ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ராணுவப்படையில் முக்கிய ஃபிரெஞ்சு தளபதியாக விளங்கிய மைக்கேல் ஜொவாச்சிம் மேரி ரேமாண்ட் என்பரின் சமாதியே ரேமாண்ட் கல்லறை என்று அழைக்கப்படுகிறது.
200 வருடங்கள் பழமையான இந்த கல்லறைக்கு உள்ளூர் மக்கள் ஊதுவத்தி மற்றும் மலர்களுடன் விஜயம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நிஜாம் மன்னர் சார்பாகவும் ஒரு பெட்டி செரூட் பழங்களும் ஒரு பீர் பாட்டிலும் ஒவ்வொரு மார்ச் மாத 25ம் தேதியின் போது வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
1940ம் ஆண்டு வரையில் இந்த கல்லறையானது உள்ளூர் மக்களால் ஒரு சன்னதி போன்று கருதப்பட்டு வந்துள்ளது. நிஜாம் மன்னரின் ராணுவத்தில் முக்கிய பதவி வகித்த இந்த ஃபிரெஞ்சு தளபதி தனது வீரம், கருணை மற்றும் அன்பு போன்ற குணங்களுக்காக மக்களிடையே புகழ் பெற்று விளங்கியுள்ளார்.
நிஜாம் மன்னரின் அபிமானத்துக்குரியவராகவும் இவர் திகழ்ந்துள்ளார். ஹைதராபாத் நகரில் மலாக்பேட் எனும் இடத்திலுள்ள மலைக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டு முஸ்ஸா ராம் பாக் என்று அழைக்கப்படுகிறது.
துரதிர்ஷவசமாக, சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த நினைவுச்சின்னம் 2001ம் ஆண்டில் ஒரு கடும் மழையின்போது சரிந்துவிட்டது. அரசாங்கத்தின் முயற்சியில் இது பின்னர் புதுப்பிக்கப்பட்டு பழைய பொலிவுக்கு திரும்பும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications