மடிக்கேரிக்கும் குஷால்நகருக்கும் இடையில் மங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இந்த சுண்டி கொப்பா எனப்படும் சிறு நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள காப்பி மற்றும் மிளகு எஸ்டேட்களுக்கு சுண்டிகொப்பா பிரசித்தி பெற்றுள்ளது.
மதுரம்மா எஸ்டேட் இங்குள்ள பெரிய காபி எஸ்டேட் ஆகும். இங்குள்ள உள்ளூர் மக்கள் கால் பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக உள்ளனர். உள்ளூர் கால்பந்து சங்கம் வருடந்தோறும் போட்டிகளை நடத்துகிறது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் வாரச்சந்தைகளில் பொருட்களை வாங்குபதற்காக அருகிலுள்ள எஸ்டேட்களிலிருந்து இங்கு கூடுகின்றனர். கொடஹரஹள்ளி, கம்பிபானே, ஹொசகோடே, நாக்கூர், கரகண்டூர், கெடக்கல், கட்லேமனே போன்றவை இதன் அருகில் உள்ள கிராமங்களில் சில. பெருநகர சந்தடியிலிருந்து விலகி நாட்டுப்புற அமைதியை காண விரும்புகின்றவர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications