Search
  • Follow NativePlanet
Share

ராஜோவ்ரி - உள்ளம் கொள்ளை போகுதே!

5

ஜம்மு காஷ்மீரின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ராஜோவ்ரி மாவட்டமாகும். 1968 வரை பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இவ்விடம், அதன் பிறகு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கி.பி.1194 முதல் 1846-ம் ஆண்டு வரை இந்த மாவட்டத்தை ஜரால் வம்சத்தினர் ஆண்டு வந்தனர். ஜரால் வம்சத்தினரால் கோட்டைகளும், மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தின் கட்டிடக்கலை பாணியின் அடையாளமாக அவை இன்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன.

கண்கவரும் வகையில் பல்வேறு இடங்களைப் கொண்டுள்ள ராஜோவ்ரியில் மிகவும் பிரபலமான பார்வையிடங்களாக பாஞ்ச் பீர் மற்றும் லால் பாவ்லி ஆகிய இடங்கள் உள்ளன.

ராஜோவ்ரி சுற்றுலா வர திட்டமிடும் பயணிகள் ஐந்து சகோதரர்களும், அவர்களுடைய சகோதரியும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அழகிய நினைவிடமான பாஞ்ச் பீருக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என எண்ணற்ற மனிதர்கள் வந்து செல்லும் புனித இடமாக இது இருக்கிறது. ராஜோவ்ரி மாவட்டத்தின் மற்றுமொரு முக்கிய பார்வையிடமாக இளவேனில் தண்ணீர் ஏரியான லால் பாவ்லி உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு வகை மீன்களை சுற்றுலா பயணிகள் காண முடியும்.

அழகிய ஏரிகளுக்காக புகழ் பெற்றிருக்கும் இம்மாவட்டத்தில் கடோரி சார், சாமர் சார், தியா சார், சமோட் சார், கும் சார், பாக் சார் மற்றும் அகல் தர்ஷினி ஆகிய ஏரிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

துன்னாமன்டி சாராய், மங்ளாதேவி கோட்டை, முராத்பூர் சாராய் மற்றும் மசூதி,நாத்பூர் சாராய் மற்றும் நவோகாஸி ஸியாரத் ஆகியவை ராஜோவ்ரியின் பிற முதன்மையான சுற்றுலாதலங்களாகும்.

இந்த பகுதியை பாகிஸ்தானிடமிருந்து காக்கும் பொருட்டு உயிரிழந்த சாதாரண மக்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் முக்கிய நினைவிடங்களாக உஸ்மான் நினைவிடம் மற்றும் பாலிடான் பவன் ஆகியவற்றை சொல்லலாம்.

சுற்றுலாப் பயணிகள் ராஜோவ்ரிக்கு விமானம், இரயில் மற்றும் சாலை என எந்த வகை போக்குவரத்தையும் பயன்படுத்தி வந்து சேர முடியும். ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜுன் மாதம் முடிய நீடித்திருக்கும் கோடைகாலம் ராஜோவ்ரிக்கு வர சிறந்த பருவமாகும்.

ஜில்லென்றிருக்கும் குளிர்காலத்திலும் கூட சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ராஜோவ்ரிக்கு குளிர்காலங்களிலும் வரலாம்.

ராஜோவ்ரி சிறப்பு

ராஜோவ்ரி வானிலை

சிறந்த காலநிலை ராஜோவ்ரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ராஜோவ்ரி

  • சாலை வழியாக
    ராஜோவ்ரி நகரத்தை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் பேருந்துகளின் வழியாகவும் ராஜோவ்ரி நகரத்தை அடைய முடியும். எனினும் ராஜோவ்ரி செல்ல நேரடி பேருந்து வசதிகள் கிடையாது. புது டெல்லி, அமிர்தசரஸ், லூதியானா, சண்டிகர் மற்றும் சிம்லா போன்ற இடங்களிலிருந்து ஜம்முவிற்கு தொடர்ச்சியான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே ஜம்முவிற்கு வந்து அங்கிருந்து மற்றொரு பேருந்து வழியாக ராஜோவ்ரி நகரத்தை நீங்கள் அடைந்து விட முடியும். ஜம்முவில் இருந்து ரூ.100/- முதல் ரூ.150/- வரை பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    150 கிமீ தொலைவில் உள்ள ஜம்மு தாவி இரயில் நிலையம் தான் ராஜோவ்ரிக்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். மும்பை, புது டெல்லி, புனே மற்றும திருவனந்தபுரம் போன்ற முக்கியமான பிற இந்திய நகரங்களுடன் இந்த இரயில் நிலையம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு தாவி இரயில் நிலையத்திற்கு வந்த பின்னர், சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக ராஜோவ்ரியை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    151 கிமீ தொலைவில் இருக்கும் ஜம்மு விமான நிலையம் தான் ராஜோவ்ரி மாவட்டத்திற்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் பிற முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை மற்றும் ஸ்ரீ நகருடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ள இடமாகும். மேலும் இந்த விமான நிலையத்திலிருந்து ராஜோவ்ரிக்கு செல்ல பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் எளிதில் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue