Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரு to ஓசூர் மெட்ரோ ரயில் சேவை - மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்பு!

பெங்களூரு to ஓசூர் மெட்ரோ ரயில் சேவை - மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்பு!

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு மாநிலங்களுக்கிடையேயான முதன் முதல் மெட்ரோ சேவை பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இரு மாநில எல்லைகளிலும் வசிக்கும் மக்கள் பலரும் வேலை நிமித்தமாக இரு நகரங்களுக்கும் தினமும் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பெங்களூர் மற்றும் ஓசூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படவிருக்கிறது!

இரு மாநிலங்களுக்கிடையேயான மெட்ரோ சேவை

தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கிடையிலான மெட்ரோ ரயில் சேவையை துவங்கவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) டெண்டரை வெளியிட்டது. ஓசூரை எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகில் உள்ள பொம்மைசந்திராவுடன் இணைக்கும் மாஸ் ரேபிட் டிரான்ஸிட்டை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுவுகளை ஆய்வு செய்யும் விதமாக இந்த டெண்டர் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

பற்பல பெரிய மற்றும் சிறிய கம்பெனிகளை உள்ளடக்கிய ஓசூர்

தொழில்துறை மையமான ஓசூரில் அசோக் லேலண்ட், டைட்டன் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ், டென்னகோ ஆட்டோமோடிவ் போன்ற நிறுவனங்களும், 2,000க்கும் மேற்பட்ட MSMEகளும் உள்ளன. இந்த கம்பெனிகளில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இதனால் அனைவரும் பயன்பெறும் வகையில் பெங்களூரு மெட்ரோ ரயிலை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் மக்கள்

தற்போது, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பயணம் செய்கின்றனர், முக்கியமாக நெரிசலான பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், பல வல்லுநர்கள், பெங்களூரு மற்றும் ஓசூரை இணைக்கும் ஒரு மெட்ரோ ரயிலைக் காட்டிலும் ஒரு புறநகர் ரயில் மிகவும் சாத்தியமானதாக இருக்கும் என்று வாதிடுகின்றனர்.

ஓசூர் to பெங்களுரு மெட்ரோ சேவை

எனினும், புறநகர் ரயிலை விட மெட்ரோ ரயிலே சிறந்த தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டம் இப்போது வேகம் பெற்றுள்ளது. இந்த முன்னோடி முயற்சியானது தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டத்தைக் குறிக்கிறது, இது இரு மாநிலங்களுக்கிடையில் மேம்பட்ட இணைப்புக்கான வாக்குறுதியைக் கொண்டுவருகிறது.

2

மேம்பாட்டிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு உதவும்

புதிய முன்மொழியப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் 20.5 கிமீ தூரம் வரை விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 11.5 கிமீ மெட்ரோ நெட்வொர்க் கர்நாடகாவில் அமைந்துள்ளது மற்றும் மீதமுள்ள 8.8 கிமீ தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூர் நகரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விரைவில் பணிகள் துவக்கம்

விரிவான சாத்தியக்கூறு ஆய்வானது, பொருத்தமான ரயில் வகைகளைத் தேர்ந்தெடுப்பது, முன்மொழியப்பட்ட பாதையில் மதிப்பிடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவை மதிப்பீடு செய்தல் மற்றும் வெவ்வேறு நிலையங்கள் அமைந்துள்ள சாத்தியமான பகுதிகள் போன்ற பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும். கூடிய விரைவில் திட்ட அறிக்கை தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+