Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » திரிமுல்கேரி சர்ச்

திரிமுல்கேரி சர்ச், ஹைதராபாத்

153

‘ஆல் செயிண்ட்ஸ் சர்ச்’ என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்த திரிமுல்கேரி சர்ச் தென்னிந்திய கிறிஸ்துவ தேவாலய சபையின் ஒரு அங்கமாகும். இந்த தேவாலயம் செகந்தராபாத் பகுதியில் திரிமுல்கேரி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஆங்கிலேய ஆட்சியின்போது ராணுவக்கேந்திர தேவாலயமாக விளங்கிய இது ராணுவத்தினரின் மதச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு இது தென்னிந்திய தேவாலயச்சபையிடம் உரிமையளிக்கப்பட்டது.

ஆங்கிலிகன் பிரிவைச்சேர்ந்த இந்த தேவாலயத்துக்கு ஏராளமான தமிழர்கள் விஜயம் செய்வதால் இங்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் பிரார்த்தனைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

உயரமான அலங்கார வளைவு வாசல்கள் மற்றும் தனிதன்மையான ஊசிக்கோபுரங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயம் ஐரோப்பிய காத்திக் கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கிறது.

இதன் பூஜைப்பீடப்பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் யேசு சிலுவையுடன் தோற்றமளிக்கும் அழகான வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு 1884ம் ஆண்டில் ஆர்டில்லரி பிரிவைச்சேர்ந்த லெப்டினன்ட் எட்வர்ட் டாசன் என்பவரது நினைவாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.1983ம் ஆண்டு எலிசபெத் மஹாராணி இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்தபோது இது சர்வதேச கவனிப்பையும் பெற்றது.

இந்திய மண்ணில் ஐரோப்பிய கலையம்சத்துக்கு சான்றாக வீற்றிருக்கும் இந்த தேவாலயம் ஆன்மிக அம்சத்துக்காக மட்டுமல்லாமல் வரலாற்றுப்பழமை மற்றும் கட்டிடக்கலை அம்சம் போன்றவற்றுக்காகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதராபாத் விஜயத்தின்போது பயணிகள் தவறாமல் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்வது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Jun,Fri
Check Out
13 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat