சாந்தினி சௌக் பகுதியில் சிஸ் கஞ்ச் சாஹப் குருத்வாராவுக்கு அருகில் இந்த சுனேரி மஸ்ஜித் அமைந்துள்ளது. முகமது ஷா ஆட்சியின்போது ரோஷன் உத் தௌலா ஜாஃபர் கான் என்பவரால் 1721ம் ஆண்டு இந்த மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
தங்க மசூதி என்ற பெயரைப்பெற்றுள்ள இந்த மசூதி தாமிரத்தால் அமைக்கப்பட்ட குமிழ் கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த தாமிரக்குமிழ் கோபுரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போன்று தகதகப்பதால் தங்க மசூதி என்ற பெயர் வந்துள்ளது.
சுனேரி மஸ்ஜித் என்ற பெயரிலேயே அழைக்கப்படும் மற்றொரு மசூதி செங்கோட்டையின் டெல்லி கேட் வாசலுக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. இது நேதாஜி சுபாஷ் பூங்காவுக்கு நேர் எதிரே காணப்படுகிறது.
சில பயணிகள் இந்த மசூதியை சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ‘தங்க மசூதி’யுடன் குழப்பிக்கொள்வதுண்டு. உண்மையில் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள சுனேரி மஸ்ஜித் மசூதியானது அளவிலும் கீர்த்தியிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு மசூதிகளுக்கு அருகிலும் செங்கோட்டை, ஜாமா மஸ்ஜிதி, சிஸ் கஞ்ச் சாஹப் குருத்வாரா போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications