Search
  • Follow NativePlanet
Share

பூஞ்ச் - புராணம் மற்றும் வரலாற்றுத் தடங்கள் பதிந்த பூமி!

27

'மினி காஷ்மீர்' என அழைக்கப்படும் பூஞ்ச் , ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. அழகான இயற்கைக்கு மத்தியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று பக்கங்களிலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது.

பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த பூஞ்ச் , பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஹியுன் சுவாங்க் என்ற புகழ்பெற்ற சீன பயணி 6 வது நூற்றாண்டின் போது பூஞ்ச் மூலம் கடந்து சென்றார். பின்னர்,  இந்த இடம்  குதிரைகள், கிராபிக்ஸ், மற்றும் மஸ்லூம் என்று சிறந்த‌ தேயிலைக்குப் பிரபலம் என்று அவர் எழுதினார்.

கி.பி. 850-ன் போது, திரு.நர் என்ற ஒரு குதிரை வியாபாரி, பூஞ்ச்சை ஆட்சி புரிந்தார். பின்னர் 1596 கி.பி.யில், முகலாய பேரரசர் ஜஹாங்கீர், சிராஜ்-உத்-தின் என்ற மன்னரை பூஞ்சின் மன்னராக நியமித்தார்.

அதன் பிறகு 1798 கி.பி.யின் போது, ரோஹ்-உல்லாஹ்-சங்கு எனும் ஒரு குஜ்ஜார் தலைவர் முழுப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

வரலாற்று நினைவு சின்னங்கள், மத மையங்கள் மற்றும் அழகான நீர் வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், சிகரங்களையும், மற்றும் ஏரிகள் உட்பட இந்த மாவட்டத்தில் பல இடங்கள் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் உள்ளன.

பூஞ்ச் கோட்டை, இந்த‌ மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல வரலாற்று கட்டிடங்களில் ஒன்றாகும். இது பூஞ்ச் பேரரசர் ராஜா ரஸ்தம் சிங் என்பவரால் 1713 ல், மொகலாயர்கள் பாணி கட்டமைப்பில் கட்டப்பட்டது.

நூரி சாம்ப்,  பூஞ்சில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான சுற்றுலா ஸ்தல‌ம் ஆகும். இந்த இடத்தை கடந்து சென்ற முகலாய மன்னர் ஜஹாங்கீர் அதன் அழகுக்கு ஈர்க்கப்பட்டு, தனது அழகான மனைவி நூர் ஜஹானின் பெயரை வைத்தார் என்று கூறப்படுகிறது. ராணிகள் நீராடிய ஒரு அழகிய நீர் வீழ்ச்சி இங்கு உள்ளது.

பூஞ்சில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையம், குருத்வாரா நங்கலி சாஹிப். இது சீக்கியர்களின் புனிதமான சமய மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த குருத்வாரா 1803 ல் தாகூர் பாய் மேளா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இதன் கட்டடம் 1947ல் எரிந்து போனது. ஆனால் அப்போது தலைவராக இருந்த மஹந்த் பச்சிட்டர் சிங் என்பவரால் இது புதுப்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைக்கும் மற்றும் சீக்கிய திருவிழாவிற்கும் வருகின்றனர். பைசாகி பண்டிகை கேளிக்கையுடனும் உற்சாகத்துடனும் இங்கு கொண்டாடப்படுகிறது.

பூஞ்சில் உள்ள மற்றொரு பிரபலமான மத தளம் சுவாமி  புத்த அமர்நாத் ஜி மந்திர். இது இந்து மதக் கட‌வுள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பூஞ்சில் இருந்து 25 கி.மீ. தொலைவில், இந்த கோவில் பிர் பஞ்ச‌ல் மலைத்தொடர்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் நான்கு கதவுகள், இந்துக்களின் நான்கு சாதிகளுக்கும் திறந்த அடையாளமாக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, என்று ஒவ்வொரு திசையை நோக்க்கியுள்ளன.

ஸ்ரீ தஷ்னாமி மந்திர், ராம் மந்திர், சியாரட் சோடே ஷா சாஹிப், சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப்சியாரட் செயின் மிரான் சாஹிப் ஆகியவை இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பிற மத ஸ்தலங்கள்.

கிர்கன் தோக் என்ற ஏழு ஏரிகள் கொண்ட பள்ளத்தாக்கு இந்த‌ இடத்தில் உள்ள மற்றொரு முக்கிய ஈர்ப்பு . இந்த பள்ளத்தாக்கில் உள்ள‌ ஏழு ஏரிகள் கும்சாகர், கல்டாக்னிசர், நந்தன்சர், பக்சர், நீல்சர், கடோரசர், மற்றும் சுக்சர்.

1 மைல்  நீளம் மற்றும்  அரை மைல் அகலம் கொண்ட நந்தன்சர் ஏரியே இவற்றில்  மிகப்பெரியது. பெஹ்ராம்கலா, நந்தி ஷூல், சுரன்கோட், மண்டி, டெஹ்ராவில்-கலி, மற்றும் லோகன் பூஞ்ச் பகுதியில் அமைந்துள்ள பிற பிரபல சுற்றுலா ஸ்தலங்கள்.

சுற்றுலா பயணிகள் எளிதான போக்குவரத்து மூலம் பூஞ்சை அடைய முடியும். பூஞ்ச் அருகில் உள்நாட்டு விமான தளம் ஜம்மு விமான நிலையத்தில் உள்ளது.

234 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் கோவா, மும்பை, ஸ்ரீநகர், தில்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், மற்றும் லே போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தில்லி விமான நிலையம் நெருக்கமான சர்வதேச விமான நிலையம்.

பூஞ்ச் அருகிலுள்ள ரயில்முனை ஜம்மு தாவி ரயில் நிலையம் ஆகும். ஜம்முவில் இருந்து பூஞ்சிற்கு மலிவான மற்றும் வசதியான பேருந்துகள் கிடைக்கின்றன.

பூஞ்ச் பகுதியில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப லேசான காலநிலை உள்ளதால் எந்த நேரத்திலும் இந்த இடத்திற்கு வரலாம். எனினும், அக்டோபர் மற்றும் நவம்பர் இடையேயான‌ காலம் இந்த இடத்தைப் பார்க்க சிறந்த பருவமாக கருதப்படுகின்றது.

பூஞ்ச் சிறப்பு

பூஞ்ச் வானிலை

சிறந்த காலநிலை பூஞ்ச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பூஞ்ச்

  • சாலை வழியாக
    ஜம்முவில் இருந்து பூஞ்சிற்கு ​பேருந்துகள் கிடைக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் ஜே & கே மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் கூட பூஞ்சிற்கு வர முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜம்மு தாவி ரயில் நிலையம் பூஞ்சிற்கு ​​நெருங்கிய இரயில் இணைப்பு. இது சென்னை, ஹவுரா, பெங்களூர், தில்லி, மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய இந்திய இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்து டாக்சிகள் பெற முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சத்வாரி எனப்படும் ஜம்மு விமான நிலையம் பூஞ்சில் இருந்து 234 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிக நெருங்கிய‌ உள்நாட்டு விமான நிலையம். இது மும்பை, கோவா, ஜெய்ப்பூர், லாக் தில்லி, சண்டிகர், மற்றும் ஸ்ரீநகர் என இந்தியாவின் முக்கிய இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து பூஞ்சை ​​அடைய டாக்சிகள் உள்ளன‌. தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் சர்வதேச பயணிகளை இணைக்கும் விமான நிலையமாக‌ உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed