இந்த உஜ்ஜைனி மஹாகாளி கோயில் ஹைதராபாத் நகரத்தில் செகந்தராபாத் பகுதியில் உள்ளது. இது 200 வருட பழமையை உடையதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோயில் தெய்வத்தை வழிபட வருகை தருகின்றனர்.
சக்தியின் ரூபமான மஹாகாளிதேவிக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் செய்விக்கப்படும் ஆஷாட ஜாத்ரா எனும் திருவிழாச்சடங்கின்போது இக்கோயிலில் பக்தர் கூட்டம் மற்றும் பூஜை செயல்பாடுகள் அதிகமாக இருக்கும்.
இந்த இரண்டு நாட்களும் மஹாகாளியை துதிப்பதற்கு ஏற்ற தினங்களாக ஐதீகமாக நம்பப்படுகிறது. பொதுவாக இந்த திருவிழா ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் பகுதியில் மட்டுமெ கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இது தவிர, பொனலு எனப்படும் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. அருளை வழங்கி உலக நன்மையை காக்கும் காளிதேவிக்கு நன்றி செலுத்தி வணங்க இந்த மாதங்கள் உகந்தவையாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications