Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » சாக்ரெட் ஹேர்ட் கதீட்ரல்

சாக்ரெட் ஹேர்ட் கதீட்ரல், டெல்லி

341

சாக்ரெட் ஹேர்ட் கதீட்ரல் எனப்படும் இந்த பழமையான ரோமன்  கத்தோலிக்க தேவாலயம் டெல்லியின் முக்கியமான பழமைச்சின்னங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.  14 ஏக்கர் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் இந்த தேவாலய வளாகம் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாய் வீர் சிங் மார்க் எனும் சாலையின் கடைசியில் அமைந்திருக்கிறது.

லியூக் எனும் பாதிரியாளரின் முயற்சியில் வடிவமைக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் பீடப்பகுதியில் ஹென்றி மெட் எனும் கட்டிடக்கலை நிபுணரால் உருவாக்கப்பட்டுள்ள அழகிய இத்தாலிய அலங்கார அம்சங்கள் காணப்படுகின்றன.

வழவழப்பான கற்தரைகள், வளைவான கூரை அமைப்பு மற்றும் கம்பீரமான விதான வளைவு அமைப்புகள் போன்றவை இந்த தேவாலயத்தின் இதர விசேஷமான அம்சங்களாகும்.

வருடம் முழுவதும் பலவித பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவை இந்த தேவாலயத்தில் கொண்டாடப்பட்டாலும் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமன்றி பலவிதமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளும் இந்த தேவாலய வளாகத்தில் வருடமுழுதும் நடத்தப்படுகின்றன. தனது அற்புதமான கட்டிடக்கலை அழகுக்காக இந்த கிறித்துவ தேவாலயம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed