Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » பாபா கரக் சிங் மார்க்

பாபா கரக் சிங் மார்க், டெல்லி

341

டெல்லியிலுள்ள ‘பாபா கரக் சிங் மார்க்’  எனப்படும் ஒரு சந்தடி நிறைந்த மார்க்கெட் பகுதியில் நிரம்பியுள்ள வணிக அங்காடிகள் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பிரசித்தமாக அறியப்படுகின்றன.

இங்குள்ள ஸ்டேட் எம்போரியா காம்ப்ளக்ஸ் எனும் வளாகத்தில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து  கொண்டுவரப்பட்ட அருமையான கலையம்சம் நிரம்பிய துணி வகைகள் மற்றும் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  

இந்த ஸ்டேட் எம்போரியா காம்ப்ளக்ஸ் வளாகத்தில்  ‘ஜூன்’ எனப்படும் காஷ்மீர எம்போரியத்தில் கண்ணைக்கவரும் காஷ்மீர் சால்வைகளை வாங்கலாம். பூம்புகார் எனப்படும் தமிழ்நாட்டுக்கு சொந்தமான எம்போரியத்தில் பித்தளை விளக்குகள் மற்றும் அழகுப்பொருட்கள் விற்கப்படுகின்றன.

காவேரி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநில எம்போரியத்தில் பட்டு துணி வகைகள் ஏராளம் கிடைக்கின்றன. ஆம்ரபாலி என்றழைக்கப்படும் பீஹார் எம்போரியத்தில் மதுபணி ஓவியங்கள் பயணிகளின் கண்களை கவர்கின்றன. ராஜஸ்தானுக்கான ராஜஸ்தளி எம்போரியத்தில் அம்மாநிலத்தின் பிரத்யேக கைவினைப்பொருட்கள் கிடைக்கின்றன.

வண்ண அச்சு பருத்தி துணிகள், குறு ஓவியங்கள் மற்றும் ஆபரண வகைகளுக்கு இருக்கவே இருக்கிறது குர்ஜரி எனப்படும் குஜராத் மாநிலத்துக்கான விற்பனையகம். மேற்கு வங்காள அங்காடியில் மென்மையான பட்டு வகைகள், பருத்தி புடவைகள் மற்றும் புதிதான தேயிலை போன்றவை கிடைக்கின்றன.

மிருக்ஞயானி எனப்படும் மத்தியப்பிரதேச அங்காடியில் மரத்தில் செதுக்கப்பட்ட  பலவித கைவினைப்பொருட்களை கலாரசிகர்கள் வாங்கிக்கொள்ளலாம். இவை மட்டுமல்லாமல் புர்பாஷா என்றபெயரில் மூன்று அடுக்குகளில் அமைந்திருக்கும் திரிபுரா மாநில அங்காடியில் மூங்கில் மற்றும் பிரம்பால் ஆன வித்தியாசமான அழகுப்பொருட்கள் ரசனை மனம் கொண்டவர்களுக்காகவே காத்திருக்கின்றன.

எம்போரியா வளாகத்துக்கு அருகிலேயே ராஜிவ் காந்தி ஹேண்டிகிராஃப்ட்ஸ் பவன் எனும் மற்றொரு அங்காடி வளாகமும் அமைந்துள்ளது. இங்கு புத்தகங்கள், காகிதப்பொருட்கள், நாட்டுப்புற கைவினைப்பொருட்கள் மற்றும் இதர அழகுப்பொருட்கள் விற்கப்படுகின்றன.

பாபா கரக் சிங் மார்க் பகுதியில் உள்ள ஒரு ஹனுமான் கோயிலும் பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். நாட்டிலுள்ள மிகப்பழமையான ஹனுமான் கோயில்களில் இதுவும் ஒன்று என்பதாக கருதப்படுகிறது.

இந்த கோயிலில் ஆஞ்சநேயர் இளமைத்தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இக்கோயிலில் அதிக பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu