Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » சன்ஸ்கிருதி கேந்த்ரா மியூசியம்

சன்ஸ்கிருதி கேந்த்ரா மியூசியம், டெல்லி

341

சன்ஸ்கிருதி கேந்த்ரா மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகம் புது டெல்லி நகரத்தில் மெஹ்ரௌலி – குர்காவ்ன் சாலையில் உள்ள ஆனந்த்கிராம் எனும் இடத்தில் உள்ளது.

மியூசியம் ஆஃப் டெர்ரகோட்டா, மியூசியம் ஆஃப் எவரிடே ஆர்ட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் மியூசியம் ஆகிய மூன்றுவகையான அருங்காட்சியகப் பிரிவுகள் அல்லது தொகுதிகள் இந்த சன்ஸ்கிருதி கேந்த்ரா மியூசிய வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. 1990ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தனித்தன்மை வாய்ந்த அருங்காட்சியக வளாகம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மியூசியம் ஆஃப் டெர்ரகோட்டா: சுடுமண் கலைப்பொருட்களுக்கான இந்த அருங்காட்சியகத்தில் 1500 வகையான சுடுமண் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு நாட்டுப்புறப்பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பலவிதமான சிலைகள், பழங்குடி இனத்தார் உருவாக்கிய பொம்மைச்சிற்பங்கள், அன்றாடப்பொருட்கள், பாண்டங்கள் போன்றவற்றை இங்கு காணலாம்.

மியூசியம் ஆஃப் எவரிடே ஆர்ட்ஸ்: இந்த அருங்காட்சியகத்தில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சுடுமண் பொருட்கள் மற்றும் உலோகப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதுமையான கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது சாதாரண பொருட்களான சமையல் பாத்திரங்கள், பூஜைப்பொருட்கள், பொம்மைகள் போன்றவை வித்தியாசமான முறையில் தொகுக்கப்பட்டு ஒரு கலைவடிவமாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

டெக்ஸ்டைல் மியூசியம்: இந்த அருங்காட்சியகத்தில் இந்திய நெசவுப்பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நெசவுத்துணி வகைகள் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன.

ரசனை மனம் கொண்டோர்க்கு மிகவும் பிடித்தமான இந்த சன்ஸ்கிருதி கேந்த்ரா மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed