பங்கி, கட்டாக்

மகாநதியின் வலதுபக்க கரையில், கட்டாக் நகரில் இருந்து 52கிமீ தொலைவில் உள்ள இவ்வூரில் சர்சிகா கோவில் உள்ளது. ருசிகா பர்வதா என்ற குன்றின் மேல் உள்ள இந்த கோவில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  

எட்டு கைகள் கொண்ட சாமுண்டா அம்மனின் இந்த கோவிலின் பிரதான தெய்வமாகும். மனித உடல் போன்ற சிலையின் மேல் அமர்ந்திருக்கும் அம்மன், கழுத்தில் மனித மண்டையோடுகளை அணிந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் வரும் இக்கோவிலுக்கு கட்டாக்கில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

Please Wait while comments are loading...