லாட் பஜார் அல்லது சூடி பஜார் என்று அழைக்கப்படும் இந்த கடைத்தெரு ஹைதராபாத் பழைய நகரப்பகுதியில் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் அழகான வளையல்களை வாங்கலாம்.
மிகப்பழைய பஜார் பகுதியான இது ஹைதராபாத் நகரம் குதுப் ஷாஹி வம்ச ஆட்சிக்குள் வந்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.
பரபரப்பான, சந்தடி மிகுந்த நகரப்பகுதியில் இது அமைந்திருக்கிறது. சார்மினார் மற்றும் சௌமஹல்லா அரண்மனை போன்ற பிரசித்தமான சுற்றுலா அம்சங்கள் இந்த மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் பயணிகள் இதை தவறவிட வாய்ப்பில்லை.
திருமணத்திற்கு முன் மணமகளுக்கான நகைகளை வாங்க மணப்பெண்கள் மற்றும் குடும்பத்தார் இங்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். திருமணத்தை சிறப்பிப்பதற்கு இந்த லாட் பஜாரில் இல்லாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம்.
லாட் வளையல்கள் என்று அழைக்கப்படும் ‘அமெரிக்கன் டைமண்ட்’ பதிக்கப்பட்ட பூச்சு வளையல்கள் இங்கு வெகு பிரசித்தமாக விற்பனையாகின்றன. ஹைதராபாத் வருகை தந்துவிட்டு இந்த லாட் பஜாரில் ஷாப்பிங் செய்யாமல் பயணிகள் ஊர் திரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications