ரிஷிகேஷில் இருந்து ஏறத்தாழ 6கிமீ தொலைவில் இருக்கும் ராஜாஜி தேசியப் பூங்கா 820.42சதுர அடி நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. 1983ல் கட்டப்பட்ட இந்த பூங்காவில் மோடிசூர், சில்லா மற்றும் ராஜாஜி சரணாலயம் என மொத்தம் மூன்று சரணாலயங்கள் அமைந்துள்ளன. புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டவீரரும், தலைவருமான திரு.சி.ராஜகோபாலாச்சாரியின் நினைவாக இப்பூங்கா பெயரிடப்பட்டுள்ளது.
இப்பூங்காவின் வழியாக பாயும் கங்கை நதி ஏறத்தாழ 24கிமீ வரையில் ஓடுகிறது. சால், வெஸ்டர்ன் கேஞ்சடிக் மாயிஸ்ட், நார்தன் ட்ரை டெசிடுயஸ் மரங்கள் மற்றும் காய்ர் சிஸ்சூ மரங்களால் இப்பூங்கா சூழப்பட்டுள்ளது.
னொவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் ஜூன்15 வரை இப்பூங்கா சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. அழகிய குன்றுகளின் இயற்கை காட்சிகளையும், பச்சைப் பசேலேன்ற பள்ளத்தாக்குகளையும், ஆற்றுப்படுகைகளையும் இப்பூங்காவில் 34கிமீ வரை நீளும் வன சவாரியின் போது பயணிகள் கண்டுகளிக்கலாம்.



Click it and Unblock the Notifications