பள்ளிப்புரத்து காவு, கோட்டயம்

கோட்டயத்தின் தெற்குப்பகுதியிலுள்ள கொடிமத்தா எனும் இடத்தில் இந்த பள்ளிப்புரத்து காவு எனும் கோயில் அமைந்துள்ளது. பத்திரகாளிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் ஐத்திய மாலா எனும் இலக்கியம்ம் படைத்த ‘கொட்டாரத்தில் சங்குண்ணி’ என்பவரின் வம்சத்துக்கு சொந்தமானதாகும்.

விஷு மற்றும் பத்தாமுடையம் ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தீயாட்டு எனும் சடங்கு உற்சவமும் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது.

தீயாட்டு சடங்கை மேற்கொள்வதன் மூலம் பக்தர்கள் தங்கள் குடும்பத்தாரை காக்குமாறு பத்ர காளியிடம் வேண்டிக்கொள்கின்றனர். நோயில்லாத வாழ்க்கைக்காக இந்த தெய்வத்திடம் பக்தர்கள் கோரிக்கை வைத்து வணங்குவது வழக்கமாக உள்ளது.

Please Wait while comments are loading...