சரஸ்வதி கோயில், கோட்டயம்

கேரளாவில் சரஸ்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கோயிலாக இந்த சரஸ்வதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. சிங்கவனம் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோயில் தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி, கீழேப்புரம் நம்பூதிரி என்பவர் இந்த கோயிலின் தெய்வச்சிலையை கண்டறிந்து கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

மேற்கு நோக்கியதாக மற்றொரு சிலையையும் அவர் எழுப்பியுள்ளார். எந்த தோற்றத்தையும் கொண்டிராத இந்த மேற்கு நோக்கிய சிலையே பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிலையின் அருகில் ஒரு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும், பணத்தி குத்து செடி எனும் ஒரு அற்புத மூலிகைச்செடி இங்குள்ள கிழக்கு நோக்கிய சிலைக்கருகில் காணப்படுகிறது.

எப்போதும் வாடாமல் காட்சியளிக்கும் இந்த அதிசயச்செடியை தொடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை. நவராத்திரி பண்டிகை இந்த சரஸ்வதி கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலை 5.30 மணி முதல் 11.30 வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் இக்கோயில் திறக்கப்படுகிறது.

Please Wait while comments are loading...