுகிறது. அத்துடன் நெல் பயிரும் இங்கு விளைவிக்கப்படுகிறது. டாடா காபி எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான ‘ப்ளான்டேஷன் ட்ரெயில்ஸ்’ எனும் ரிசார்ட் விடுதியும் காபி தோட்டங்களுக்கிடையே அமைந்துள்ளது.

ஒரு பழைய கோட்டை ஒன்றும் பௌத்த கோயில் ஒன்றும் இங்கு உள்ளது. ஒட்டுமொத்த பொல்லிபெட்டா நகரமும் பசுமையும் செழுமையாக காட்சியளிக்கின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 May,Tue
Return On
20 May,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 May,Tue
Check Out
20 May,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 May,Tue
Return On
20 May,Wed